ஹதீஸ்கள்
#2263
ஸஹீஹ் அல்-புகாரீ - Hiring
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் சென்றபோது) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ‘பனுத் தீல்’ குலத்தைச் சேர்ந்தவரும் பின்னர் பனூ அப்தி பின் அதீ குலத்தைச் சேர்ந்தவருமான ஒரு மனிதரை பயண வழிகாட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் திறமையான வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலின் குடும்பத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பித் தம்முடைய இரு ஊர்தி ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று இரவுகள் கழித்து ‘ஸவ்ர்’ குகைக்கு வந்து சேருமாறு வாக்குறுதி வாங்கியிருந்தார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் அவ்விருவரின் ஊர்தி ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் (அபூபக்ரின் முன்னாள் அடிமையான) ஆமிர் பின் ஃபுஹைரா என்பாரும் சேர்ந்துகொண்டார். ‘பனுத் தீல்’ கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற் கரை வழியாக அழைத்துச் சென்றார். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها واستاجر النبي صلى الله عليه وسلم وابو بكر رجلا من بني الديل ثم من بني عبد بن عدي هاديا خريتا الخريت الماهر بالهداية قد غمس يمين حلف في ال العاص بن وايل، وهو على دين كفار قريش، فامناه فدفعا اليه راحلتيهما، ووعداه غار ثور بعد ثلاث ليال، فاتاهما براحلتيهما، صبيحة ليال ثلاث، فارتحلا، وانطلق معهما عامر بن فهيرة، والدليل الديلي فاخذ بهم اسفل مكة وهو طريق الساحل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hiring
- Hadith Index
- #2263
- Book Index
- 4
Grades
- -
