ஹதீஸ்கள்
#2275
ஸஹீஹ் அல்-புகாரீ - Hiring
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரும்பு வேலை தெரிந்த) கொல்லனாக இருந்தேன்; (இணை வைப்பாளரான)ஆஸ் பின் வாயில் என்பவரிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவரிடம் தேங்கிவிட்டது; அதை கேட்பதற்காக அவரிடம் நான் சென்றபோது அவர், ‘‘நீர் முஹம்மதை நிராகரிக்காமல் இருக்கும் வரை உமக்குரியதை நான் தரமாட்டேன்” என்றார். நான், ‘‘நீ செத்து, பிறகு (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை அல்லாஹ்வின் மீதாணையாக அது நடக்காது” என்றேன். ‘‘நான் செத்து, திரும்ப (உயிருடன்) எழுப்பப்படுவேனா?” என்று அவர் கேட்டார். நான், ‘‘ஆம்!” என்றேன். அதற்கு அவர், ‘‘அப்படியானால் அங்கே எனக்குப் பொருட்செல்வமும் மக்கட் செல்வமும் கிடைக்கும். அப்போது உமக்குரியதைத் தந்துவிடுகிறேன்” என்றார். அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துவிட்டு, (மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் வழங்கப்படுவேன் என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா!” (19:77) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، عن مسلم، عن مسروق، حدثنا خباب، قال كنت رجلا قينا فعملت للعاص بن وايل فاجتمع لي عنده فاتيته اتقاضاه فقال لا والله لا اقضيك حتى تكفر بمحمد. فقلت اما والله حتى تموت ثم تبعث فلا. قال واني لميت ثم مبعوث قلت نعم. قال فانه سيكون لي ثم مال وولد فاقضيك. فانزل الله تعالى {افرايت الذي كفر باياتنا وقال لاوتين مالا وولدا}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hiring
- Hadith Index
- #2275
- Book Index
- 15
Grades
- -
