ஹதீஸ்கள்
#2272
ஸஹீஹ் அல்-புகாரீ - Hiring
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர்; இறுதியில் (மலையில் இருந்த) குகையொன் றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர்; அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டுவந்து குகையை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள், ‘‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் உங்களை இந்தப் பாறை’லிருந்து காப்பாற்றாது” என்று தமக்குள் கூறிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்குமுன் என் குடும்பத்தாருக்கோ பணியாளர்களுக்கோ பால் கொடுப்பதில்லை. ஒரு நாள் ஒன்றைத் தேடி தொலை தூரத்துக்குச் சென்றதால், என் தாயும் தந்தையும் உறங்கிய பிறகே நான் திரும்ப முடிந்தது. அவர்களுக்காக நான் பால் கறந்து வந்தபோது, அவ்விரு வரும் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்குமுன், என் குடும்பத்தாருக்கோ என் அடிமை களுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பவில்லை. எனவே, அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து கைகளில் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு காத்திருந் தேன். வைகறை நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் அவர்கள் விழித்தார்கள்; பின்னர் தமக்குரிய பாலை (வாங்கி) அருந்தினர். இறைவா! நான் இதை உனது அன்பை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” எனப் பிரார்த்தித்தார். உடனே பாறை சற்று விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற இயலவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மனிதர்களிலேயே மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது, (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைய அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நூற்று இருபது பொற்காசுகளை அவளுக்கு நான் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று அவள் கூறி விட்டாள். உடனே அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மனிதர்களிலேயே மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளை விட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாயணத்தை (அவளிடமே) விட்டு விட்டேன். இறைவா! உனது அன்பை நாடி இதை நான் செய்திருந்தால், நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே பாறை (சற்று) விலகியது; ஆயினும், அவர்களால் வெளியேற முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்றாமவர், ‘‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி, அவர்களது கூலியையும் கொடுத்தேன். ஆனால், (அவர்களில்) ஒரே ஒருவர் மட்டும் தமது கூலியை (வாங்காமல்) விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை நான் முதலீடு செய்து, அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப்பின் அவர் என்னிடம் வந்தார். ‘‘அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை எனக்குக் கொடுப்பீராக!” என்று அவர் கூறினார். ‘‘நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உமது கூலியிலிருந்து கிடைத்தவைதான்” என்று நான் கூறினேன். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்!” என்றார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை” என்று நான் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்துக்கொண்டு ஓட்டிச் சென்றுவிட்டார். இறைவா! இதை நான் உனது அன்பை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” எனப் பிரார்த்தித்தார். உடனே பாறை முழுமையாக விலகியது. அவர்கள் வெளியேறிச் சென்றனர். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hiring
- Hadith Index
- #2272
- Book Index
- 12
Grades
- -