ஹதீஸ்கள்
#2271
ஸஹீஹ் அல்-புகாரீ - Hiring
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலையானது, குறிப்பிட்ட கூலிக்கு, ஒருநாள் முழுக்க இரவுவரை தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது. (அவர் முதலில் ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, ‘‘நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை; (இதுவரை) நாங்கள் செய்த வேலை வீண்தான்” எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், ‘‘இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து (வேலையை) விட்டுவிட்டனர். அவர்களுக்குப்பின், வேறுசிலரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், ‘‘இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள்; அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அவர்கள் அஸ்ர் (மாலை) தொழுகை வரை வேலை செய்துவிட்டு, ‘‘உமக்காக நாங்கள் செய்த வேலை வீண்தான். எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக்கொள்ளும்!’ என்றனர். அவர் ‘‘உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது” என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்துவிட்டனர். பிறகு அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும்வரை எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு கூட்டத்தாரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றுக் கொண்டனர். இதுதான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுக்கொண்ட (இஸ்லாம் என்ற) ஒளிக்கும் உவமையாகும்.8 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " مثل المسلمين واليهود والنصارى كمثل رجل استاجر قوما يعملون له عملا يوما الى الليل على اجر معلوم، فعملوا له الى نصف النهار فقالوا لا حاجة لنا الى اجرك الذي شرطت لنا، وما عملنا باطل، فقال لهم لا تفعلوا اكملوا بقية عملكم، وخذوا اجركم كاملا، فابوا وتركوا، واستاجر اجيرين بعدهم فقال لهما اكملا بقية يومكما هذا، ولكما الذي شرطت لهم من الاجر. فعملوا حتى اذا كان حين صلاة العصر قالا لك ما عملنا باطل، ولك الاجر الذي جعلت لنا فيه. فقال لهما اكملا بقية عملكما، فان ما بقي من النهار شىء يسير. فابيا، واستاجر قوما ان يعملوا له بقية يومهم، فعملوا بقية يومهم حتى غابت الشمس، واستكملوا اجر الفريقين كليهما، فذلك مثلهم ومثل ما قبلوا من هذا النور
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hiring
- Hadith Index
- #2271
- Book Index
- 11
Grades
- -
