ஹதீஸ்கள்
#2267
ஸஹீஹ் அல்-புகாரீ - Hiring
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூசா (அலை), களிர் (அலை) ஆகிய) இருவரும் (ஒரு கிராமத்திற்குச்) சென்றார் கள். (அவர்களுக்கு அவ்வூரார் உணவளிக்க மறுத்துவிட்டனர்.) அங்கு ஒரு சுவர் கீழே விழலாமா என யோசித் துக்கொண்டிருந்தது. உடனே (களிர்) தமது கையை உயர்த்தினார். அது நேராக நின்று விட்டது. அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கி யிருக்கலாமே!” என்று கூறினார்கள். இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ‘‘களிர் (அலை) அவர்கள் தமது கையை உயர்த்தினார்கள்” என்று சொன்ன போது, அறிவிப்பாளர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (களிர் (அலை) அவர்களைப் போல) கையை உயர்த்திக் காட்டி, ‘இப்படி’ என்று கூறினார்கள். ‘‘சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘களிர் (அலை) அவர்கள் சுவரைத் தமது கரத்தால் தடவ, அதுநேராக நின்றுவிட்டது’ என்று கூறியதாகவே நான் நினைக்கிறேன்” என்று அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும், சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நீர் விரும்பியிருந்தால் இதற்குக்) கூலி பெற்றிருக்கலாம்; அதை நாம் (நமது உணவுக்குப்) பயன்படுத்தியிருக்கலாம் (என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்). அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني يعلى بن مسلم، وعمرو بن دينار، عن سعيد بن جبير، يزيد احدهما على صاحبه، وغيرهما قال قد سمعته يحدثه عن سعيد قال قال لي ابن عباس رضى الله عنهما حدثني ابى بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم " فانطلقا فوجدا جدارا يريد ان ينقض ". قال سعيد بيده هكذا، ورفع يديه فاستقام، قال يعلى حسبت ان سعيدا قال. فمسحه بيده فاستقام {قال} "لو شيت لاتخذت عليه اجرا ". قال سعيد اجرا ناكله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hiring
- Hadith Index
- #2267
- Book Index
- 7
Grades
- -
