Loading...
Loading...
நூல்கள்
66 ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்-மும் உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.9 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளியுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்களின் துணைவி யரில் ஒருவர் (ஆத்திகா பின்த் ஸைத்) சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழச் செல்வார். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வா...
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தம் தொழுகை அறிவிப் பாளர் (முஅத்தின்) இடம், “(பாங்கில்) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்’ என்று கூறியதும், ‘ஹய்ய அலஸ் ஸலா...
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் வெள்ளிக்கிழமை அன்று தங்கள் குடியிருப்புகளி-ருந்தும் (மதீனா வைச் சுற்றியுள்ள) மேட்டுப் புறக் கிராமங் களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆ தொழுகைக்கு) வந்து...
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் வெள்ளிக்கிழமை குளியல் பற்றிக் கேட்டேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்க...
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாயும் நேரத்தில் ஜுமுஆ தொழுகை தொழுவிப்பார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஜுமுஆ தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விடுவோம். ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது தொழுகையை -அதாவது ஜுமுஆ தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும்போது தொழு கையை -அதாவது ஜுமுஆ தொழு க...
அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜுமுஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ர-) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் ஓடிவராதீர்கள்; நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் அவசரப்படாதீர்கள்.) என்னை நீங்கள் காணாதவரை எழாதீர்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, தம்மால் இயன்ற வரை தூய்மைப் படுத்திக்கொண்டு, பிறகு எண்ணெய்யோ நறுமணமோ பூசிக்கொள்கிறார். பிறகு அவர் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து, (சேர...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம் சகோதரரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து எழுப்பி விட்டு, அந்த இடத்தில் தாம் அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள...
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் வெள்ளிக்கிழமை அன்று இமாம் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததும் முதலாவது பாங்கு சொல்லப்பட்டுவந்தது. உஸ்...
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை அன்று மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத் தியவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களே ஆவார்கள்.- மதீனாவாசி களின் எண்ணிக்கை அதிகமானபோது (இவ்வாறு செய்தார்கள்.)- (...
அபூஉமாமா (அஸ்அத்) பின் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருந்தபோது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்தார். அ...
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை அன்று மற்றொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட் டார்கள்.- பள்ளிவாச-ல் மக்கள் அதிகரித்தபோதே (இவ்வாறு செய்தார்கள்). -(அதற்கு முன்னர்)...
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு), அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு...