ஹதீஸ்கள்
#914
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அபூஉமாமா (அஸ்அத்) பின் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருந்தபோது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்தார். அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறியதும், முஆவியா (ரலி) அவர்களும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று (பதில்) சொன்னார்கள். தொழுகை அறிவிப்பாளர் ‘அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன்) எனக் கூறியதும், ‘நானும் அவ்வாறே கூறுகிறேன்’ (வ அன) என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர் பாங்கு சொல்- முடித்ததும் “மக்களே! தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னபோது இதே இடத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதைப் போன்றே (பாங்கிற்குப் பதில்) சொல்லிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #914
- Book Index
- 38
Grades
- -