ஹதீஸ்கள்
#903
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் வெள்ளிக்கிழமை குளியல் பற்றிக் கேட்டேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்: (நபி (ஸல்) காலத்து) மக்கள் உழைப் பாளிகளாக இருந்தனர். அவர்கள் (வேலைகளில் ஈடுபட்டுவிட்டு) உச்சி சாயும் நேரம் ஜுமுஆ தொழுகைக்காக வரும்போது, அதே கோலத்தில் வந்துவிடு வார்கள். இதனால்தான் அவர்களிடம் “நீங்கள் குளித்திருக்கலாமே!” என்று கூறப்பட்டது. அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا يحيى بن سعيد، انه سال عمرة عن الغسل، يوم الجمعة فقالت قالت عايشة رضى الله عنها كان الناس مهنة انفسهم، وكانوا اذا راحوا الى الجمعة راحوا في هييتهم فقيل لهم لو اغتسلتم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #903
- Book Index
- 27
Grades
- -
