ஹதீஸ்கள்
#910
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, தம்மால் இயன்ற வரை தூய்மைப் படுத்திக்கொண்டு, பிறகு எண்ணெய்யோ நறுமணமோ பூசிக்கொள்கிறார். பிறகு அவர் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து, (சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியுற) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابيه، عن ابن وديعة، عن سلمان الفارسي، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اغتسل يوم الجمعة، وتطهر بما استطاع من طهر، ثم ادهن او مس من طيب، ثم راح فلم يفرق بين اثنين، فصلى ما كتب له، ثم اذا خرج الامام انصت، غفر له ما بينه وبين الجمعة الاخرى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #910
- Book Index
- 34
Grades
- -
