ஹதீஸ்கள்
#907
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜுமுஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ர-) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا الوليد بن مسلم، قال حدثنا يزيد بن ابي مريم، قال حدثنا عباية بن رفاعة، قال ادركني ابو عبس وانا اذهب، الى الجمعة فقال سمعت النبي صلى الله عليه وسلم يقول " من اغبرت قدماه في سبيل الله حرمه الله على النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #907
- Book Index
- 31
Grades
- -
