ஹதீஸ்கள்
#900
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்களின் துணைவி யரில் ஒருவர் (ஆத்திகா பின்த் ஸைத்) சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழச் செல்வார். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு நீங்கள் செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப் படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந் தும் நீங்கள் ஏன் (பள்ளிவாசலுக்குச்) செல்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படியானால், (என்னைப் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாமென்று கூற விடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வ தைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது” என்று பதில் வந்தது. அத்தியாயம் :
حدثنا يوسف بن موسى، حدثنا ابو اسامة، حدثنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال كانت امراة لعمر تشهد صلاة الصبح والعشاء في الجماعة في المسجد، فقيل لها لم تخرجين وقد تعلمين ان عمر يكره ذلك ويغار قالت وما يمنعه ان ينهاني قال يمنعه قول رسول الله صلى الله عليه وسلم " لا تمنعوا اماء الله مساجد الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #900
- Book Index
- 24
Grades
- -
