ஹதீஸ்கள்
#901
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தம் தொழுகை அறிவிப் பாளர் (முஅத்தின்) இடம், “(பாங்கில்) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்’ என்று கூறியதும், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், ‘ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்’ (உங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்று சொன்னார்கள். (இவ்வாறு அவர்கள் கூறியதை) மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என்னைவிட மிகவும் சிறந்த வ(ரான நபி (ஸல்) அவ)ர்கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும்கூட இவ்வாறு தான் செய்தார்கள். களி மண்ணிலும் (வழுக்கும்) சகதியிலும் உங்களை நடக்க விட்டு, உங்களுக்குச் சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை (எனவேதான், வீடுகளிலேயே தொழுதுகொள்ளச் சொன்னேன்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل، قال اخبرني عبد الحميد، صاحب الزيادي قال حدثنا عبد الله بن الحارث ابن عم، محمد بن سيرين قال ابن عباس لموذنه في يوم مطير اذا قلت اشهد ان محمدا رسول الله. فلا تقل حى على الصلاة. قل صلوا في بيوتكم. فكان الناس استنكروا، قال فعله من هو خير مني، ان الجمعة عزمة، واني كرهت ان اخرجكم، فتمشون في الطين والدحض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #901
- Book Index
- 25
Grades
- -
