ஹதீஸ்கள்
#906
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது தொழுகையை -அதாவது ஜுமுஆ தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும்போது தொழு கையை -அதாவது ஜுமுஆ தொழு கையை- வெப்பம் தணிந்தபின் தொழு வார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஜுமுஆ தொழுகை என்ற குறிப்பு இல்லாமல் பொது வாக) ‘தொழுகை’ என்றே இடம்பெற் றுள்ளது. பிஷ்ர் பின் ஸாபித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எங்களுக்கு (ஆட்சித்) தலைர் ஜுமுஆ தொழுவித்தார். (வழக்கம் போல நீண்ட சொற்பொழிவும் நெடு நேரத் தொழுகையும் நடந்தது.) பிறகு அவர் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு லுஹ்ர் தொழுகை தொழுவார்கள்?’ என்று கேட்டார். (அப்போதுதான் மேற்கண்டவாறு அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்)” என்று அபூகல்தா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن ابي بكر المقدمي، قال حدثنا حرمي بن عمارة، قال حدثنا ابو خلدة هو خالد بن دينار قال سمعت انس بن مالك، يقول كان النبي صلى الله عليه وسلم اذا اشتد البرد بكر بالصلاة، واذا اشتد الحر ابرد بالصلاة، يعني الجمعة. قال يونس بن بكير اخبرنا ابو خلدة فقال بالصلاة، ولم يذكر الجمعة. وقال بشر بن ثابت حدثنا ابو خلدة قال صلى بنا امير الجمعة ثم قال لانس رضى الله عنه كيف كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #906
- Book Index
- 30
Grades
- -
