Loading...
Loading...
நூல்கள்
273 ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத சந்திரனைக் காண முடியும் என...
அப்துல்லாஹ் பின் மா-க் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாள...
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (நிதானத்தோடு) முழுமை யாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள். (சஜ்த...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு உறுப்புக்கள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்; ஆடையையோ முடி யையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம். இதை இப்னு அப்பாஸ்...
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவ ரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது...
அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, “எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக் கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக்கொண்டி ருக்கலாமே!” என்ற...
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் தமது கீழாடை சிறியதாக இருந்ததால் அதைத் தம் பிடரிகள்மீது முடிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், “ஆண்கள் அமர்வில் நேராக உட்கார...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; தமது ஆடையோ முடியோ (தரையில் படாத வாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளை யிடப்பட்டார்கள். அத்த...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதென வும் கட்டளையிடப்பட்டுள்ளேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்க...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110:3ஆவது வசனத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழு கையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும்...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கு இடையில் அவர்கள் அமர்வது ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று நான் உங்களுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன்” என்று கூறினார்கள்....
நபி (ஸல்) அவர்கள் கூறினாôர்கள்: சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் யாரும், நாய் பரப்பிவைப்பதைப் போன்று தம் கைகளைப் பரப்பி வைக்க வேண்டாம். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமது தொழு கையின் ஒற்றைப்படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழமாட்டார்க...
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ...
சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது த...
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள...