Loading...

Loading...
நூல்கள்
௩௦௯ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (ஒருவரை) இறைவழியில் (போரிட) குதிரையொன்றில் ஏற்றி அனுப்பினார்கள்; பிறகு அக்குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டார்கள். அதை விலைக்கு வாங்க விரும்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (விளக்கம்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان عمر بن الخطاب، حمل على فرس في سبيل الله فوجده يباع، فاراد ان يبتاعه، فسال رسول الله صلى الله عليه وسلم فقال " لا تبتعه، ولا تعد في صدقتك
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒருவரை இறைவழியில் (போர் புரிவதற்காக) குதிரையின் மீது ஏற்றி அனுப்பினேன். அந்தக் குதிரையை வைத்திருந்தவர் அதை விற்றுவிட்டார் லிஅல்லது பாழாக்கிவிட்டார்லி அதை நான் விலைக்கு வாங்கிக்கொள்ள விரும்பினேன். அதை அவர் மலிவான விலைக்கு விற்று விடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா என்று) கேட்டேன். அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள்; அது ஒரு திர்ஹமுக்குக் கிடைப்பதாயிருந்தாலும் சரி! ஏனெனில், தமது அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், தனது வாந்தியைத் தானே திரும்பத் தின்னும் நாயைப் போன்றவன்” என்று கூறினார்கள்.119 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن زيد بن اسلم، عن ابيه، قال سمعت عمر بن الخطاب رضى الله عنه يقول حملت على فرس في سبيل الله فابتاعه او فاضاعه الذي كان عنده، فاردت ان اشتريه، وظننت انه بايعه برخص، فسالت النبي صلى الله عليه وسلم فقال " لا تشتره وان بدرهم، فان العايد في هبته كالكلب يعود في قييه
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்துகொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘ஆம் (உயிருடன் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அவ்விருவருக்காக உழைப்பீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا حبيب بن ابي ثابت، قال سمعت ابا العباس الشاعر وكان لا يتهم في حديثه قال سمعت عبد الله بن عمرو رضى الله عنهما يقول جاء رجل الى النبي صلى الله عليه وسلم فاستاذنه في الجهاد فقال " احى والداك ". قال نعم. قال " ففيهما فجاهد
அபூபஷீர் கைஸ் பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர் களுடன் இருந்தேன். லிமக்கள் இரவில் தாங்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர் கூறியதாகவே நான் எண்ணுகிறேன் என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் நாணால் ஆன மாலையோ வேறு மாலைகளோ இருந்தால், அவை துண்டிக்கப்படாமல் இருக்கலாகாது” என்று (பொதுமக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.120 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن عبد الله بن ابي بكر، عن عباد بن تميم، ان ابا بشير الانصاري رضى الله عنه اخبره انه، كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض اسفاره قال عبد الله حسبت انه قال والناس في مبيتهم، فارسل رسول الله صلى الله عليه وسلم رسولا ان لا يبقين في رقبة بعير قلادة من وتر او قلادة الا قطعت
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஓர் ஆண் ஒரு (அந்நியப்) பெண்ணு டன் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவருடனேயேயன்றி பயணம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன அறப் போரில் கலந்துகொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துகொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ போய் உன் மனைவி யுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.121 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عمرو، عن ابي معبد، عن ابن عباس رضى الله عنهما انه سمع النبي صلى الله عليه وسلم يقول " لا يخلون رجل بامراة، ولا تسافرن امراة الا ومعها محرم ". فقام رجل فقال يا رسول الله، اكتتبت في غزوة كذا وكذا، وخرجت امراتي حاجة. قال " اذهب فحج مع امراتك
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) ஆகியோரையும், ‘‘நீங்கள் யிரவ்ளத்து காக்’ எனுமிடம்122 வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. இறுதியில், நாங்கள் யிரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘‘கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், ‘‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனை’)ட வேண்டியதிருக்கும்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போர் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (போர்த்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப் பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்க வில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்பவ னாக இருந்துவந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களு டைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். எனக்கு அவர்களி டையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் பிரதியாக அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக்கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் இறைமறுப்பாலோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் பத்ர் போரில் கலந்துகொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். ‘‘என்ன (பலமான) அறிவிப்பாளர்தொடர் இது!” என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர்தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (வியந்து) கூறினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டுவரப் பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களும் (கைதி யாகக்) கொண்டுவரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந் தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு மேலங்கி யைத் தேடினார்கள். அப்போது (நயவஞ்ச கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் மேலங்கி அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப் பதை மக்கள் கண்டார்கள். அதையே அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அணிவித் தார்கள். இதனால்தான், அப்துல்லாஹ் பின் உபை (இறந்த பின்பு அவரு)க்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியைக் கழற்றி அணிவித்தார்கள். ‘‘அப்துல்லாஹ் பின் உபை, நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் கை கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا ابن عيينة، عن عمرو، سمع جابر بن عبد الله رضى الله عنهما قال لما كان يوم بدر اتي باسارى، واتي بالعباس ولم يكن عليه ثوب، فنظر النبي صلى الله عليه وسلم له قميصا فوجدوا قميص عبد الله بن ابى يقدر عليه، فكساه النبي صلى الله عليه وسلم اياه، فلذلك نزع النبي صلى الله عليه وسلم قميصه الذي البسه. قال ابن عيينة كانت له عند النبي صلى الله عليه وسلم يد فاحب ان يكافيه
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நாளை நான் ஒரு மனிதரிடம் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைக் கொடுப்பேன். அவருடைய கரங்களில் அல்லாஹ் வெற்றி அளிப்பான். அவர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவன் தூதரும் நேசிக்கிறார்கள்” என்று சொன்னார்கள். அந்தக் கொடி தம்மில் யாரிடம் தரப் படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவைக் கழித்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களாக வந்தனர். அப்போது ‘‘அலீ எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘அலீ அவர்களுக்குக் கண் வலி” என்று சொல்லப்பட்டது. ஆகவே, (அலீ அவர்களை அழைத்து வரச்செய்து) நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரு கண்களிலும் தமது எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். உடனே அலீ அவர்கள் (அதற்குமுன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி)அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘‘அவர்கள் நம்மைப் போன்று (முஸ்லிம் களாக) ஆகும்வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்கள்மீது கடமையாகின்றவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் அல்லாஹ் ஒருவருக்கு நல்வழி அளிப்பதானது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.123 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا يعقوب بن عبد الرحمن بن محمد بن عبد الله بن عبد القاري، عن ابي حازم، قال اخبرني سهل رضى الله عنه يعني ابن سعد قال قال النبي صلى الله عليه وسلم يوم خيبر " لاعطين الراية غدا رجلا يفتح على يديه، يحب الله ورسوله، ويحبه الله ورسوله ". فبات الناس ليلتهم ايهم يعطى فغدوا كلهم يرجوه فقال " اين علي ". فقيل يشتكي عينيه، فبصق في عينيه ودعا له، فبرا كان لم يكن به وجع، فاعطاه فقال اقاتلهم حتى يكونوا مثلنا. فقال " انفذ على رسلك حتى تنزل بساحتهم، ثم ادعهم الى الاسلام، واخبرهم بما يجب عليهم، فوالله لان يهدي الله بك رجلا خير لك من ان يكون لك حمر النعم
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர் களாகச் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப் படைவான்.124 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن محمد بن زياد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " عجب الله من قوم يدخلون الجنة في السلاسل
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மூவருக்கு இரட்டை நன்மைகள் அளிக்கப்படும். அவர்கள்: 1. ஒருவரிடம் அடிமைப் பெண் இருந்தாள். அவளுக்கு அவர் கல்வி கற்பித்தார்; அதையும் செம்மையாகச் செய்தார்; அவளுக்கு ஒழுக்கம் கற்பித்தார். அதையும் செய்மையாகச் செய்தார். பிறகு அவளை (விடுதலை செய்து) தாமே மணமுடித்துக்கொண்டார். அவருக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கும். 2. வேதக்காரர்களில் (ஏக இறையை) நம்பியவர். அவர் (தம்) இறைத்தூதரை நம்பினார்; பிறகு (இறுதித் தூதரான முஹம்மத்) நபி (ஸல்) அவர்களையும் நம்பினார். அவருக்கும் இரட்டை நன்மை கள் கிடைக்கும். 3. இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை. அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் ஹை (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை எனக்கு அறி வித்த) ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘(கட்டணம் ஏதுமின்றி இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதைவிட சின்ன விஷயங்களை அறிந்துகொள்ள சிலர் மதீனாவரைகூட பயணம் சென்றுகொண்டி ருந்தார்கள்” என்று கூறினார்கள்.125 அத்தியாயம் :)
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان بن عيينة، حدثنا صالح بن حى ابو حسن، قال سمعت الشعبي، يقول حدثني ابو بردة، انه سمع اباه، عن النبي صلى الله عليه وسلم قال " ثلاثة يوتون اجرهم مرتين الرجل تكون له الامة فيعلمها فيحسن تعليمها، ويودبها فيحسن ادبها، ثم يعتقها فيتزوجها، فله اجران، ومومن اهل الكتاب الذي كان مومنا، ثم امن بالنبي صلى الله عليه وسلم فله اجران، والعبد الذي يودي حق الله وينصح لسيده ". ثم قال الشعبي واعطيتكها بغير شىء وقد كان الرجل يرحل في اهون منها الى المدينة
ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அப்வா’ அல்லது யிவத்தான்’ எனுமிடத் தில் நபி (ஸல்) அவர்கள் என் அருகில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.126 மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘(பிரத் யேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை” என்று கூற நான் கேட்டிருக் கிறேன். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا الزهري، عن عبيد الله، عن ابن عباس، عن الصعب بن جثامة رضى الله عنهم قال مر بي النبي صلى الله عليه وسلم بالابواء او بودان وسيل عن اهل الدار يبيتون من المشركين، فيصاب من نسايهم وذراريهم قال " هم منهم ". وسمعته يقول " لا حمى الا لله ولرسوله صلى الله عليه وسلم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எதிரிகளுடைய) குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தொடர்பாக ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள், ‘‘அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எமக்கு அறிவித்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வாயிலாக, ‘‘அக்குழந்தை கள் அவர்களின் பெற்றோர்களைச் சேர்ந்தவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, ‘‘அந்தக் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே” என்றுதான் கூறினார்கள். இதை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وعن الزهري، انه سمع عبيد الله، عن ابن عباس، حدثنا الصعب، في الذراري كان عمرو يحدثنا عن ابن شهاب، عن النبي صلى الله عليه وسلم فسمعناه من الزهري، قال اخبرني عبيد الله، عن ابن عباس، عن الصعب، قال " هم منهم " ولم يقل كما قال عمرو " هم من ابايهم
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளை யும் கொல்வதைக் கண்டித்தார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، اخبرنا الليث، عن نافع، ان عبد الله رضى الله عنه اخبره ان امراة وجدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم مقتولة، فانكر رسول الله صلى الله عليه وسلم قتل النساء والصبيان
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، قال قلت لابي اسامة حدثكم عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال وجدت امراة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم، فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களை ஒரு குழுவில் அனுப்பிவைத் தார்கள். அப்போது, ‘‘இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் புறப்பட தயாரானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்னாரையும் இன்னாரையும் எரித்துவிடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. ஆகவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.127 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن بكير، عن سليمان بن يسار، عن ابي هريرة رضى الله عنه انه قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في بعث فقال " ان وجدتم فلانا وفلانا فاحرقوهما بالنار " ثم قال رسول الله صلى الله عليه وسلم حين اردنا الخروج " اني امرتكم ان تحرقوا فلانا وفلانا، وان النار لا يعذب بها الا الله، فان وجدتموهما فاقتلوهما
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள்.128 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘‘நானாக இருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கின்ற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், யிஎவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள் கிறாரோ அவரைக் கொன்றுவிடுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர் களைக் கொன்றுவிட்டிருப்பேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن ايوب، عن عكرمة، ان عليا رضى الله عنه حرق قوما، فبلغ ابن عباس فقال لو كنت انا لم احرقهم، لان النبي صلى الله عليه وسلم قال " لا تعذبوا بعذاب الله ". ولقتلتهم كما قال النبي صلى الله عليه وسلم " من بدل دينه فاقتلوه
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஉக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது.131 அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை” என்று பதிலளித்தார்கள். உடனே (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம்பெற்றுத் தெளிவானார்கள். பின்னர் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்றபின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் அபயக் குரல் எழுப்பியவாறு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் யிஉக்ல்’ குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பிவைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபியவர்கள் துண்டித்தார்கள். பிறகு ஆணிகளைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டுவரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ எனுமிடத்தில் எறிந்துவிட்டார் கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும்வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை. அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடி னார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)132 அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا وهيب، عن ايوب، عن ابي قلابة، عن انس بن مالك رضى الله عنه ان رهطا، من عكل ثمانية قدموا على النبي صلى الله عليه وسلم فاجتووا المدينة فقالوا يا رسول الله، ابغنا رسلا. قال " ما اجد لكم الا ان تلحقوا بالذود ". فانطلقوا فشربوا من ابوالها والبانها حتى صحوا وسمنوا، وقتلوا الراعي، واستاقوا الذود، وكفروا بعد اسلامهم، فاتى الصريخ النبي صلى الله عليه وسلم، فبعث الطلب، فما ترجل النهار حتى اتي بهم، فقطع ايديهم وارجلهم، ثم امر بمسامير فاحميت فكحلهم بها، وطرحهم بالحرة، يستسقون فما يسقون حتى ماتوا. قال ابو قلابة قتلوا وسرقوا وحاربوا الله ورسوله صلى الله عليه وسلم وسعوا في الارض فسادا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘‘ஓர் எறும்பு உம்மைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீர் எரித்துவிட்டீரே!” என்று அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، عن سعيد بن المسيب، وابي، سلمة ان ابا هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " قرصت نملة نبيا من الانبياء، فامر بقرية النمل فاحرقت، فاوحى الله اليه ان قرصتك نملة احرقت امة من الامم تسبح الله
ஜரீர் பின் அப்திலில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) யிதுல்கலஸா’வின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஆலயமாக இருந்தது.133 நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் (சிறந்த) குதிரை வீரர்களாக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களி டம், ‘‘உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப்போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படை வீரர்களுக்கும் வளம் வழங்குமாறு ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن اسماعيل، قال حدثني قيس بن ابي حازم، قال قال لي جرير قال لي رسول الله صلى الله عليه وسلم " الا تريحني من ذي الخلصة ". وكان بيتا في خثعم يسمى كعبة اليمانية قال فانطلقت في خمسين وماية فارس من احمس، وكانوا اصحاب خيل قال وكنت لا اثبت على الخيل، فضرب في صدري حتى رايت اثر اصابعه في صدري وقال " اللهم ثبته واجعله هاديا مهديا ". فانطلق اليها فكسرها وحرقها، ثم بعث الى رسول الله صلى الله عليه وسلم يخبره فقال رسول جرير والذي بعثك بالحق، ما جيتك حتى تركتها كانها جمل اجوف او اجرب. قال فبارك في خيل احمس ورجالها خمس مرات
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.134 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال حرق النبي صلى الله عليه وسلم نخل بني النضير
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا عمرو بن دينار، سمعته منه، مر��ين قال اخبرني حسن بن محمد، قال اخبرني عبيد الله بن ابي رافع، قال سمعت عليا رضى الله عنه يقول بعثني رسول الله صلى الله عليه وسلم انا والزبير والمقداد بن الاسود قال " انطلقوا حتى تاتوا روضة خاخ، فان بها ظعينة ومعها كتاب، فخذوه منها ". فانطلقنا تعادى بنا خيلنا حتى انتهينا الى الروضة، فاذا نحن بالظعينة فقلنا اخرجي الكتاب. فقالت ما معي من كتاب. فقلنا لتخرجن الكتاب او لنلقين الثياب. فاخرجته من عقاصها، فاتينا به رسول الله صلى الله عليه وسلم، فاذا فيه من حاطب بن ابي بلتعة الى اناس من المشركين من اهل مكة، يخبرهم ببعض امر رسول الله صلى الله عليه وسلم، فقال رسول الله صلى الله عليه وسلم " يا حاطب، ما هذا ". قال يا رسول الله، لا تعجل على، اني كنت امرا ملصقا في قريش، ولم اكن من انفسها، وكان من معك من المهاجرين لهم قرابات بمكة، يحمون بها اهليهم واموالهم، فاحببت اذ فاتني ذلك من النسب فيهم ان اتخذ عندهم يدا يحمون بها قرابتي، وما فعلت كفرا ولا ارتدادا ولا رضا بالكفر بعد الاسلام. فقال رسول الله صلى الله عليه وسلم " لقد صدقكم ". قال عمر يا رسول الله دعني اضرب عنق هذا المنافق. قال " انه قد شهد بدرا، وما يدريك لعل الله ان يكون قد اطلع على اهل بدر فقال اعملوا ما شيتم، فقد غفرت لكم ". قال سفيان واى اسناد هذا