Loading...

Loading...
நூல்கள்
௭௬ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்துவிடுகிறேன்” என (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “உமது மேலங்கியை விரிப்பீராக” என்று சொல்ல, உடனே நான் அதை விரித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் கைகளால் (எதையோ அள்ளுவதைப் போன்று சைகை செய்து) அள்ளி(க் கொட்டிவிட்டு), “(நெஞ்சோடு) அணைத்துக் கொள்வீராக” என்றார்கள். உடனே நான் அதை (என் நெஞ்சோடு) அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதையும் மறந்ததே இல்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن ابي بكر ابو مصعب، قال حدثنا محمد بن ابراهيم بن دينار، عن ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قلت يا رسول الله، اني اسمع منك حديثا كثيرا انساه. قال " ابسط رداءك " فبسطته. قال فغرف بيديه ثم قال " ضمه " فضممته فما نسيت شييا بعده. حدثنا ابراهيم بن المنذر قال حدثنا ابن ابي فديك بهذا او قال غرف بيده فيه
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகைப் பைகளை (கல்விகளை) மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பிவிட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால், இந்த உணவுக் குழாய் வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர்பானவை.)27 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني اخي، عن ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة، قال حفظت من رسول الله صلى الله عليه وسلم وعاءين، فاما احدهما فبثثته، واما الاخر فلو بثثته قطع هذا البلعوم
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற் றிய சமயம்) என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, “(மக்களே!) “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا حجاج، قال حدثنا شعبة، قال اخبرني علي بن مدرك، عن ابي زرعة، عن جرير، ان النبي صلى الله عليه وسلم قال له في حجة الوداع " استنصت الناس " فقال " لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(‘களிர்’ (அலை) அவர் களைச் சந்தித்த) மூசா, இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா அல்லர். அவர் வேறொரு மூசா” என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பகாலீ என்பவர் கூறுகிறாரே?’ என்று கேட்டேன்.28 அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறை விரோதியான அவர் பொய்யுரைத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்கள்: (ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே நின்று உரையாற்றியபோது அவர்களிடம், “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் “(நான் அறிந்தவரையில்) நானே மிகவும் அறிந்தவன்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், “(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் “(இல்லை) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று மூசா (அலை) அவர்களுக்கு அறிவித்தான். மூசா (அலை) அவர்கள், “என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?” என்று கேட்டார்கள். அதற்கு, “கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக்கொண்டு (அப்படியே கடலோரமாக நடந்து) செல்லுங்கள். நீங்கள் அம்மீனை எங்கு தொலைத்துவிடுகிறீர்களோ அங்குதான் அவர் இருப்பார்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. அவ்வாறே மூசா (அலை) அவர்கள் (தம்முடன்) தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பவரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்த) ஒரு பாறைக் கருகில் வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர். கூடையிலிருந்த மீன் (உயிராகி) மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது. இது, மூசா (அலை) அவர்களுக் கும் அவர்களுடைய உதவியாளருக்கும் வியப்பாய் அமைந்தது. (மீன் தவறிப் போனதைக் கூற உதவியாளர் மறந்துவிட்டார்.) இந்நிலையில் அன்றைய மீதிப்பொழுதிலும் இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர். மறுநாள் பொழுது விடிந்தபோது, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் “நமது காலைச் சிற்றுண்டியை கொண்டுவாரும். நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்றார்கள். தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும்வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர், “நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே, பார்த்தீர்களா? அங்குதான் நான் அந்த மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன் (அதை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். அவ்விடத்தில் அது, கடலில் செல்ல விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக்கொண்டது)” என்றார். மூசா (அலை) அவர்கள், “நாம் தேடி வந்த இடம் அதுதான்” என்று கூறினார்கள். பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்தபோது அங்கு ‘தம்மை முழுவதுமாக ஓர் துணியால்’ அல்லது ‘தமது ஆடையால்’ தம்மைப் போர்த்தியபடி ஒருமனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு முகமன் (சலாம்) சொல்ல, அம்மனிதர், “உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்?)” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “இஸ்ரவேலர்களின் (இறைத் தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, “உங்களுக்கு (இறைவனால்) கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது. மூசா! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்றார்கள். (முடிவில் மூசா, களிர் ஆகிய) இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால், கடற்கரையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் (தங்களது மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர். அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது (மூசா (அலை) அவர்களிடம்) களிர் (அலை) அவர்கள், “மூசாவே! உமது அறிவும் எனது அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில்தான் உள்ளது” என்று கூறினார்கள். (சற்று நேரம் கழிந்ததும்) களிர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடிப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் “நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமலேயே ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்திவிட்டீர்களே? அதில் உள்ளவர்களை (நீரில்) மூழ்கடிக்கவா?” என்று கேட்டார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், “என்னுடன் உங்களால் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என்று கூறினார்கள். -(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினால் ஆகும்.- (பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து வெளியேறி கடலோரமாக) நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். களிர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் தமது கையால் திருகி தனியே எடுத்துவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், “ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே?” என்று கேட்டார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். -(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(ம்முறை களிர் (அலை) அவர்கள் கூறிய)து, முதல் முறை கூறியதைவிடக் கூடுதலான அழுத்தம் கொண்டதாகும்.- மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள். இறுதியில் ஒரு கிராமத்துக்கு வந்தார்கள். அக்கிராம மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் (சாய்ந்தபடி) கீழே விழலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) களிர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக்கொண்டிருக்கலாமே!” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘’இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்” என்று கூறினார்கள். (இந்த நிகழ்ச்சியை கூறி முடித்தபின்) நபி (ஸல்) அவர்கள், “மூசா பொறுமை யாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்கள் (அல்லாஹ்வின் மூலம்) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்” என்று சொன்னார்கள்.29 அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தால் போரிடு கிறார். (மற்றொருவர்) இனமாச்சரியத்தால் போரிடுகிறார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தமது தலையை உயர்த்தி, “யார் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவர் தான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்றுகொண்டி ருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்திப் பார்த் தார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان، قال اخبرنا جرير، عن منصور، عن ابي وايل، عن ابي موسى، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله، ما القتال في سبيل الله فان احدنا يقاتل غضبا، ويقاتل حمية. فرفع اليه راسه قال وما رفع اليه راسه الا انه كان قايما فقال " من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله عز وجل
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கல்லெறியும் இடமான) ‘ஜம்ரா’வில் இருந்தபோது, கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிந்துவிடுக” என்றார்கள். மற்றொருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்ற மில்லை; (இப்போது) குர்பானி கொடுத்து விடுக!” என்றார்கள். (அன்றைய தினம் பிந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் “குற்றமில்லை; (விடுபட் டதை) செய்வீராக!” என்றே சொன் னார்கள்.30 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا عبد العزيز بن ابي سلمة، عن الزهري، عن عيسى بن طلحة، عن عبد الله بن عمرو، قال رايت النبي صلى الله عليه وسلم عند الجمرة وهو يسال، فقال رجل يا رسول الله نحرت قبل ان ارمي. قال " ارم ولا حرج ". قال اخر يا رسول الله حلقت قبل ان انحر. قال " انحر ولا حرج ". فما سيل عن شىء قدم ولا اخر الا قال افعل ولا حرج
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (மக்கள் வசிப்பிடமில்லாத) ஒரு பாழ்வெளியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த ஒரு பேரீச்ச மட்டையை ஊன்றிக்கொண்டு வந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) “அவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்றார். இன்னொருவர் “அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத (பதில்) ஏதும் அவரிடமிருந்து வந்துவிடப் போகிறது” என்றார். இறுதியில் அவர்களில் சிலர், இறைவன்மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) கட்டாயம் அவரிடம் கேட்டேவிடுவோம்” என்றனர். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, “அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது நான், “நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது” என்று சொல்லிக்கொண்டேன். (வேத அறிவிப் பின்போது ஏற்படும் சிரம நிலை விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது, “(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள்ளது” (17:85) எனும் இறைவசனத்தைக் கூறினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (சுலைமான் பின் மிஹ்ரான் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘உங்களுக்கு’ சிறிதளவு அறிவே வழங்கப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக) ‘அவர்களுக்கு’ (‘வமா ஊ(த்)தூ’) என்றுதான் எங்களது ஓதல்முறையில் உள்ளது. அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، قال حدثنا عبد الواحد، قال حدثنا الاعمش، سليمان عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال بينا انا امشي، مع النبي صلى الله عليه وسلم في خرب المدينة، وهو يتوكا على عسيب معه، فمر بنفر من اليهود، فقال بعضهم لبعض سلوه عن الروح. وقال بعضهم لا تسالوه لا يجيء فيه بشىء تكرهونه. فقال بعضهم لنسالنه. فقام رجل منهم فقال يا ابا القاسم، ما الروح فسكت. فقلت انه يوحى اليه. فقمت، فلما انجلى عنه، قال {ويسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا}. قال الاعمش هكذا في قراءتنا
அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் இறையில்லம் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் (பின்வருமாறு) பதிலளித்தேன்: ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) இறைமறுப்பிலிருந்து புதிதாக (இஸ்லாத் துக்கு) வந்தவர்கள் என்பது மட்டும் இல்லாமலிருந்தால், நான் இறையில்லம் கஅபாவைத் துளைத்து, மக்கள் நுழைவ தற்கு ஒரு வாசலும், வெளியேறுவதற்கு ஒரு வாசலுமாக அதற்கு இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் எண்ணத்தை) செய்து முடித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن الاسود، قال قال لي ابن الزبير كانت عايشة تسر اليك كثيرا فما حدثتك في الكعبة قلت قالت لي قال النبي صلى الله عليه وسلم " يا عايشة، لولا قومك حديث عهدهم قال ابن الزبير بكفر لنقضت الكعبة فجعلت لها بابين باب يدخل الناس، وباب يخرجون ". ففعله ابن الزبير
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் எதைப் புரிந்துகொள்வார்களோ அதையே அவர்களிடம் கூறுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பேசி, அதனால்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா, என்ன? அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى عن معروف بن خربوذ عن ابي الطفيل عن علي بذلك
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் “முஆத் பின் ஜபலே!” என்று அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கி றேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். ‘முஆதே!’ என (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என (மீண்டும்) முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்துவிடு வார்கள்” என்று கூறினார்கள். (கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، قال حدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن قتادة، قال حدثنا انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم ومعاذ رديفه على الرحل قال " يا معاذ بن جبل ". قال لبيك يا رسول الله وسعديك. قال " يا معاذ ". قال لبيك يا رسول الله وسعديك. ثلاثا. قال " ما من احد يشهد ان لا اله الا الله وان محمدا رسول الله صدقا من قلبه الا حرمه الله على النار ". قال يا رسول الله، افلا اخبر به الناس فيستبشروا قال " اذا يتكلوا ". واخبر بها معاذ عند موته تاثما
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக யார் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவர் உறுதியாகச் சொர்க்கம் புகுவார்” என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குக் கூறப்பட்டது. அதற்கு முஆத் (ரலி) அவர்கள், “இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்க, “(இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்துவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.31 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا معتمر، قال سمعت ابي قال، سمعت انسا، قال ذكر لي ان النبي صلى الله عليه وسلم قال لمعاذ " من لقي الله لا يشرك به شييا دخل الجنة ". قال الا ابشر الناس قال " لا، اني اخاف ان يتكلوا
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத் தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவ தில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஆம்! உறங்கி விழித்ததும் தன்மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமை தான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தால்) எனது முகத்தை மூடிக்கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، قال اخبرنا ابو معاوية، قال حدثنا هشام، عن ابيه، عن زينب ابنة ام سلمة، عن ام سلمة، قالت جاءت ام سليم الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان الله لا يستحيي من الحق، فهل على المراة من غسل اذا احتلمت قال النبي صلى الله عليه وسلم " اذا رات الماء ". فغطت ام سلمة تعني وجهها وقالت يا رسول الله وتحتلم المراة قال " نعم تربت يمينك فبم يشبهها ولدها
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வ தில்லை. அது முஸ்லிமுக்கு உவமை யாகும். அது என்ன மரம் என்று சொல் லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். காட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் என் தந்தை (உமர் (ரலி) அவர்கள்) இடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறி யிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن عبد الله بن دينار، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان من الشجر شجرة لا يسقط ورقها، وهي مثل المسلم، حدثوني ما هي ". فوقع الناس في شجر البادية، ووقع في نفسي انها النخلة. قال عبد الله فاستحييت. فقالوا يا رسول الله، اخبرنا بها. فقال رسول الله صلى الله عليه وسلم " هي النخلة ". قال عبد الله فحدثت ابي بما وقع في نفسي فقال لان تكون قلتها احب الى من ان يكون لي كذا وكذا
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிக மாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க வெட்கப் பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அதுபற்றி நபியவர்களிடம் கேட்டார். “அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதுதான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا عبد الله بن داود، عن الاعمش، عن منذر الثوري، عن محمد ابن الحنفية، عن علي، قال كنت رجلا مذاء فامرت المقداد ان يسال النبي صلى الله عليه وسلم فساله فقال " فيه الوضوء
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் எழுந்து நின்று (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த இடத்திலிருந்து (ஹஜ் ஜுக்கா) ‘இஹ்ராம்’ கட்ட வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்திலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’ எனும் இடத்திலி ருந்தும், நஜ்த்வாசிகள் ‘கர்ன்’ எனும் இடத்திலிருந்தும் ‘இஹ்ராம்’ கட்ட வேண்டும்” என்று பதிலளித்தார்கள். ‘யமன்’வாசிகள் ‘யலம்லம்’ எனும் இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சிலர் கூறுகிறார்கள். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (எதையும்) நான் அறியவில்லை. அத்தியாயம் :
حدثني قتيبة بن سعيد، قال حدثنا الليث بن سعد، قال حدثنا نافع، مولى عبد الله بن عمر بن الخطاب عن عبد الله بن عمر،. ان رجلا، قام في المسجد فقال يا رسول الله، من اين تامرنا ان نهل فقال رسول الله صلى الله عليه وسلم " يهل اهل المدينة من ذي الحليفة، ويهل اهل الشام من الجحفة، ويهل اهل نجد من قرن ". وقال ابن عمر ويزعمون ان رسول الله صلى الله عليه وسلم قال " ويهل اهل اليمن من يلملم ". وكان ابن عمر يقول لم افقه هذه من رسول الله صلى الله عليه وسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இஹ்ராம்’ கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “முழு நீளச் சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்கா விட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا ابن ابي ذيب، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم. وعن الزهري، عن سالم، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم ان رجلا ساله ما يلبس المحرم فقال " لا يلبس القميص ولا العمامة ولا السراويل ولا البرنس ولا ثوبا مسه الورس او الزعفران، فان لم يجد النعلين فليلبس الخفين وليقطعهما حتى يكونا تحت الكعبين
حدثنا عبد الله بن محمد، قال حدثنا سفيان، قال حدثنا عمرو، قال اخبرني سعيد بن جبير، قال قلت لابن عباس ان نوفا البكالي يزعم ان موسى ليس بموسى بني اسراييل، انما هو موسى اخر. فقال كذب عدو الله، حدثنا ابى بن كعب عن النبي صلى الله عليه وسلم قال " قام موسى النبي خطيبا في بني اسراييل، فسيل اى الناس اعلم فقال انا اعلم. فعتب الله عليه، اذ لم يرد العلم اليه، فاوحى الله اليه ان عبدا من عبادي بمجمع البحرين هو اعلم منك. قال يا رب وكيف به فقيل له احمل حوتا في مكتل فاذا فقدته فهو ثم، فانطلق وانطلق بفتاه يوشع بن نون، وحملا حوتا في مكتل، حتى كانا عند الصخرة وضعا رءوسهما وناما فانسل الحوت من المكتل فاتخذ سبيله في البحر سربا، وكان لموسى وفتاه عجبا، فانطلقا بقية ليلتهما ويومهما فلما اصبح قال موسى لفتاه اتنا غداءنا، لقد لقينا من سفرنا هذا نصبا، ولم يجد موسى مسا من النصب حتى جاوز المكان الذي امر به. فقال له فتاه ارايت اذ اوينا الى الصخرة فاني نسيت الحوت، قال موسى ذلك ما كنا نبغي، فارتدا على اثارهما قصصا، فلما انتهيا الى الصخرة اذا رجل مسجى بثوب او قال تسجى بثوبه فسلم موسى. فقال الخضر وانى بارضك السلام فقال انا موسى. فقال موسى بني اسراييل قال نعم. قال هل اتبعك على ان تعلمني مما علمت رشدا قال انك لن تستطيع معي صبرا، يا موسى اني على علم من علم الله علمنيه لا تعلمه انت، وانت على علم علمكه لا اعلمه. قال ستجدني ان شاء الله صابرا، ولا اعصي لك امرا، فانطلقا يمشيان على ساحل البحر ليس لهما سفينة، فمرت بهما سفينة، فكلموهم ان يحملوهما، فعرف الخضر، فحملوهما بغير نول، فجاء عصفور فوقع على حرف السفينة، فنقر نقرة او نقرتين في البحر. فقال الخضر يا موسى، ما نقص علمي وعلمك من علم الله الا كنقرة هذا العصفور في البحر. فعمد الخضر الى لوح من الواح السفينة فنزعه. فقال موسى قوم حملونا بغير نول، عمدت الى سفينتهم فخرقتها لتغرق اهلها قال الم اقل انك لن تستطيع معي صبرا قال لا تواخذني بما نسيت. فكانت الاولى من موسى نسيانا. فانطلقا فاذا غلام يلعب مع الغلمان، فاخذ الخضر براسه من اعلاه فاقتلع راسه بيده. فقال موسى اقتلت نفسا زكية بغير نفس قال الم اقل لك انك لن تستطيع معي صبرا قال ابن عيينة وهذا اوكد فانطلقا حتى اذا اتيا اهل قرية استطعما اهلها، فابوا ان يضيفوهما، فوجدا فيها جدارا يريد ان ينقض فاقامه. قال الخضر بيده فاقامه. فقال له موسى لو شيت لاتخذت عليه اجرا. قال هذا فراق بيني وبينك ". قال النبي صلى الله عليه وسلم " يرحم الله موسى، لوددنا لو صبر حتى يقص علينا من امرهما