Loading...

Loading...
நூல்கள்
௧௯௩ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளன. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " قال الله تعالى يوذيني ابن ادم، يسب الدهر وانا الدهر، بيدي الامر، اقلب الليل والنهار
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றார்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன் பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கும் வேளையில் கிடைக் கின்ற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும்தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.135 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " يقول الله عز وجل الصوم لي وانا اجزي به يدع شهوته واكله وشربه من اجلي، والصوم جنة، وللصايم فرحتان فرحة حين يفطر وفرحة حين يلقى ربه، ولخلوف فم الصايم اطيب عند الله من ريح المسك
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் திறந்தமேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்கள்மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தமது ஆடையில் அள்ளத்தொடங்கினார்கள். அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களை அழைத்து, “அய்யூப்! நீர் பார்க்கின்ற இந்தத் தங்கக் கால் உமக்குத் தேவைப்படாத அளவுக்கு உம்மை நான் செல்வராக ஆக்கியிருக்கவில்லையா?” என்று கேட்க, அவர்கள் “ஆம். என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!” என்று பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " بينما ايوب يغتسل عريانا خر عليه رجل جراد من ذهب فجعل يحثي في ثوبه، فنادى ربه يا ايوب الم اكن اغنيتك عما ترى قال بلى يا رب ولكن لا غنى بي عن بركتك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن ابن شهاب، عن ابي عبد الله الاغر، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يتنزل ربنا تبارك وتعالى كل ليلة الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخر فيقول من يدعوني فاستجيب له، من يسالني فاعطيه، من يستغفرني فاغفر له
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، ان الاعرج، حدثه انه، سمع ابا هريرة، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " نحن الاخرون السابقون يوم القيامة ". وبهذا الاسناد " قال الله انفق انفق عليك
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، ان الاعرج، حدثه انه، سمع ابا هريرة، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " نحن الاخرون السابقون يوم القيامة ". وبهذا الاسناد " قال الله انفق انفق عليك
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள்) “இதோ கதீஜா உங்களி டம் ‘உணவுப் பாத்திரத்தை’ அல்லது ‘பானமுள்ள பாத்திரத்தை’ கொண்டுவந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரு டைய இறைவனிடமிருந்து சலாம் எடுத்துரையுங்கள். கூச்சலோ களைப்போ இல்லாத முத்து மாளிகையொன்று அவருக்கு (சொர்க்கத்தில்) கிடைக்கும் என்று நற்செய்தி அளியுங்கள்” என்று சொன்னார்கள்.139 அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، حدثنا ابن فضيل، عن عمارة، عن ابي زرعة، عن ابي هريرة، فقال " هذه خديجة اتتك باناء فيه طعام او اناء فيه شراب فاقريها من ربها السلام وبشرها ببيت من قصب لا صخب فيه ولا نصب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களைச் சொர்க்கத்தில் நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140 அத்தியாயம் :
حدثنا معاذ بن اسد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن همام بن منبه، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " قال الله اعددت لعبادي الصالحين ما لا عين رات، ولا اذن سمعت، ولا خطر على قلب بشر
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ்ஜுத்’ தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன் வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் (அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை. இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் பக்கமே திரும்பு கிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டுவந்தேன். உன்னிடமே நீதி கேட்டேன். ஆகவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.141 அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، اخبرني سليمان الاحول، ان طاوسا، اخبره انه، سمع ابن عباس، يقول كان النبي صلى الله عليه وسلم اذا تهجد من الليل قال " اللهم لك الحمد انت نور السموات والارض، ولك الحمد انت قيم السموات والارض، ولك الحمد انت رب السموات والارض، ومن فيهن انت الحق، ووعدك الحق وقولك الحق، ولقاوك الحق، والجنة حق، والنار حق، والنبيون حق، والساعة حق، اللهم لك اسلمت، وبك امنت، وعليك توكلت، واليك انبت، وبك خاصمت، واليك حاكمت، فاغفر لي ما قدمت وما اخرت، وما اسررت وما اعلنت، انت الهي، لا اله الا انت
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்கள்மீது அவதூறு பேசியபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்கள் சொன்ன அவதூறிலிருந்து அவர்களை அல்லாஹ் விடுவித்துவிட்டான். இச்செய்தி குறித்து நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் அபீவக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்: ...ஆயினும், அல்லாஹ்வின் மீதாணை யாக! அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிக்க, ஓதப்படுகின்ற வேத அறிவிப்பை அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஓதப்படுகின்ற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், உயர்ந்தோன் அல்லாஹ் (நான் தூய்மையானவள் என்பது குறித்து) “அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்...” என்று தொடங்கும் (24ஆவது அத்தியாயத்தின்) பத்து வசனங்களை அருளினான்.142 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس بن يزيد الايلي، قال سمعت الزهري، قال سمعت عروة بن الزبير، وسعيد بن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله بن عبد الله، عن حديث، عايشة زوج النبي صلى الله عليه وسلم حين قال لها اهل الافك ما قالوا فبراها الله مما قالوا وكل حدثني طايفة من الحديث الذي حدثني عن عايشة قالت ولكن والله ما كنت اظن ان الله ينزل في براءتي وحيا يتلى، ولشاني في نفسي كان احقر من ان يتكلم الله في بامر يتلى، ولكني كنت ارجو ان يرى رسول الله صلى الله عليه وسلم في النوم رويا يبريني الله بها فانزل الله تعالى {ان الذين جاءوا بالافك} العشر الايات
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யா விட்டாலும்கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.143 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا المغيرة بن عبد الرحمن، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يقول الله اذا اراد عبدي ان يعمل سيية فلا تكتبوها عليه حتى يعملها، فان عملها فاكتبوها بمثلها وان تركها من اجلي فاكتبوها له حسنة واذا اراد ان يعمل حسنة فلم يعملها فاكتبوها له حسنة، فان عملها فاكتبوها له بعشر امثالها الى سبعماية
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) நின்றது. அல்லாஹ் “சற்று பொறு” என்றான். “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு. உடனே அல்லாஹ் “(உறவே!) உன்னைப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன்; உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்றது உறவு. “இது உனக்காக நடக்கும்” என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?” எனும் (47:22 ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.144 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، حدثني سليمان بن بلال، عن معاوية بن ابي مزرد، عن سعيد بن يسار، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " خلق الله الخلق فلما فرغ منه قامت الرحم فقال مه. قالت هذا مقام العايذ بك من القطيعة. فقال الا ترضين ان اصل من وصلك، واقطع من قطعك قالت بلى يا رب. قال فذلك لك ". ثم قال ابو هريرة {فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم}
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஒருநாள்) மழை பொழிந்தது. அப்போது அவர்கள், “என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும் இருக்கின்றான்; என்னை நம்புகிறவனும் இருக்கின்றான் என அல்லாஹ் கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.145 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا سفيان، عن صالح، عن عبيد الله، عن زيد بن خالد، قال مطر النبي صلى الله عليه وسلم فقال " قال الله اصبح من عبادي كافر بي ومومن بي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பி னால் நானும் அவனைச் சந்திக்க விரும்பு கிறேன். அவன் என்னைச் சந்திப்பதை வெறுத்தால் நானும் அவனைச் சந்திப்பதை வெறுக்கிறேன்.146 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " قال الله اذا احب عبدي لقايي احببت لقاءه، واذا كره لقايي كرهت لقاءه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.147 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " قال الله انا عند ظن عبدي بي
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒரு மனிதர், “நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைத் தரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என்மீது இறைவனுக்குச் சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாருக்கும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்து விடுவான்” என்று சொல்லி(விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணை யிட்டு அதிலிருந்த அவரது உடலை ஒன்றுதிரட்டினான். தரைக்கு ஆணை யிட்டு அதிலிருந்தும் அவரது உடலை ஒன்று திரட்டினான். பிறகு, “நீ எதற்காக இப்படிச் செய்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவர், “உன் அச்சத்தால்தான். நீ நன்கறிந்தவன்” என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.148 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " قال رجل لم يعمل خيرا قط، فاذا مات فحرقوه واذروا نصفه في البر ونصفه في البحر فوالله لين قدر الله عليه ليعذبنه عذابا لا يعذبه احدا من العالمين، فامر الله البحر فجمع ما فيه، وامر البر فجمع ما فيه ثم قال لم فعلت قال من خشيتك، وانت اعلم، فغفر له
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவருடைய இறைவன், “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்” என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) “என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடுவாயாக” என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம்முறையும்) “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்” என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போலவே) “என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்துவிட்டேன். எனக்காக அதை மன்னித்துவிடுவாயாக” என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்துவிட்டேன். இனி அவன் நாடியதைச் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னான். அத்தியாயம் :
حدثنا احمد بن اسحاق، حدثنا عمرو بن عاصم، حدثنا همام، حدثنا اسحاق بن عبد الله، سمعت عبد الرحمن بن ابي عمرة، قال سمعت ابا هريرة، قال سمعت النبي صلى الله عليه وسلم قال " ان عبدا اصاب ذنبا وربما قال اذنب ذنبا فقال رب اذنبت وربما قال اصبت فاغفر لي فقال ربه اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي. ثم مكث ما شاء الله، ثم اصاب ذنبا او اذنب ذنبا، فقال رب اذنبت او اصبت اخر فاغفره. فقال اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي، ثم مكث ما شاء الله ثم اذنب ذنبا وربما قال اصاب ذنبا قال قال رب اصبت او اذنبت اخر فاغفره لي. فقال اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي ثلاثا فليعمل ما شاء
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘முன்சென்ற’ அல்லது ‘உங்களுக்குமுன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள்: அல்லாஹ் அந்த மனிதருக்குச் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் “நான் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?” என்று கேட்க, அவர்கள் “நல்ல தந்தையாக இருந்தீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால், அவரோ தம(து மறுமை)க்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் ‘தயார் செய்திருக்கவில்லை’. அல்லது ‘சேமித்திருக்கவில்லை’. தம்மீது அல்லாஹ்வுக்குச் சக்தி ஏற்பட்டால் தம்மை அவன் வேதனை செய்வான் என அவர் அஞ்சினார். ஆகவே, (அவர் தம் மக்களிடம்) “நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிய பின் என்னைப் பொடிப்பொடியாக்கி, சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: இவ்வாறு அம்மனிதர் தம் மக்களிடம் அதற்கான உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டார். என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். பிறகு அவரது சாம்பலைச் சூறாவளிக் காற்று வீசிய ஒரு நாளில் தூவிவிட்டார்கள். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “(பழையபடி முழு மனிதராக) ஆகிவிடு” என்று சொல்ல, அந்த மனிதர் (உயிர் பெற்று) எழுந்தார். அல்லாஹ் “என் அடியானே! நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?” என்று கேட்டான். அம்மனிதர் “உன் அச்சத்தின் காரணத்தால்தான்” என்று பதிலளித்தார். அவரை அந்த நேரத்தில் அல்லாஹ்வின் கருணைதான் காப்பாற்றியது. இதே ஹதீஸ் சல்மான் பின் அல்இஸ்லாம் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், “கடலில் தூவிவிடுங்கள்” என அம்மனிதர் கூறினார் என்று கூடுதலாகக் காணப்படுகிறது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (தயார் செய்திருக்கவில்லை) ‘லம் யப்தஇர்’ என்றே காணப்படுகிறது. கலீஃபா பின் கய்யாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (சேமிக்கவில்லை) ‘லம் யப்தயிஸ்’ என்று கூறப்படுகிறது. இச்சொல்லுக்கு கத்தாதா (ரஹ்) அவர்கள் ‘சேமித்து வைக்கவில்லை’ என்று விளக்கம் தருகிறார்கள்.149 அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا معتمر، سمعت ابي، حدثنا قتادة، عن عقبة بن عبد الغافر، عن ابي سعيد، عن النبي صلى الله عليه وسلم " انه ذكر رجلا فيمن سلف او فيمن كان قبلكم قال كلمة يعني اعطاه الله مالا وولدا فلما حضرت الوفاة قال لبنيه اى اب كنت لكم قالوا خير اب. قال فانه لم يبتير او لم يبتيز عند الله خيرا، وان يقدر الله عليه يعذبه، فانظروا اذا مت فاحرقوني حتى اذا صرت فحما فاسحقوني او قال فاسحكوني فاذا كان يوم ريح عاصف فاذروني فيها " فقال نبي الله صلى الله عليه وسلم " فاخذ مواثيقهم على ذلك وربي، ففعلوا ثم اذروه في يوم عاصف، فقال الله عز وجل كن. فاذا هو رجل قايم. قال الله اى عبدي ما حملك على ان فعلت ما فعلت قال مخافتك او فرق منك قال فما تلافاه ان رحمه عندها وقال مرة اخرى فما تلافاه غيرها ". فحدثت به ابا عثمان فقال سمعت هذا من سلمان غير انه زاد فيه اذروني في البحر. او كما حدث. حدثنا موسى، حدثنا معتمر، وقال، لم يبتير. وقال خليفة حدثنا معتمر، وقال، لم يبتيز. فسره قتادة لم يدخر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் “என் இறைவா! எவரது உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!” என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் “எவரது உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக” என்று மீண்டும் பிரார்த்திப்பேன். இதை அறிவித்த அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘சிறிதளவேனும்’ என்று கூறியபோது) விரல்நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று கூறினார்கள்.150 அத்தியாயம் :
حدثنا يوسف بن راشد، حدثنا احمد بن عبد الله، حدثنا ابو بكر بن عياش، عن حميد، قال سمعت انسا رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " اذا كان يوم القيامة شفعت، فقلت يا رب ادخل الجنة من كان في قلبه خردلة. فيدخلون، ثم اقول ادخل الجنة من كان في قلبه ادنى شىء ". فقال انس كاني انظر الى اصابع رسول الله صلى الله عليه وسلم
மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்றுகூடினோம். பிறகு நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ் (ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றோம். அனஸ் (ரலி) அவர்கள் தமது கோட்டையில் ‘ளுஹா’ தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தமது விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், “பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என்று சொன்னோம். உடனே ஸாபித் (ரஹ்) அவர்கள், “அபூஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பர் ஆவார்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், “அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவர் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூசா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய்ப்பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய்ப்பாருங்கள்” என்று சொல்வார்கள். உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “நான் அதற்குரிய வன்தான்” என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக் காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அப்போது, “செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் தொலி நீக்கப் படாத கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ் மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்று சொல்வேன். அப்போது “செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் ‘அணுவளவு’ அல்லது ‘கடுகளவு’ இறைநம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அதற்கு அவன், “செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.) அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், “(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூகலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹசன் (ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம், “அபூசயீதே! உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை” என்று கூறினோம். அதற்கு ஹசன் (ரஹ்) அவர்கள், “அதை என்னிடம் கூறுங்கள்” என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்óக்கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது)வரை வந்தபோது ஹசன் (ரஹ்) அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நாங்கள் “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை” என்று சொன்னோம். அதற்கு ஹசன் (ரஹ்) அவர்கள், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரைமீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக் கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில் லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். உடனே நாங்கள், “அபூசயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக் குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹசன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவசரக்கார னாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொழியைக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:) பிறகு, நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலை களைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக” என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்” என்று சொல்வான்.151 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، حدثنا معبد بن هلال العنزي، قال اجتمعنا ناس من اهل البصرة فذهبنا الى انس بن مالك وذهبنا معنا بثابت اليه يساله لنا عن حديث الشفاعة، فاذا هو في قصره فوافقناه يصلي الضحى، فاستاذنا، فاذن لنا وهو قاعد على فراشه فقلنا لثابت لا تساله عن شىء اول من حديث الشفاعة فقال يا ابا حمزة هولاء اخوانك من اهل البصرة جاءوك يسالونك عن حديث الشفاعة. فقال حدثنا محمد صلى الله عليه وسلم قال " اذا كان يوم القيامة ماج الناس بعضهم في بعض فياتون ادم فيقولون اشفع لنا الى ربك. فيقول لست لها ولكن عليكم بابراهيم فانه خليل الرحمن. فياتون ابراهيم فيقول لست لها ولكن عليكم بموسى فانه كليم الله. فياتون موسى فيقول لست لها ولكن عليكم بعيسى فانه روح الله وكلمته. فياتون عيسى فيقول لست لها ولكن عليكم بمحمد صلى الله عليه وسلم فياتوني فاقول انا لها. فاستاذن على ربي فيوذن لي ويلهمني محامد احمده بها لا تحضرني الان، فاحمده بتلك المحامد واخر له ساجدا فيقال يا محمد ارفع راسك، وقل يسمع لك، وسل تعط، واشفع تشفع. فاقول يا رب امتي امتي. فيقال انطلق فاخرج من كان في قلبه مثقال شعيرة من ايمان. فانطلق فافعل ثم اعود فاحمده بتلك المحامد، ثم اخر له ساجدا فيقال يا محمد ارفع راسك، وقل يسمع لك، وسل تعط، واشفع تشفع، فاقول يا رب امتي امتي. فيقال انطلق فاخرج منها من كان في قلبه مثقال ذرة او خردلة من ايمان. فانطلق فافعل ثم اعود فاحمده بتلك المحامد، ثم اخر له ساجدا فيقال يا محمد ارفع راسك، وقل يسمع لك، وسل تعط، واشفع تشفع. فاقول يا رب امتي امتي. فيقول انطلق فاخرج من كان في قلبه ادنى ادنى ادنى مثقال حبة خردل من ايمان، فاخرجه من النار. فانطلق فافعل ". فلما خرجنا من عند انس قلت لبعض اصحابنا لو مررنا بالحسن وهو متوار في منزل ابي خليفة فحدثنا بما حدثنا انس بن مالك، فاتيناه فسلمنا عليه فاذن لنا فقلنا له يا ابا سعيد جيناك من عند اخيك انس بن مالك فلم نر مثل ما حدثنا في الشفاعة، فقال هيه، فحدثناه بالحديث فانتهى الى هذا الموضع فقال هيه، فقلنا لم يزد لنا على هذا. فقال لقد حدثني وهو جميع منذ عشرين سنة فلا ادري انسي ام كره ان تتكلوا. قلنا يا ابا سعيد فحدثنا، فضحك وقال خلق الانسان عجولا ما ذكرته الا وانا اريد ان احدثكم حدثني كما حدثكم به قال " ثم اعود الرابعة فاحمده بتلك، ثم اخر له ساجدا فيقال يا محمد ارفع راسك وقل يسمع، وسل تعطه، واشفع تشفع. فاقول يا رب ايذن لي فيمن قال لا اله الا الله. فيقول وعزتي وجلالي وكبريايي وعظمتي لاخرجن منها من قال لا اله الا الله