ஹதீஸ்கள்
#7507
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவருடைய இறைவன், “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்” என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) “என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடுவாயாக” என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம்முறையும்) “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்” என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போலவே) “என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்துவிட்டேன். எனக்காக அதை மன்னித்துவிடுவாயாக” என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்துவிட்டேன். இனி அவன் நாடியதைச் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னான். அத்தியாயம் :
حدثنا احمد بن اسحاق، حدثنا عمرو بن عاصم، حدثنا همام، حدثنا اسحاق بن عبد الله، سمعت عبد الرحمن بن ابي عمرة، قال سمعت ابا هريرة، قال سمعت النبي صلى الله عليه وسلم قال " ان عبدا اصاب ذنبا وربما قال اذنب ذنبا فقال رب اذنبت وربما قال اصبت فاغفر لي فقال ربه اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي. ثم مكث ما شاء الله، ثم اصاب ذنبا او اذنب ذنبا، فقال رب اذنبت او اصبت اخر فاغفره. فقال اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي، ثم مكث ما شاء الله ثم اذنب ذنبا وربما قال اصاب ذنبا قال قال رب اصبت او اذنبت اخر فاغفره لي. فقال اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي ثلاثا فليعمل ما شاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7507
- Book Index
- 132
Grades
- -
