Loading...

Loading...
நூல்கள்
௧௯௩ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க் கத்தில் நுழைபவரும் நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறு பவரும் யாரென்றால், தவழ்ந்தபடி வெளி யேறுகின்ற ஒரு மனிதராவார். அப்போது அவருடைய இறைவன் ‘சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்று அவரிடம் சொல்வான். அதற்கு அவர் ‘என் இறைவா! சொர்க்கம் நிரம்பிவிட்டது’ என்று பதில் சொல்வார். இவ்வாறு அவரிடம் மூன்று முறை இறைவன் சொல்வான். ஒவ்வொரு முறையும் அம்மனிதர் சொர்க்கம் நிரம்பிவிட்டது என்றே அல்லாஹ் விடம் கூறுவார். பின்னர் அல்லாஹ் ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு இடம் (சொர்க்கத்தில்) உனக்கு உண்டு’ என்று சொல்வான். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.152 அத்தியாயம் :
حدثنا محمد بن خالد، حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن منصور، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اخر اهل الجنة دخولا الجنة، واخر اهل النار خروجا من النار رجل يخرج حبوا فيقول له ربه ادخل الجنة. فيقول رب الجنة ملاى. فيقول له ذلك ثلاث مرات فكل ذلك يعيد عليه الجنة ملاى. فيقول ان لك مثل الدنيا عشر مرار
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘ஒரு நற்சொல்லைக் கொண்டாவது’ என்று காணப்படுகிறது.153 அத்தியாயம் :
حدثنا علي بن حجر، اخبرنا عيسى بن يونس، عن الاعمش، عن خيثمة، عن عدي بن حاتم، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما منكم احد الا سيكلمه ربه، ليس بينه وبينه ترجمان، فينظر ايمن منه فلا يرى الا ما قدم من عمله، وينظر اشام منه فلا يرى الا ما قدم، وينظر بين يديه فلا يرى الا النار تلقاء وجهه، فاتقوا النار ولو بشق تمرة ". قال الاعمش وحدثني عمرو بن مرة عن خيثمة مثله وزاد فيه " ولو بكلمة طيبة
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதப் பாதிரியார் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் மற்றப் படைப்புகளை ஒரு விரலிலும் வைத்துக்கொண்டு பிறகு அவற்றை அசைப்பான். பின்னர் ‘நானே அரசன்; நானே அரசன்’ என்று சொல்வான்” எனக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தாலும், அதை ஆமோதிக்கும் வகையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் வெளியே தெரியும் அளவுக்குச் சிரிப்பதை நான் கண்டேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி அவர்கள் மதிக்கவில்லை” எனும் (6:91 ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.154 அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله رضى الله عنه قال جاء حبر من اليهود فقال انه اذا كان يوم القيامة جعل الله السموات على اصبع، والارضين على اصبع، والماء والثرى على اصبع، والخلايق على اصبع، ثم يهزهن ثم يقول انا الملك انا الملك. فلقد رايت النبي صلى الله عليه وسلم يضحك حتى بدت نواجذه تعجبا وتصديقا، لقوله ثم قال النبي صلى الله عليه وسلم {وما قدروا الله حق قدره} الى قوله {يشركون}
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?” என்று வினவினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம்முடைய இறைவனை நெருங்குவார். இறைவன் தனது திரையை அவர்மீது போட்டு (அவரை மறைத்து)விடுவான். பின்னர் (அவரிடம்) இறைவன், “நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?” என்று கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். இறைவன் (மறுபடியும்) “இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?” என்று கேட்பான். அப்போதும் அவர் ‘ஆம்’ என்று கூறி தமது குற்றத்தை ஒப்புக்கொள்வார். பிறகு “நான் (உன் குற்றங்களை) உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகின்றேன்” என்று சொல்வான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.155 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا ابو عوانة، عن قتادة، عن صفوان بن محرز، ان رجلا، سال ابن عمر كيف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في النجوى قال " يدنو احدكم من ربه حتى يضع كنفه عليه فيقول اعملت كذا وكذا فيقول نعم. ويقول عملت كذا وكذا فيقول نعم. فيقرره، ثم يقول اني سترت عليك في الدنيا، وانا اغفرها لك اليوم ". وقال ادم حدثنا شيبان، حدثنا قتادة، حدثنا صفوان، عن ابن عمر، سمعت النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள், “நீங்கள்தானே உங்கள் சந்ததிகளைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய ஆதம்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அல்லாஹ் தன் தூதுச் செய்திகளை அனுப்பவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா நீங்கள்தானே! அப்படிப்பட்ட நீங்களா, நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைக் குறை சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். (இந்தப் பதில் மூலம்) ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.156 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، حدثنا عقيل، عن ابن شهاب، حدثنا حميد بن عبد الرحمن، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " احتج ادم وموسى، فقال موسى انت ادم الذي اخرجت ذريتك من الجنة. قال ادم انت موسى الذي اصطفاك الله برسالاته وكلامه، ثم تلومني على امر قد قدر على قبل ان اخلق. فحج ادم موسى
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்றுதிரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள், “(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?” என்று பேசிக்கொள்வார்கள். அதன்படி அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று அவர்களிடம், “நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் உங்களைத் தனது கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்பித்தான். ஆகவே, எங்கள் இறைவன் எங்களை (இந்தச் சோதனையிலிருந்து) விடுவிக்க எங்களுக்காக அவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று கேட்டுக் கொள்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று அவர்களிடம் சொல்லி, தாம் செய்த தவற்றை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள். இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.157 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا هشام، حدثنا قتادة، عن انس رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " يجمع المومنون يوم القيامة فيقولون لو استشفعنا الى ربنا، فيريحنا من مكاننا هذا. فياتون ادم فيقولون له انت ادم ابو البشر خلقك الله بيده واسجد لك الملايكة وعلمك اسماء كل شىء، فاشفع لنا الى ربنا حتى يريحنا. فيقول لهم لست هناكم. فيذكر لهم خطييته التي اصاب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேதஅறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒருநாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா (ரலி), முஹம்மத் (ஸல்), ஜஅஃபர் (ரலி) ஆகியோரை நோக்கி) “இவர்களில் அவர் (முஹம்மத்-ஸல்) யார்?” என்று கேட்டார். அதற்கு நடுவிலிருந்த (வான)வர் “இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்” என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், “இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்துவாருங்கள்” என்று கூறினார். அன்றிரவு இவ்வளவுதான் நடந்தது. அடுத்த (நாள்) இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில் (உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோதுதான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களது உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கா.- பிறகு அந்த வானவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து ‘ஸம்ஸம்’ கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல் (அலை) ஏற்றுக்கொண்டார்கள்.158 அவர் நபி (ஸல்) அவர்களின் காறை யெலும்பிருந்து நெஞ்சின் நடுப்பகுதிவரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றி லிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தமது கையால் நபியவர்களின் இருத யத்தை ‘ஸம்ஸம்’ நீரால் கழுவி, அவர்களது வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதை நபியவர் களின் இருதயத்திலும் தொண்டை நாளங் களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், “யார் அவர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். “உங்களுடன் வந்திருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என்னுடனிருப்பவர் முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல் (அலை) ‘ஆம்’ என்றார்கள். “அவரது வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துகள்!” என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருப்போர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச்செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்துகொள்ளமாட்டார்கள். அந்த முதல் வானத்தில் நபி (ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “இவர்தான் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம் (அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, “அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துகள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரு நதிகளைக் கண்டார்கள். உடனே “ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகதத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி (ஸல்) அவர்கள் தமது கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள், “இது என்ன நதி ஜிப்ரீலே?” என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இது உங்களுக்காக உங்கள் இறைவன் ஒதுக்கிவைத்துள்ள ‘கவ்ஸர்’ (எனும் நதி) ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். அப்போது அவரிடம் முதல் வானத்திலிருந்த வானவர்கள் கேட்டதைப் போன்றே (இந்த வானத்திலிருந்த) வானவர்களும், “யார் அவர்?” என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார்கள். வானவர்கள், “உம்முடன் இருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘முஹம்மத் (ஸல்) அவர்கள்’ என்று பதிலளித்தார்கள். “அவருக்கு ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று வானவர்கள் கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். அப்போது அவ்வானவர்கள், “அவரது வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துகள்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அ(வ்வானத்திலிருந்த வான)வர்களும் முதலாவது மற்றும் இரண்டாவது வானத்திலிருந்தவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அங்கிருந்த (வான)வர் களும் அதைப் போன்றே கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஐந்தாம் வானிற்கு உயர்ந்தார்கள். அ(ங்கிருந்த வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பின்னர் நபியவர்களுடன் ஆறாம் வானிற்கு உயர்ந்தார்கள். அவர்களும் அவ்வாறே கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஏழாம் வானிற்கு உயர்ந்தார்கள். அப்போது அங்கிருந்த (வான)வர்களும் அவரிடம் முன்போலவே கூறினர். ஒவ்வொரு வானத்திலும் இறைத்தூதர்கள் இருந்ததாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டார்கள். இத்ரீஸ் (அலை) அவர்கள் இரண்டாம் வானிலும், ஹாரூன் (அலை) அவர்கள் நான்காம் வானிலும், இன்னொருவர் ஐந்தாம் வானிலும், -அவருடைய பெயர் நினைவில்லை-. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆறாம் வானிலும், மூசா (அலை) அவர்கள், அல்லாஹ்வுடன் உரையாடியவர் என்ற சிறப்பின் அடிப்படையில் ஏழாம் வானிலும் இருந்ததாக நான் மனனமிட்டுள்ளேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “என் இறைவா! எனக்குமேலே வேறொருவர் உயர்த்தப்படுவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் அதற்கு மேலேயும் ஏறினார். -அல்லாஹ்வுக்கு மட்டுமே அதன் நிலை தெரியும். -இறுதியாக (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’விற்குச் சென்றார்கள். அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை) வன், வில்லின் இரு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், “நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளது” என்பதும் அடங்கும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூசா (அலை) அவர்களிடம் வந்துசேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூசா (அலை) அவர்கள், “முஹம்மதே! உங்கள் இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்” என்று பதிலளித்தார்கள். மூசா (அலை) அவர்கள், “உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்கள் இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். ‘நீர் விரும்பினால் ஆகட்டும்’ என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் தாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி (ஸல்) அவர்கள், “என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது” என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி (ஸல்) அவர்களை இறைவனிடம் மூசா (அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியது. ஐந்துக்கு வந்தபோதும் மூசா (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூ இஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால், அவர்கள் (அதைக்கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கை விட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். ஆகவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐநேரத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்” என்று கூறினார்கள். ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது தடவை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், “என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும் உள்ளத்தாலும் கேள்வியாலும் பார்வையாலும் மேனியாலும் பலவீனமானவர்கள். ஆகவே, (தொழுகைகளை) குறைத்திடு வாயாக!” என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னானஇறைவ)ன், “முஹம்மதே!” என்று அழைத்தான். அதற்கு “இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ், “(ஒருமுறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப் படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்கள்மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கி விட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. ஆகவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்” என்று சொன்னான். பின்னர் நபி (ஸல்) அவர்கள், மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்தார்கள். அப்போது “என்ன செய்தீர்?” என்று மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதைப் போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்” என்று சொன்னார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைவிடக் குறைவான எண்ணிக்கையையே பனூ இஸ்ராயீல்களுக்கு நான் (இறைவனிடம்) கோரிப்பெற்றேன். அப்படியிருந்தும் அதைக்கூட அவர்கள் கைவிட்டார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் உங்களுக்காகக் குறைக்கும்படி கேளுங்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திரும்பத் திரும்ப இறைவனிடம் நான் சென்றுவிட்டதால் (மீண்டும் செல்ல) வெட்கப்படுகிறேன்” என்றார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், “(நபியே!) அல்லாஹ்வின் திருப்பெயரால் (பூமிக்கு) இறங்குங்கள்” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள்; மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் இருந்தார்கள்.159 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசி களை நோக்கி “சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். அவர்கள் “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது” என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் ‘நீங்கள் திருப்தியடைந்தீர்களா?’ என்று கேட்பான். மக்கள் “எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கின்றாயே!” என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், “இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?” என்று கேட்பான். சொர்க்கவாசிகள், “எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், “உங்கள்மீது என் அன்பைப் பொழிகின்றேன். இனி என்றுமே உங்கள் மீது நான் கோபப்படமாட்டேன்” என்று சொல்வான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.160 அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثني ابن وهب، قال حدثني مالك، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " ان الله يقول لاهل الجنة يا اهل الجنة. فيقولون لبيك ربنا وسعديك والخير في يديك. فيقول هل رضيتم فيقولون وما لنا لا نرضى يا رب وقد اعطيتنا ما لم تعط احدا من خلقك. فيقول الا اعطيكم افضل من ذلك. فيقولون يا رب واى شىء افضل من ذلك فيقول احل عليكم رضواني فلا اسخط عليكم بعده ابدا
நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் கிராமவாசி ஒருவர் இருக்க ஒருநாள் (பின்வருமாறு) அறிவித்துக் கொண்டிருந்தார்கள்: சொர்க்கவாசிகளில் ஒருவர் தம் இறைவனிடம் பயிர்செய்ய அனுமதி கேட்பார். இறைவன், “(இங்கு) நீ விரும்பிய நிலையில் வாழ்ந்துகொண்டி ருக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம். எனினும், நான் பயிர்செய்ய விரும்புகின்றேன்” என்று பதிலளிப்பார். உடனே அவர் விரைந்து சென்று விதைகளைத் தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அது முளைத்து பயிராகி கதிர் முற்றி அறுவடை செய்யப்பட்டு மலை போன்று களத்தில் குவிக்கப்பட்டுவிடும். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “ஆதமின் மகனே! எடுத்துக்கொள். ஏனென்றால், எதனாலும் உன் வயிற்றை நிரப்ப முடியாது” என்று சொல்வான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கிராமவாசி உடனே, “அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் குறைஷியாகவோ அன்சாரியாகவோதான் இருப்பார். ஏனெனில், அவர்கள்தான் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று சொன்னார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.161 அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، حدثنا فليح، حدثنا هلال، عن عطاء بن يسار، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان يوما يحدث وعنده رجل من اهل البادية " ان رجلا من اهل الجنة استاذن ربه في الزرع فقال او لست فيما شيت. قال بلى ولكني احب ان ازرع. فاسرع وبذر فتبادر الطرف نباته واستواوه واستحصاده وتكويره امثال الجبال فيقول الله تعالى دونك يا ابن ادم فانه لا يشبعك شىء ". فقال الاعرابي يا رسول الله لا تجد هذا الا قرشيا او انصاريا فانهم اصحاب زرع، فاما نحن فلسنا باصحاب زرع. فضحك رسول الله صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான், “அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைகற்பிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள். நான், “நிச்சயமாக அது பெரும் பாவம்தான்” என்று சொல்லிவிட்டு, “பின்னர் எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.162 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن عمرو بن شرحبيل، عن عبد الله، قال سالت النبي صلى الله عليه وسلم اى الذنب اعظم عند الله قال " ان تجعل لله ندا وهو خلقك ". قلت ان ذلك لعظيم. قلت ثم اى قال " ثم ان تقتل ولدك تخاف ان يطعم معك ". قلت ثم اى قال " ثم ان تزاني بحليلة جارك
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (புனித கஅபா) ஆலயத்தின் அருகே ‘ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்’ அல்லது ‘குறைஷியர் இருவரும் ஸகஃபீ ஒருவரும்’ ஒன்றுகூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப்போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்க, மற்றொருவர், “நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்” என்று சொன்னார். இன்னொருவர், “நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கின்றான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும் அவன் நிச்சயம் கேட்பான்” என்று சொன்னார். அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், “(உலகில் நீங்கள் குற்றங் களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களைத்) தவிர்ப்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் (41:22ஆவது) வசனத்தை அருளி னான்.163 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا منصور، عن مجاهد، عن ابي معمر، عن عبد الله رضى الله عنه قال اجتمع عند البيت ثقفيان وقرشي، او قرشيان وثقفي، كثيرة شحم بطونهم قليلة فقه قلوبهم فقال احدهم اترون ان الله يسمع ما نقول قال الاخر يسمع ان جهرنا ولا يسمع ان اخفينا وقال الاخر ان كان يسمع اذا جهرنا فانه يسمع اذا اخفينا. فانزل الله تعالى {وما كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم ولا جلودكم} الاية
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதங் களிலேயே அண்மைக் காலத்தில் (புதிதாக) அருளப்பெற்ற இறைவேதம் (குர்ஆன்) உங்களிடம் இருக்க, (முந்தைய) வேதக்காரர்களிடம் அவர்களுடைய வேதங்கள் தொடர்பாக நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அ(ந்தப் புதிய வேதத்)தைநீங்கள் கலப்படமின்றி தூய்மையான வடிவில் ஓதிக்கொண்டிருக்கிறீர்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا حاتم بن وردان، حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال كيف تسالون اهل الكتاب عن كتبهم وعندكم كتاب الله اقرب الكتب عهدا بالله، تقرءونه محضا لم يشب
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்கிறீர் கள்? உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம்தான் இறைச்செய்திகளிலேயே புதியதும் கலப்படமில்லாத தூய்மையானதும் ஆகும். வேதக்காரர்களோ இறைவேதங்களை மாற்றி, திரித்து, தம் கரங்களால் எழுதிக் கொண்ட ஏடுகளை அல்லாஹ்விடமிருந்து வந்தவை என, அதன்மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காகக் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவித் துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள ஞானம், வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிவதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? (அதே நேரத்தில்) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த வேதக்காரர்களில் ஒருவர்கூட உங்களுக்கு அருளப்பெற்றுள்ள (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதில்லை. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرني عبيد الله بن عبد الله، ان عبد الله بن عباس، قال يا معشر المسلمين كيف تسالون اهل الكتاب عن شىء وكتابكم الذي انزل الله على نبيكم صلى الله عليه وسلم احدث الاخبار بالله محضا لم يشب وقد حدثكم الله ان اهل الكتاب قد بدلوا من كتب الله وغيروا فكتبوا بايديهم، قالوا هو من عند الله. ليشتروا بذلك ثمنا قليلا، او لا ينهاكم ما جاءكم من العلم عن مسالتهم، فلا والله ما راينا رجلا منهم يسالكم عن الذي انزل عليكم
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்து விளக்கும்போது, “நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தால்) தம் உதடுகளை அசைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். -இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்” என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியதைப் போன்று நானும் அசைத்துக் காட்டுகிறேன் (பாருங்கள்).- அப்போதுதான் அல்லாஹ், “(நபியே!) இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். மேலும், “நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” எனும் (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீர் காதுதாழ்த்தி மௌனமாக இருந்து கேட்பீராக! “பின்னர் உம்மை ஓதச்செய்வது நமது பொறுப்பாகும்”. (இதன்பின்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக்காட்டியதைப் போன்றே ஓதுவார்கள்.164 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ابو عوانة، عن موسى بن ابي عايشة، عن سعيد بن جبير، عن ابن عباس، في قوله تعالى {لا تحرك به لسانك} قال كان النبي صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة، وكان يحرك شفتيه فقال لي ابن عباس احركهما لك كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما فقال سعيد انا احركهما كما كان ابن عباس يحركهما فحرك شفتيه فانزل الله عز وجل {لا تحرك به لسانك لتعجل به * ان علينا جمعه وقرانه} قال جمعه في صدرك ثم تقروه. {فاذا قراناه فاتبع قرانه} قال فاستمع له وانصت ثم ان علينا ان تقراه. قال فكان رسول الله صلى الله عليه وسلم اذا اتاه جبريل عليه السلام استمع فاذا انطلق جبريل قراه النبي صلى الله عليه وسلم كما اقراه
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் (17:110ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை) வனையும் அதை (மக்கள்முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். ஆகவே, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தி ஓதாதீர்! -ஏனெனில், அதைக் கேட்கும் இணை வைப்பாளர்கள் குர்ஆனை ஏசுவார்கள். அதற்காக (உடன் தொழுகின்ற) உம்முடைய நண்பர்களுக்கே கேட்காத அளவுக்கு- (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தவும் வேண்டாம். இரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கையாள்வீராக!” எனக் கட்டளையிட்டான்.165 அத்தியாயம் :
حدثني عمرو بن زرارة، عن هشيم، اخبرنا ابو بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما في قوله تعالى {ولا تجهر بصلاتك ولا تخافت بها} قال نزلت ورسول الله صلى الله عليه وسلم مختف بمكة، فكان اذا صلى باصحابه رفع صوته بالقران، فاذا سمعه المشركون سبوا القران ومن انزله ومن جاء به، فقال الله لنبيه صلى الله عليه وسلم {ولا تجهر بصلاتك} اى بقراءتك، فيسمع المشركون، فيسبوا القران {ولا تخافت بها} عن اصحابك فلا تسمعهم {وابتغ بين ذلك سبيلا}
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் இந்த (17:110ஆவது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது. இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.166 அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت نزلت هذه الاية {ولا تجهر بصلاتك ولا تخافت بها} في الدعاء
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்’ எனக் கூடுதலாக வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا ابو عاصم، اخبرنا ابن جريج، اخبرنا ابن شهاب، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ليس منا من لم يتغن بالقران ". وزاد غيره " يجهر به
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!” என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.167 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا جرير، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تحاسد الا في اثنتين رجل اتاه الله القران فهو يتلوه اناء الليل واناء النهار، فهو يقول لو اوتيت مثل ما اوتي هذا، لفعلت كما يفعل. ورجل اتاه الله مالا فهو ينفقه في حقه فيقول لو اوتيت مثل ما اوتي عملت فيه مثل ما يعمل
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும்பகலும் தானம் செய்கிறார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168 (இதன் அறிவிப்பாளர்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் பலமுறை (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளேன். ஆனால், ‘எனக்கு இன்னார் அறிவித்தார்’ (அக்பரனா அல்லது ஹத்தஸனா) என்று அவர் சொன்னதில்லை. (இன்னார் கூறினார் (கால) என்றே சொல்வார்.) அப்படியிருந்தாலும், அது அவரது ஆதாரபூர்வமான அறிவிப்புதான். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال الزهري عن سالم، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم قال " لا حسد الا في اثنتين رجل اتاه الله القران فهو يتلوه اناء الليل واناء النهار، ورجل اتاه الله مالا فهو ينفقه اناء الليل واناء النهار ". سمعت سفيان مرارا لم اسمعه يذكر الخبر وهو من صحيح حديثه
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “நம்மில் எவர் (இறைவழியில்) கொல்லப் படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்கின்றார்” எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169 இதை ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا الفضل بن يعقوب، حدثنا عبد الله بن جعفر الرقي، حدثنا المعتمر بن سليمان، حدثنا سعيد بن عبيد الله الثقفي، حدثنا بكر بن عبد الله المزني، وزياد بن جبير بن حية، عن جبير بن حية، قال المغيرة اخبرنا نبينا، صلى الله عليه وسلم عن رسالة، ربنا " انه من قتل منا صار الى الجنة
حدثنا عبد العزيز بن عبد الله، حدثني سليمان، عن شريك بن عبد الله، انه قال سمعت ابن مالك، يقول ليلة اسري برسول الله صلى الله عليه وسلم من مسجد الكعبة انه جاءه ثلاثة نفر قبل ان يوحى اليه وهو نايم في المسجد الحرام، فقال اولهم ايهم هو فقال اوسطهم هو خيرهم. فقال اخرهم خذوا خيرهم. فكانت تلك الليلة، فلم يرهم حتى اتوه ليلة اخرى فيما يرى قلبه، وتنام عينه ولا ينام قلبه وكذلك الانبياء تنام اعينهم ولا تنام قلوبهم، فلم يكلموه حتى احتملوه فوضعوه عند بير زمزم فتولاه منهم جبريل فشق جبريل ما بين نحره الى لبته حتى فرغ من صدره وجوفه، فغسله من ماء زمزم بيده، حتى انقى جوفه، ثم اتي بطست من ذهب فيه تور من ذهب محشوا ايمانا وحكمة، فحشا به صدره ولغاديده يعني عروق حلقه ثم اطبقه ثم عرج به الى السماء الدنيا فضرب بابا من ابوابها فناداه اهل السماء من هذا فقال جبريل. قالوا ومن معك قال معي محمد. قال وقد بعث قال نعم. قالوا فمرحبا به واهلا. فيستبشر به اهل السماء، لا يعلم اهل السماء بما يريد الله به في الارض حتى يعلمهم، فوجد في السماء الدنيا ادم فقال له جبريل هذا ابوك فسلم عليه. فسلم عليه ورد عليه ادم وقال مرحبا واهلا بابني، نعم الابن انت. فاذا هو في السماء الدنيا بنهرين يطردان فقال ما هذان النهران يا جبريل قال هذا النيل والفرات عنصرهما. ثم مضى به في السماء فاذا هو بنهر اخر عليه قصر من لولو وزبرجد فضرب يده فاذا هو مسك قال ما هذا يا جبريل قال هذا الكوثر الذي خبا لك ربك. ثم عرج الى السماء الثانية فقالت الملايكة له مثل ما قالت له الاولى من هذا قال جبريل. قالوا ومن معك قال محمد صلى الله عليه وسلم. قالوا وقد بعث اليه قال نعم. قالوا مرحبا به واهلا. ثم عرج به الى السماء الثالثة وقالوا له مثل ما قالت الاولى والثانية، ثم عرج به الى الرابعة فقالوا له مثل ذلك، ثم عرج به الى السماء الخامسة فقالوا مثل ذلك، ثم عرج به الى السماء السادسة فقالوا له مثل ذلك، ثم عرج به الى السماء السابعة فقالوا له مثل ذلك، كل سماء فيها انبياء قد سماهم فاوعيت منهم ادريس في الثانية، وهارون في الرابعة، واخر في الخامسة لم احفظ اسمه، وابراهيم في السادسة، وموسى في السابعة بتفضيل كلام الله، فقال موسى رب لم اظن ان يرفع على احد. ثم علا به فوق ذلك بما لا يعلمه الا الله، حتى جاء سدرة المنتهى ودنا الجبار رب العزة فتدلى حتى كان منه قاب قوسين او ادنى فاوحى الله فيما اوحى اليه خمسين صلاة على امتك كل يوم وليلة. ثم هبط حتى بلغ موسى فاحتبسه موسى فقال يا محمد ماذا عهد اليك ربك قال عهد الى خمسين صلاة كل يوم وليلة. قال ان امتك لا تستطيع ذلك فارجع فليخفف عنك ربك وعنهم. فالتفت النبي صلى الله عليه وسلم الى جبريل كانه يستشيره في ذلك، فاشار اليه جبريل ان نعم ان شيت. فعلا به الى الجبار فقال وهو مكانه يا رب خفف عنا، فان امتي لا تستطيع هذا. فوضع عنه عشر صلوات ثم رجع الى موسى فاحتبسه، فلم يزل يردده موسى الى ربه حتى صارت الى خمس صلوات، ثم احتبسه موسى عند الخمس فقال يا محمد والله لقد راودت بني اسراييل قومي على ادنى من هذا فضعفوا فتركوه فامتك اضعف اجسادا وقلوبا وابدانا وابصارا واسماعا، فارجع فليخفف عنك ربك، كل ذلك يلتفت النبي صلى الله عليه وسلم الى جبريل ليشير عليه ولا يكره ذلك جبريل، فرفعه عند الخامسة فقال يا رب ان امتي ضعفاء اجسادهم وقلوبهم واسماعهم وابدانهم فخفف عنا فقال الجبار يا محمد. قال لبيك وسعديك. قال انه لا يبدل القول لدى، كما فرضت عليك في ام الكتاب قال فكل حسنة بعشر امثالها، فهى خمسون في ام الكتاب وهى خمس عليك. فرجع الى موسى فقال كيف فعلت فقال خفف عنا اعطانا بكل حسنة عشر امثالها. قال موسى قد والله راودت بني اسراييل على ادنى من ذلك فتركوه، ارجع الى ربك فليخفف عنك ايضا. قال رسول الله صلى الله عليه وسلم يا موسى قد والله استحييت من ربي مما اختلفت اليه. قال فاهبط باسم الله. قال واستيقظ وهو في مسجد الحرام