ஹதீஸ்கள்
#7524
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்து விளக்கும்போது, “நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தால்) தம் உதடுகளை அசைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். -இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்” என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியதைப் போன்று நானும் அசைத்துக் காட்டுகிறேன் (பாருங்கள்).- அப்போதுதான் அல்லாஹ், “(நபியே!) இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். மேலும், “நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” எனும் (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீர் காதுதாழ்த்தி மௌனமாக இருந்து கேட்பீராக! “பின்னர் உம்மை ஓதச்செய்வது நமது பொறுப்பாகும்”. (இதன்பின்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக்காட்டியதைப் போன்றே ஓதுவார்கள்.164 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ابو عوانة، عن موسى بن ابي عايشة، عن سعيد بن جبير، عن ابن عباس، في قوله تعالى {لا تحرك به لسانك} قال كان النبي صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة، وكان يحرك شفتيه فقال لي ابن عباس احركهما لك كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما فقال سعيد انا احركهما كما كان ابن عباس يحركهما فحرك شفتيه فانزل الله عز وجل {لا تحرك به لسانك لتعجل به * ان علينا جمعه وقرانه} قال جمعه في صدرك ثم تقروه. {فاذا قراناه فاتبع قرانه} قال فاستمع له وانصت ثم ان علينا ان تقراه. قال فكان رسول الله صلى الله عليه وسلم اذا اتاه جبريل عليه السلام استمع فاذا انطلق جبريل قراه النبي صلى الله عليه وسلم كما اقراه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7524
- Book Index
- 149
Grades
- -
