Loading...

Loading...
நூல்கள்
௪௪ ஹதீஸ்கள்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்) திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் வேதத்தில், ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்’ என்று கூறுகின்றான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ (எனும் தோட்டம்)தான். லிஅந்தத் தோட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணீரை அருந்துவது வழக்கம்லி ஆகவே, அதை நான் அல்லாஹ்வுக்காக வும் அவனுடைய தூதருக்காகவும் (அறக்கொடையாகத்) தந்துவிடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ள இனத் தில் அதைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! அது (மறுமையில் உங்களுக்கு) இலாபம் தரும் செல்வமாகும். அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகின்றோம். உங்கள் நெருங் கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதைத் தம் இரத்த சொந்தமுள்ள உறவினர் களுக்குத் தர்மம் செய்துவிட்டார்கள். அவர்களிடையே உபை பின் கஅப் (ரலி) அவர்களும், ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களும்கூட இருந்தனர். அதில் தமக்குக் கிடைத்த பங்கை ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு விற்றுவிட்டார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அபூதல்ஹாவின் தர்மத்தையா விற்கின்றீர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்தை ஒரு ஸாஉ திர்ஹத்துக்காக நான் விற்கமாட்டேனா? (அது போலத்தான் இதுவும்)” என்று பதில் சொன்னார்கள்.18 அந்த (பைருஹா) தோட்டம் முஆவியா (ரலி) அவர்கள் கட்டிய பனூ ஹுதைலா கோட்டை இருந்த இடத்தில் அமைந் திருந்தது.19 அத்தியாயம் :
وقال اسماعيل اخبرني عبد العزيز بن عبد الله بن ابي سلمة، عن اسحاق بن عبد الله بن ابي طلحة،، لا اعلمه الا عن انس رضى الله عنه قال لما نزلت {لن تنالوا البر حتى تنفقوا مما تحبون} جاء ابو طلحة الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله يقول الله تبارك وتعالى في كتابه {لن تنالوا البر حتى تنفقوا مما تحبون} وان احب اموالي الى بيرحاء قال وكانت حديقة كان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويستظل بها ويشرب من مايها فهي الى الله عز وجل والى رسوله صلى الله عليه وسلم ارجو بره وذخره، فضعها اى رسول الله حيث اراك الله. فقال رسول الله صلى الله عليه وسلم " بخ يا ابا طلحة، ذلك مال رابح، قبلناه منك ورددناه عليك، فاجعله في الاقربين ". فتصدق به ابو طلحة على ذوي رحمه، قال وكان منهم ابى وحسان، قال وباع حسان حصته منه من معاوية، فقيل له تبيع صدقة ابي طلحة فقال الا ابيع صاعا من تمر بصاع من دراهم قال وكانت تلك الحديقة في موضع قصر بني حديلة الذي بناه معاوية
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் சிலர், ‘‘இந்த (4:8) இறை வசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டு விட்டது” என்று கருதுகிறார்கள். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இது மாற்றப்படவில்லை. மாறாக, மக்கள் இதில் கவனக்குறைவாக உள்ளனர். (இறந்தவரது செல்வத்தின்) பொறுப் பாளர்கள் இரு வகைப்படுவர். ஒரு வகை ‘னர் (இறந்தவரின் சொத்துக்கு) வாரி சாகும் பொறுப்பாளர். இவர்தான், (தூரத்து உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும்) கொடுப்பார். மற்றொரு வகையினர், வாரிசல்லாத பொறுப்பாளர். (அநாதையின் காப்பாளரான) இவர்தான், (அங்கு வரும் ஏழைகளிடம்) கனிவான வார்த்தையைக் கூறி, உமக்கு எதையும் என்னால் தர இயலாது (இது அநாதையின் சொத்து) என்று சொல்வார். அத்தியாயம் :
حدثنا محمد بن الفضل ابو النعمان، حدثنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال ان ناسا يزعمون ان هذه الاية نسخت، ولا والله ما نسخت، ولكنها مما تهاون الناس، هما واليان وال يرث، وذاك الذي يرزق، ووال لا يرث، فذاك الذي يقول بالمعروف، يقول لا املك لك ان اعطيك
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லி யிருந்)திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம், அவர் சார்பாகத் தர்மம் செய்வீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن هشام، عن ابيه، عن عايشة، رضى الله عنها ان رجلا، قال للنبي صلى الله عليه وسلم ان امي افتلتت نفسها، واراها لو تكلمت تصدقت، افاتصدق عنها قال " نعم، تصدق عنها
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார்மீது ஒரு நேர்த்திக்கடன் கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்துபோய்விட்டார் (என்ன செய்வது?)” என்று விளக்கம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس رضى الله عنهما ان سعد بن عبادة رضى الله عنه استفتى رسول الله صلى الله عليه وسلم فقال ان امي ماتت وعليها نذر. فقال " اقضه عنها
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவர்களின் தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஊரில் இல்லாதபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவருக் காகத் தர்மம் செய்துவிடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني يعلى، انه سمع عكرمة، مولى ابن عباس يقول انبانا ابن عباس، ان سعد بن عبادة رضى الله عنهم اخا بني ساعدة توفيت امه وهو غايب، فاتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ان امي توفيت وانا غايب عنها، فهل ينفعها شىء ان تصدقت به عنها قال " نعم ". قال فاني اشهدك ان حايطي المخراف صدقة عليها
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்)களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை... மணந்துகொள்ளுங்கள்” (4:3) எனும் வசனம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: இந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவளது அழகுக்கும் சொத்துக் கும் ஆசைப்பட்டு, அவள் போன்ற பெண்களுக்கான மணக்கொடையைவிடக் குறைவானதை அவளுக்குக் கொடுத்து அவணை மணக்க விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை முழுமை யாகக் கொடுத்து நீதியுடன் நடந்து கொண்டால் தவிர, அவர்களை மணம் புரிந்துகொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டார்கள்; அவர்களைத் தவிர வுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட் டார்கள். பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது தொடர்பாகத் தீர்ப்பு கேட்டு வரவே, அல்லாஹ், ‘‘(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் தீர்ப்புக் கேட்கின்றனர். அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான் என்று நீர் கூறுவீராக!” (4:127) எனும் வசனத்தை அருளினான். அநாதைப் பெண் அழகும் செல்வமும் உடையவளாக இருந்தால் அவளுடைய காப்பாளர்கள் அவளை மணம் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவளையொத்த ஒரு பெண்ணுக்குத் தரப்படுவது போன்ற மணக்கொடையை முழுமையாக அவளுக்குத் தருவதில்லை. அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் அவளை மணமுடிக்க விருப்பமில்லாதபோது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களை (மணமுடிக்க) நாடிச் செல்கிறார்கள். ஆகவே ‘அவளை விரும்பாதபோது அவளை அவர்கள் விட்டுவிடுவதைப் போலவே, அவளை விரும்பும்போது, அவளுக்கு உரிய மணக்கொடையை நிறைவாக அவளுக்குத் தந்து, நீதியுடன் நடந்து, அவளது உரிமையை அவளுக்குக் கொடுத்தால் தவிர அவளை அவர்கள் மணமுடிக்கக் கூடாது’ என்று இந்த வசனத்தில் (4:127) அல்லாஹ் விளக்கிக் கூறினான்.20 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال كان عروة بن الزبير يحدث انه سال عايشة رضى الله عنها – {وان خفتم ان لا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء} قالت هي اليتيمة في حجر وليها، فيرغب في جمالها ومالها، ويريد ان يتزوجها بادنى من سنة نسايها، فنهوا عن نكاحهن، الا ان يقسطوا لهن في اكمال الصداق، وامروا بنكاح من سواهن من النساء قالت عايشة ثم استفتى الناس رسول الله صلى الله عليه وسلم بعد فانزل الله عز وجل {ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن} قالت فبين الله في هذه ان اليتيمة اذا كانت ذات جمال ومال رغبوا في نكاحها، ولم يلحقوها بسنتها باكمال الصداق، فاذا كانت مرغوبة عنها في قلة المال والجمال تركوها والتمسوا غيرها من النساء، قال فكما يتركونها حين يرغبون عنها فليس لهم ان ينكحوها اذا رغبوا فيها الا ان يقسطوا لها الاوفى من الصداق ويعطوها حقها
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், ‘ஸம்ஃக்’ எனப் படும் தமது சொத்து ஒன்றை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள் ளேன். அது என்னிடம் (இருப்பவற்றி லேயே) உயர்தரமானதாகும். அதைத் தர்மம் செய்துவிட விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் நிலத்தை, (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப் பாகவும் தரக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதைத் தர்மம் செய்துவிடுவீராக!” என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதைத் தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அவர்களின் இந்தத் தர்மம் (வக்ஃப்) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப் போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. யிநிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக்கொடுப்பதில் குற்றமில்லை’ என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.21 அத்தியாயம் :
حدثنا هارون، حدثنا ابو سعيد، مولى بني هاشم حدثنا صخر بن جويرية، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان عمر، تصدق بمال له على عهد رسول الله صلى الله عليه وسلم وكان يقال له ثمغ، وكان نخلا، فقال عمر يا رسول الله اني استفدت مالا وهو عندي نفيس فاردت ان اتصدق به. فقال النبي صلى الله عليه وسلم " تصدق باصله، لا يباع ولا يوهب ولا يورث، ولكن ينفق ثمره ". فتصدق به عمر، فصدقته ذلك في سبيل الله وفي الرقاب والمساكين والضيف وابن السبيل ولذي القربى، ولا جناح على من وليه ان ياكل منه بالمعروف، او يوكل صديقه غير متمول به
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமாக உண்ணட்டும்” (4:6) எனும் இறைவசனம் அநாதையின் பராமரிப்பாளர் தொடர்பாக அருளப் பெற்றது. அவர் தேவையுள்ளவராக இருந்தால் அநாதையின் செல்வத்திலிருந்து, அந்தச் செல்வத்தின் அளவுக்கேற்ப பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) எடுத்துக்கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பட்டது.22 அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها – {ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فلياكل بالمعروف}. قالت انزلت في والي اليتيم ان يصيب من ماله اذا كان محتاجا بقدر ماله بالمعروف
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்துள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதை களின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني سليمان بن بلال، عن ثور بن زيد المدني، عن ابي الغيث، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اجتنبوا السبع الموبقات ". قالوا يا رسول الله، وما هن قال " الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله الا بالحق، واكل الربا، واكل مال اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات المومنات الغافلات
‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் எவரேனும் தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து இறுதி விருப்பம் தெரிவித்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஓர் அநாதையின் செல்வம் தொடர்பாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும். தாவூஸ் (ரஹ்) அவர்களிடம் அநாதை களின் பிரச்சினைகளில் ஒன்றைக் குறித்துக் கேட்கப்பட்டால், ‘‘நன்மை செய்பவர் யார், தீமை செய்பவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்” (2:220) எனும் இறைவசனத்தை ஓதுவார்கள். அநாதைகளில் சிறியவர், பெரியவர் ஆகியோர் தொடர்பாக அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் பாகத்திலிருந்து காப்பாளர் செலவு செய்வார்” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
وقال لنا سليمان حدثنا حماد، عن ايوب، عن نافع، قال ما رد ابن عمر على احد وصية. وكان ابن سيرين احب الاشياء اليه في مال اليتيم ان يجتمع اليه نصحاوه واولياوه فينظروا الذي هو خير له. وكان طاوس اذا سيل عن شىء من امر اليتامى قرا {والله يعلم المفسد من المصلح}. وقال عطاء في يتامى الصغير والكبير ينفق الولي على كل انسان بقدره من حصته
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள்24 என் கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத் துச் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பயணத் திலும் உள்ளூரிலும் பணிவிடைகள் செய்துவந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ‘‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை. அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم بن كثير، حدثنا ابن علية، حدثنا عبد العزيز، عن انس رضى الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ليس له خادم، فاخذ ابو طلحة بيدي، فانطلق بي الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ان انسا غلام كيس، فليخدمك. قال فخدمته في السفر والحضر، ما قال لي لشىء صنعته لم صنعت هذا هكذا ولا لشىء لم اصنعه لم لم تصنع هذا هكذا
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களைச் சொத்துகளாகப் பெற்றிருந் தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரே அமைந்திருந்த யிபைருஹா’ தோட்டம்தான் அவருடைய சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமான தாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்) திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்துவிட முடியாது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தர்மம் செய்துவிடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகின்ற இனத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வமாகிவிட்டதே! அல்லது அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! லிஇப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறியுள்ளார்லி நீர் கூறியதை நான் கேட்டேன். அதை (உம்முடைய) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீர் பங்கிட்டுவிடுவதையே நான் (உசிதமானதாகக்) கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே நான் செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டு விட்டார்கள்.25 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. பிந்திய மூன்று அறிவிப்புகளிலும் யிநன்மை கிடைத்துவிட்ட’ என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، انه سمع انس بن مالك رضى الله عنه يقول كان ابو طلحة اكثر انصاري بالمدينة مالا من نخل، وكان احب ماله اليه بيرحاء مستقبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب. قال انس فلما نزلت {لن تنالوا البر حتى تنفقوا مما تحبون} قام ابو طلحة فقال يا رسول الله ان الله يقول {لن تنالوا البر حتى تنفقوا مما تحبون} وان احب اموالي الى بيرحاء، وانها صدقة لله ارجو برها وذخرها عند الله، فضعها حيث اراك الله. فقال " بخ، ذلك مال رابح او رايح شك ابن مسلمة وقد سمعت ما قلت، واني ارى ان تجعلها في الاقربين ". قال ابو طلحة افعل ذلك يا رسول الله. فقسمها ابو طلحة في اقاربه وفي بني عمه. وقال اسماعيل وعبد الله بن يوسف ويحيى بن يحيى عن مالك " رايح
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தம் தாயார் இறந்து விட்டதாகக் கூறிவிட்டு, ‘‘அவர் சார்பாக நான் தர்மம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘‘என்னிடம் யிமிக்ராஃப்’ எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாகத் தர்மம் செய்துவிட்டேன் என்பதற்குத் தங்களை சாட்சியாக ஆக்கு கிறேன்” என்று கூறினார். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، اخبرنا روح بن عبادة، حدثنا زكرياء بن اسحاق، قال حدثني عمرو بن دينار، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان رجلا، قال لرسول الله صلى الله عليه وسلم ان امه توفيت اينفعها ان تصدقت عنها قال " نعم ". قال فان لي مخرافا واشهدك اني قد تصدقت عنها
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தார் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டபோது, ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الوارث، عن ابي التياح، عن انس رضى الله عنه قال امر النبي صلى الله عليه وسلم ببناء المسجد فقال " يا بني النجار ثامنوني بحايطكم هذا ". قالوا لا. والله لا نطلب ثمنه الا الى الله
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ஒரு சொத்தைப் பெற்றுள்ளேன். அதைவிட உயர்தரமான ஒரு சொத்தை இதுவரை நான் பெற்றதில்லை. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும் பினால் அதன் அசலை நீங்களே வைத்துக் கொண்டு, அதன் வருவாயை (மட்டும்) தர்மம் செய்துவிடலாம்” என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், அதன் அடிமனை விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகவும் (எவருக்கும்) தரப்படக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது என்று நிபந்தனைகளிட்டு, ஏழைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற் காகவும், அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச்) செலவிடுவதற்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் தர்மம் (வக்ஃப்) செய்து விட்டார்கள். அதற்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் காப்பாளர் அதிலிருந்து நியாயமான முறையில் உண்பதிலும் விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் தவறில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.27 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا ابن عون، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال اصاب عمر بخيبر ارضا فاتى النبي صلى الله عليه وسلم فقال اصبت ارضا لم اصب مالا قط انفس منه، فكيف تامرني به قال " ان شيت حبست اصلها، وتصدقت بها ". فتصدق عمر انه لا يباع اصلها ولا يوهب ولا يورث، في الفقراء والقربى والرقاب وفي سبيل الله والضيف وابن السبيل، ولا جناح على من وليها ان ياكل منها بالمعروف، او يطعم صديقا غير متمول فيه
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தர்மம் செய்துவிடுங்கள்” என்று ஆலோசனை கூறினார்கள். ஆகவே, அதை (அதன் வருவாயை) ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர் களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் செலவிடும்படி தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، حدثنا ابن عون، عن نافع، عن ابن عمر، ان عمر، رضى الله عنه وجد مالا بخيبر، فاتى النبي صلى الله عليه وسلم فاخبره، قال " ان شيت تصدقت بها ". فتصدق بها في الفقراء والمساكين وذي القربى والضيف
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டார்கள். மேலும், ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், ‘‘நாங்கள் விலை கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا عبد الصمد، قال سمعت ابي، حدثنا ابو التياح، قال حدثني انس بن مالك رضى الله عنه لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة امر بالمسجد وقال " يا بني النجار ثامنوني بحايطكم هذا ". قالوا لا والله لا نطلب ثمنه الا الى الله
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) அனுப்பிவைத்தார்கள். அந்தக் குதிரையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்திவைத்திருப்பதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குதிரையைத் தாமே வாங்கிக்கொள்ள (அனுமதி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை நீங்கள் வாங்க வேண்டாம்; கொடுத்த தர்மத்தை ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، حدثنا عبيد الله، قال حدثني نافع، عن ابن عمر رضى الله عنهما ان عمر، حمل على فرس له في سبيل الله اعطاها رسول الله صلى الله عليه وسلم ليحمل عليها رجلا، فاخبر عمر انه قد وقفها يبيعها، فسال رسول الله صلى الله عليه وسلم ان يبتاعها فقال " لا تبتعها، ولا ترجعن في صدقتك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் வாரிசுகள் பொற்காசையோ வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற)மாட்டார் கள்; என் துணைவியரின் செலவுகளையும் என் ஊழியரின் கூலியையும் தவிர நான் விட்டுச்செல்லும் அனைத்தும் தர்மமே யாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يقتسم ورثتي دينارا، ما تركت بعد نفقة نسايي وميونة عاملي فهو صدقة
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தம் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் நிபந்தனையிட்டார்கள்.29 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان عمر، اشترط في وقفه ان ياكل من وليه ويوكل صديقه غير متمول مالا