Loading...
Loading...
நூல்கள்
71 ஹதீஸ்கள்
ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்த...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, என் வீட்டில் (தங்கி) சிகிச்சை பெறுவதற்குத் தம்முடைய (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள்; அவர்களும் அனுமதி அளித்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.15 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம்...
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக; எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே. அல்லாஹ்வும் உனக்கு எண்ணி எண்ணியே தருவான். (பையில்) முடிந்து...
அன்னை மைமூனா பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்க வில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, ‘‘அல்லாஹ் வ...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். யாரது பெயர் (குலுக்கலில்) வருகிறத...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் முன்னாள் அடிமையான குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான மைமூனா (ரலி) அவர்கள் தம் அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரல...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?” என்று கேட்டேன். ‘‘அவ்விருவரில் எவரது வாச...
நபித்தோழர் ஸஅப் பின் ஜஸ் ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் அல்லது யிவத்தான்’ என்னும் இடத்தில் இருந்தபோது, ஒரு காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாக வழங்கினேன்...
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் யிஇப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப் பட்டுவந்தார். அவர் (ஸகாத் வசூலித் து...
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் உனக்கு இவ்வளவு (இவ்வளவு) தருவேன்” என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அந்த நிதி வந்து சேரவில்லை....
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள்; ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், ‘‘என் அன்பு மகனே! என்னுட...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘நான் அழிந்து விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர் ‘‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்...
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது தியாகியாகக் கொல்லப்பட்டார்கள். கடன் காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமையாக நடந்துகொண்டார்கள். நான் அல்லாஹ்வி...
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் இடப் பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர். நப...
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந் தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிர யாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று க...
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது; அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நப...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனித...