ஹதீஸ்கள்
#2601
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது தியாகியாகக் கொல்லப்பட்டார்கள். கடன் காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமையாக நடந்துகொண்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது பற்றிப்) பேசினேன். என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொண்டு, (மீதியுள்ள கடனை மன்னித்து) விமோசனம் அளிக்கும்படி நபியவர் கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை; கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, ‘‘நான் உன்னிடம் நாளை வருவேன்” என்று கூறினார்கள். அவ்வாறே, (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் வளம் உண்டாகப் பிரார்த்தித்தார்கள். நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர் களின் உரிமைகளை நிறைவேற்றினேன். அதன் பழங்களில் சிறிதளவு எங்களுக்கு எஞ்சியது. பிறகு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபொழுது அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்களிடம், ‘‘உமரே! கேளுங்கள்” என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا يونس،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، قال حدثني ابن كعب بن مالك، ان جابر بن عبد الله رضى الله عنهما اخبره ان اباه قتل يوم احد شهيدا، فاشتد الغرماء في حقوقهم، فاتيت رسول الله صلى الله عليه وسلم فكلمته، فسالهم ان يقبلوا ثمر حايطي، ويحللوا ابي، فابوا، فلم يعطهم رسول الله صلى الله عليه وسلم حايطي، ولم يكسره لهم، ولكن قال " ساغدو عليك ". فغدا علينا حتى اصبح، فطاف في النخل، ودعا في ثمره بالبركة، فجددتها، فقضيتهم حقوقهم، وبقي لنا من ثمرها بقية، ثم جيت رسول الله صلى الله عليه وسلم وهو جالس، فاخبرته بذلك، فقال رسول الله صلى الله عليه وسلم لعمر " اسمع وهو جالس يا عمر ". فقال الا يكون قد علمنا انك رسول الله، والله انك لرسول الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2601
- Book Index
- 35
Grades
- -
