Loading...

Loading...
நூல்கள்
௫௧ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து தூண்கள்மீது எழுப் பப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. (கடமையானோர்) ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.9 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، قال اخبرنا حنظلة بن ابي سفيان، عن عكرمة بن خالد، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، والحج، وصوم رمضان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக் கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட தாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.11 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا ابو عامر العقدي، قال حدثنا سليمان بن بلال، عن عبد الله بن دينار، عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " الايمان بضع وستون شعبة، والحياء شعبة من الايمان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே (உண்மை யான) முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர்) ஆவார்.12 இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، قال حدثنا شعبة، عن عبد الله بن ابي السفر، واسماعيل، عن الشعبي، عن عبد الله بن عمرو رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه ". قال ابو عبد الله وقال ابو معاوية حدثنا داود عن عامر قال سمعت عبد الله عن النبي صلى الله عليه وسلم. وقال عبد الاعلى عن داود عن عامر عن عبد الله عن النبي صلى الله عليه وسلم
அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந் தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவரது இஸ்லாமே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.13 அத்தியாயம் :
حدثنا سعيد بن يحيى بن سعيد القرشي، قال حدثنا ابي قال، حدثنا ابو بردة بن عبد الله بن ابي بردة، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه قال قالوا يا رسول الله اى الاسلام افضل قال " من سلم المسلمون من لسانه ويده
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.14 அத்தியாயம் :
حدثنا عمرو بن خالد، قال حدثنا الليث، عن يزيد، عن ابي الخير، عن عبد الله بن عمرو رضى الله عنهما ان رجلا، سال النبي صلى الله عليه وسلم اى الاسلام خير قال " تطعم الطعام، وتقرا السلام على من عرفت ومن لم تعرف
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்பு வதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.15 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن شعبة، عن قتادة، عن انس رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم. وعن حسين المعلم، قال حدثنا قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " لا يومن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு, அவருடைய தந்தையையும் அவருடைய பிள்ளையையும்விட நான் மிகவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை உள்ளவர் ஆகமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، قال حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " فوالذي نفسي بيده لا يومن احدكم حتى اكون احب اليه من والده وولده
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு, அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத் திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை கொண் டவர் ஆகமாட்டார்.16 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، قال حدثنا ابن علية، عن عبد العزيز بن صهيب، عن انس، عن النبي صلى الله عليه وسلم ح وحدثنا ادم، قال حدثنا شعبة، عن قتادة، عن انس، قال قال النبي صلى الله عليه وسلم " لا يومن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்துகொள்வார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோர் ஆவது. 2. அல்லாஹ்வுக்காகவே ஒருவரை அவர் நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப் பதைப் போன்று இறைமறுப்புக்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.17 இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا عبد الوهاب الثقفي، قال حدثنا ايوب، عن ابي قلابة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " ثلاث من كن فيه وجد حلاوة الايمان ان يكون الله ورسوله احب اليه مما سواهما، وان يحب المرء لا يحبه الا لله، وان يكره ان يعود في الكفر كما يكره ان يقذف في النار
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத் தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.18 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا شعبة، قال اخبرني عبد الله بن عبد الله بن جبر، قال سمعت انسا، عن النبي صلى الله عليه وسلم قال " اية الايمان حب الانصار، واية النفاق بغض الانصار
பத்ர் போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த ‘அகபா’ உடன்பாட்டில் கலந்துகொண்ட (பன்னிரண்டு) தலைவர் களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் இருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தை களைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்கள் எவர்மீதும் அவதூறை இட்டுக் கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் யார் (இவற்றையெல்லாம்) நிறைவேற்றுகிறாரோ, அவருக்குப் பிரதி பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப் பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகத்தில்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்” என்று சொன்னார்கள். உடனே நாங்கள் அதன்படி நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني ابو ادريس، عايذ الله بن عبد الله ان عبادة بن الصامت رضى الله عنه وكان شهد بدرا، وهو احد النقباء ليلة العقبة ان رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من اصحابه " بايعوني على ان لا تشركوا بالله شييا، ولا تسرقوا، ولا تزنوا، ولا تقتلوا اولادكم، ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم، ولا تعصوا في معروف، فمن وفى منكم فاجره على الله، ومن اصاب من ذلك شييا فعوقب في الدنيا فهو كفارة له، ومن اصاب من ذلك شييا ثم ستره الله، فهو الى الله ان شاء عفا عنه، وان شاء عاقبه ". فبايعناه على ذلك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்த செல்வமாக இருக்கும் நிலை தோன்றக்கூடும். அவர் குழப்பங் களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த் தைக் காத்துக்கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கனவாய், பள்ளத்தாக்கு போன்ற) இடங்களுக்கும் சென்றுவிடுவார். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن ابي صعصعة، عن ابيه، عن ابي سعيد الخدري، انه قال قال رسول الله صلى الله عليه وسلم " يوشك ان يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر، يفر بدينه من الفتن
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நல்லவற்றை(ச் செய்யுமாறு) மக்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களால் இயன்ற செயல்களையே (செய்யுமாறு) கட்டளை யிடுவார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். (ஆனால்,) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று (நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது; அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்)” என்று கூறி னார்கள். (இதைக் கேட்ட) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது. பிறகு “உங்கள் அனைவரைவிடவும் நான் (அல்லாஹ்வை) நன்கு அஞ்சி நடப்பவ னும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، قال اخبرنا عبدة، عن هشام، عن ابيه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا امرهم امرهم من الاعمال بما يطيقون قالوا انا لسنا كهييتك يا رسول الله، ان الله قد غفر لك ما تقدم من ذنبك وما تاخر. فيغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول " ان اتقاكم واعلمكم بالله انا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்துகொள்வார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும்விட அதிக நேசத்திற்குரியோர் ஆவது. 2. அல்லாஹ்வுக்காகவே ஓர் அடியாரை ஒருவர் நேசிப்பது. 3. ஒருவரை அல்லாஹ் இறைமறுப்பி லிருந்து காத்தபின், இறைமறுப்புக்குத் திரும்புவதைத் தாம் நெருப்பில் வீசப்படு வதைப் போன்று அவர் வெறுப்பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.20 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن قتادة، عن انس رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ثلاث من كن فيه وجد حلاوة الايمان من كان الله ورسوله احب اليه مما سواهما، ومن احب عبدا لا يحبه الا لله، ومن يكره ان يعود في الكفر بعد اذ انقذه الله، كما يكره ان يلقى في النار
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிடு வார்கள். பிறகு “யாருடைய உள்ளத்தில் கடுகு வித்தளவேனும் இறைநம்பிக்கை (ஈமான்) இருக்கிறதோ அவரை (நரகத் திலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளை யிடுவான். உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் ‘மழைநதி’யில் (நஹ்ருல் ஹயா) அல்லது ‘ஜீவநதி’யில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். -இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.- (அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக் கரையில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (நிறம்) மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் பயிர்கள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) வெளிவருவதை நீர் கண்டதில்லையா? இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், வுஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (மழைநதி அல்லது ஜீவநதி என்று சந்தேகத்தோடு அறிவிக்காமல்) ஜீவநதி என்று (உறுதியுடன்) அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள்அறிவிக்கிறார்கள். ஆயினும், (கடுகு வித்தளவு இறை நம்பிக்கை என்பதற்குப் பதிலாக) ‘கடுகளவு நன்மை’ என்று அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن عمرو بن يحيى المازني، عن ابيه، عن ابي سعيد الخدري، رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يدخل اهل الجنة الجنة، واهل النار النار، ثم يقول الله تعالى اخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من ايمان. فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحيا او الحياة، شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل، الم تر انها تخرج صفراء ملتوية ". قال وهيب حدثنا عمرو " الحياة ". وقال " خردل من خير
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டி ருக்கும்போது (கனவில்), மக்கள் (பல விதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும், மார்பை எட்டாத வையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் அவர்கள் (தரையில்) இழுபடும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள் அவர்களுடைய) மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று பதிலளித்தார்கள்.21 அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد الله، قال حدثنا ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، عن ابي امامة بن سهل، انه سمع ابا سعيد الخدري، يقول قال رسول الله صلى الله عليه وسلم " بينا انا نايم رايت الناس يعرضون على، وعليهم قمص منها ما يبلغ الثدي، ومنها ما دون ذلك، وعرض على عمر بن الخطاب وعليه قميص يجره ". قالوا فما اولت ذلك يا رسول الله قال " الدين
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென் றார்கள். வெட்கப்படுவது தொடர்பாக(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அவர் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், நாணமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك بن انس، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الانصار وهو يعظ اخاه في الحياء، فقال رسول الله صلى الله عليه وسلم " دعه فان الحياء من الايمان
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்காத வரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால், தம் உயிரையும் உடைமை களையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் எல்லை மீறினால்) தவிர! மேலும், (இரகசியமாகக் குற்றமிழைத் தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது.23 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد المسندي، قال حدثنا ابو روح الحرمي بن عمارة، قال حدثنا شعبة، عن واقد بن محمد، قال سمعت ابي يحدث، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمدا رسول الله، ويقيموا الصلاة، ويوتوا الزكاة، فاذا فعلوا ذلك عصموا مني دماءهم واموالهم الا بحق الاسلام، وحسابهم على الله
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் “எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை (ஈமான்) கொள்வது” என்று பதிலளித்தார்கள். “பிறகு எது?” என்று கேட்கப்பட்ட போது, “இறைவழியில் அறப்போர் புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்கப் பட்டபோது, “ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்” என்று சொன்னார்கள்.24 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، وموسى بن اسماعيل، قالا حدثنا ابراهيم بن سعد، قال حدثنا ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم سيل اى العمل افضل فقال " ايمان بالله ورسوله ". قيل ثم ماذا قال " الجهاد في سبيل الله ". قيل ثم ماذا قال " حج مبرور
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நான் அமர்ந்திருந்தபோது, அவர்கள் (மக்களில்) ஒரு குழுவினருக்கு (மட்டும் தர்மப் பொருட்களை) வழங்கினார் கள். அப்போது அவர்களில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு (ஏதும் வழங்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் (வெளித் தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்க” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்” என்றேன். அதற்கும் அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்க” என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதை மறுபடியும் சொன்னேன். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறி விட்டு, “சஅத்! நான் ஒருவருக்குக் கொடுக் கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரை விட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப் பதற்குக்) காரணம், (கொடுக்காதிருந்து விட்டால் வறுமையால் குற்றம் இழைத்து அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் முகம்குப்புறத் தள்ளிவிடுவானோ என்ற அச்சம்தான்” என்றார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عامر بن سعد بن ابي وقاص، عن سعد، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اعطى رهطا وسعد جالس، فترك رسول الله صلى الله عليه وسلم رجلا هو اعجبهم الى فقلت يا رسول الله ما لك عن فلان فوالله اني لاراه مومنا. فقال " او مسلما ". فسكت قليلا، ثم غلبني ما اعلم منه فعدت لمقالتي فقلت ما لك عن فلان فوالله اني لاراه مومنا فقال " او مسلما ". ثم غلبني ما اعلم منه فعدت لمقالتي وعاد رسول الله صلى الله عليه وسلم ثم قال " يا سعد، اني لاعطي الرجل وغيره احب الى منه، خشية ان يكبه الله في النار ". ورواه يونس وصالح ومعمر وابن اخي الزهري عن الزهري