ஹதீஸ்கள்
#27
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நான் அமர்ந்திருந்தபோது, அவர்கள் (மக்களில்) ஒரு குழுவினருக்கு (மட்டும் தர்மப் பொருட்களை) வழங்கினார் கள். அப்போது அவர்களில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு (ஏதும் வழங்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் (வெளித் தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்க” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்” என்றேன். அதற்கும் அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்க” என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதை மறுபடியும் சொன்னேன். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறி விட்டு, “சஅத்! நான் ஒருவருக்குக் கொடுக் கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரை விட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப் பதற்குக்) காரணம், (கொடுக்காதிருந்து விட்டால் வறுமையால் குற்றம் இழைத்து அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் முகம்குப்புறத் தள்ளிவிடுவானோ என்ற அச்சம்தான்” என்றார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عامر بن سعد بن ابي وقاص، عن سعد، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اعطى رهطا وسعد جالس، فترك رسول الله صلى الله عليه وسلم رجلا هو اعجبهم الى فقلت يا رسول الله ما لك عن فلان فوالله اني لاراه مومنا. فقال " او مسلما ". فسكت قليلا، ثم غلبني ما اعلم منه فعدت لمقالتي فقلت ما لك عن فلان فوالله اني لاراه مومنا فقال " او مسلما ". ثم غلبني ما اعلم منه فعدت لمقالتي وعاد رسول الله صلى الله عليه وسلم ثم قال " يا سعد، اني لاعطي الرجل وغيره احب الى منه، خشية ان يكبه الله في النار ". ورواه يونس وصالح ومعمر وابن اخي الزهري عن الزهري
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #27
- Book Index
- 20
Grades
- -
