ஹதீஸ்கள்
#22
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிடு வார்கள். பிறகு “யாருடைய உள்ளத்தில் கடுகு வித்தளவேனும் இறைநம்பிக்கை (ஈமான்) இருக்கிறதோ அவரை (நரகத் திலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளை யிடுவான். உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் ‘மழைநதி’யில் (நஹ்ருல் ஹயா) அல்லது ‘ஜீவநதி’யில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். -இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.- (அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக் கரையில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (நிறம்) மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் பயிர்கள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) வெளிவருவதை நீர் கண்டதில்லையா? இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், வுஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (மழைநதி அல்லது ஜீவநதி என்று சந்தேகத்தோடு அறிவிக்காமல்) ஜீவநதி என்று (உறுதியுடன்) அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள்அறிவிக்கிறார்கள். ஆயினும், (கடுகு வித்தளவு இறை நம்பிக்கை என்பதற்குப் பதிலாக) ‘கடுகளவு நன்மை’ என்று அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن عمرو بن يحيى المازني، عن ابيه، عن ابي سعيد الخدري، رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يدخل اهل الجنة الجنة، واهل النار النار، ثم يقول الله تعالى اخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من ايمان. فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحيا او الحياة، شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل، الم تر انها تخرج صفراء ملتوية ". قال وهيب حدثنا عمرو " الحياة ". وقال " خردل من خير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #22
- Book Index
- 15
Grades
- -
