Loading...

Loading...
நூல்கள்
௮௯ ஹதீஸ்கள்
மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர் களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்த போது, “உங்களில் யார் (போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களது முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள். உடனே மக்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் அவர்களுடைய சமூகத் தலைவர்கள் பேசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.42 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن ابي اويس، حدثني اسماعيل بن ابراهيم، عن عمه، موسى بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير، ان مروان بن الحكم، والمسور بن مخرمة، اخبراه ان رسول الله صلى الله عليه وسلم قال حين اذن لهم المسلمون في عتق سبى هوازن " اني لا ادري من اذن منكم ممن لم ياذن، فارجعوا حتى يرفع الينا عرفاوكم امركم ". فرجع الناس فكلمهم عرفاوهم، فرجعوا الى رسول الله صلى الله عليه وسلم فاخبروه ان الناس قد طيبوا واذنوا
முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக்கொள்வோமோ அதற்கு நேர்மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று) பேசுவதை (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا عاصم بن محمد بن زيد بن عبد الله بن عمر، عن ابيه، قال اناس لابن عمر انا ندخل على سلطاننا فنقول لهم خلاف ما نتكلم اذا خرجنا من عندهم قال كنا نعدها نفاقا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமான வன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.43 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن عراك، عن ابي هريرة، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " ان شر الناس ذو الوجهين، الذي ياتي هولاء بوجه وهولاء بوجه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(என் கணவர்) அபூசுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒரு மனிதர். நான் (செலவுக்காக) அவருடைய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைக்கும் போது மான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்” என்று சொன்னார்கள்.45 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها ان هند، قالت للنبي صلى الله عليه وسلم ان ابا سفيان رجل شحيح، فاحتاج ان اخذ من ماله. قال " خذي ما يكفيك وولدك بالمعروف
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகிறார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக் குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.46 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، قال اخبرني عروة بن الزبير، ان زينب ابنة ابي سلمة، اخبرته ان ام سلمة زوج النبي صلى الله عليه وسلم اخبرتها عن رسول الله صلى الله عليه وسلم انه سمع خصومة بباب حجرته فخرج اليهم فقال " انما انا بشر، وانه ياتيني الخصم، فلعل بعضكم ان يكون ابلغ من بعض، فاحسب انه صادق فاقضي له بذلك، فمن قضيت له بحق مسلم، فانما هي قطعة من النار، فلياخذها او ليتركها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக்கொண்டு “(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று சொன்னார்கள். அப்போது அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, “(இவன்) என் சகோதரன். என் தந்தை யின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்” என்று கூறினார். ஆகவே, இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர்பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவன்) என் சகோதரர் மகன். அவர் இவன் விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், “(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரது ஆதிக்கத்தில் (இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று (தீர்ப்புக்) கூறிவிட்டுப் பிறகு “தாய் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கின்றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான் உரியது” என்று சொன்னார் கள். பிறகு (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வியுமான சவ்தா (ரலி) அவர்களிடம், “இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்றே இருக்கக் கண்டதால்தான் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். அந்த மனிதர், தாம் இறக்கும்வரை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.47 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة، زوج النبي صلى الله عليه وسلم انها قالت كان عتبة بن ابي وقاص عهد الى اخيه سعد بن ابي وقاص ان ابن وليدة زمعة مني فاقبضه اليك. فلما كان عام الفتح اخذه سعد فقال ابن اخي، قد كان عهد الى فيه، فقام اليه عبد بن زمعة فقال اخي وابن وليدة ابي، ولد على فراشه. فتساوقا الى رسول الله صلى الله عليه وسلم فقال سعد يا رسول الله ابن اخي، كان عهد الى فيه. وقال عبد بن زمعة اخي وابن وليدة ابي، ولد على فراشه. فقال رسول الله صلى الله عليه وسلم " هو لك يا عبد بن زمعة ". ثم قال رسول الله صلى الله عليه وسلم " الولد للفراش، وللعاهر الحجر ". ثم قال لسودة بنت زمعة " احتجبي منه "، لما راى من شبهه بعتبة، فما راها حتى لقي الله تعالى
حدثنا اسحاق بن نصر، حدثنا عبد الرزاق، اخبرنا سفيان، عن منصور، والاعمش، عن ابي وايل، قال قال عبد الله قال النبي صلى الله عليه وسلم " لا يحلف على يمين صبر، يقتطع مالا وهو فيها فاجر، الا لقي الله وهو عليه غضبان ". فانزل الله {ان الذين يشترون بعهد الله} الاية. فجاء الاشعث وعبد الله يحدثهم فقال في نزلت وفي رجل خاصمته في بير فقال النبي صلى الله عليه وسلم " الك بينة ". قلت لا. قال " فليحلف ". قلت اذا يحلف. فنزلت {ان الذين يشترون بعهد الله} الاية
حدثنا اسحاق بن نصر، حدثنا عبد الرزاق، اخبرنا سفيان، عن منصور، والاعمش، عن ابي وايل، قال قال عبد الله قال النبي صلى الله عليه وسلم " لا يحلف على يمين صبر، يقتطع مالا وهو فيها فاجر، الا لقي الله وهو عليه غضبان ". فانزل الله {ان الذين يشترون بعهد الله} الاية. فجاء الاشعث وعبد الله يحدثهم فقال في نزلت وفي رجل خاصمته في بير فقال النبي صلى الله عليه وسلم " الك بينة ". قلت لا. قال " فليحلف ". قلت اذا يحلف. فنزلت {ان الذين يشترون بعهد الله} الاية
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது (அறை யின்) வாயிலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். இப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதன் காரணத்தால் அவர் உண்மையே சொல்வதாக எண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (உண்மை தெரியாமல் வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்தால், அது நரக நெருப்பின் துண்டேயாகும். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.51 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرني عروة بن الزبير، ان زينب بنت ابي سلمة، اخبرته عن امها ام سلمة، قالت سمع النبي صلى الله عليه وسلم جلبة خصام عند بابه فخرج عليهم فقال " انما انا بشر، وانه ياتيني الخصم، فلعل بعضا ان يكون ابلغ من بعض، اقضي له بذلك واحسب انه صادق، فمن قضيت له بحق مسلم فانما هي قطعة من النار، فلياخذها او ليدعها
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் தோழர்களில் ஒருவர், ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலை யாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.53 அத்தியாயம் :
حدثنا ابن نمير، حدثنا محمد بن بشر، حدثنا اسماعيل، حدثنا سلمة بن كهيل، عن عطاء، عن جابر، قال بلغ النبي صلى الله عليه وسلم ان رجلا من اصحابه اعتق غلاما عن دبر، لم يكن له مال غيره، فباعه بثمانماية درهم، ثم ارسل بثمنه اليه
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இறுதிக் காலத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார் கள். அப்போது உசாமாவின் தலைமை குறித்து (அவர் வயதில் சிறியவர் என்று) குறைகூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரது தலைமை குறித்து இப்போது நீங்கள் குறைகூறுகின்றீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் தலைமையையும்தான் நீங்கள் குறைகூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைக்குத் தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.54 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد العزيز بن مسلم، حدثنا عبد الله بن دينار، قال سمعت ابن عمر رضى الله عنهما يقول بعث رسول الله صلى الله عليه وسلم بعثا وامر عليهم اسامة بن زيد، فطعن في امارته، وقال " ان تطعنوا في امارته فقد كنتم تطعنون في امارة ابيه من قبله، وايم الله ان كان لخليقا للامرة، وان كان لمن احب الناس الى، وان هذا لمن احب الناس الى بعده
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற் கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن ابن جريج، سمعت ابن ابي مليكة، عن عايشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم " ابغض الرجال الى الله الالد الخصم
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்களை அழைப்பதற்காக) அனுப்பி னார்கள். அவர்களுக்கு ‘அஸ்லம்னா’ (‘நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண் டோம்’) என்று திருத்தமாகச் சொல்லவர வில்லை. ஆகவே, அவர்கள், ‘ஸபஃனா’, ‘ஸபஃனா’ (‘நாங்கள் மதம் மாறிவிட்டோம்; நாங்கள் மதம் மாறிவிட்டோம்’) என்று சொன்னார்கள். உடனே, காலித் (ரலி) அவர்கள் அம்மக்களைக் கொல்லவும் சிறைபிடிக்கவும் தொடங்கினார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவரால் கைது செய்யப்பட்டவரை ஒப்படைத்தார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டேன். என் தோழர்களில் எவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இதை நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) தெரிவித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! ‘காலித் பின் அல்வலீத்’ செய்த(த)வற்றுக்கும் எனக்கும் தொடர் பில்லையென்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை சொன் னார்கள்.56 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر، بعث النبي صلى الله عليه وسلم خالدا ح وحدثني نعيم اخبرنا عبد الله اخبرنا معمر عن الزهري عن سالم عن ابيه قال بعث النبي صلى الله عليه وسلم خالد بن الوليد الى بني جذيمة فلم يحسنوا ان يقولوا اسلمنا. فقالوا صبانا صبانا، فجعل خالد يقتل وياسر، ودفع الى كل رجل منا اسيره، فامر كل رجل منا ان يقتل اسيره، فقلت والله لا اقتل اسيري ولا يقتل رجل من اصحابي اسيره. فذكرنا ذلك للنبي صلى الله عليه وسلم فقال " اللهم اني ابرا اليك مما صنع خالد بن الوليد "، مرتين
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ அம்ர் (பின் அவ்ஃப்) குலத்தாரி டையே மோதல் ஏற்பட்டிருந்த விவரம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது லுஹ்ருத் தொழுகை தொழுவித்துவிட்டு அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகச் சென்றார்கள். இதற்கிடையே அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிடவே பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். பிறகு இகாமத் சொல்லிவிட்டு (நபியவர்கள் வெளியே சென்றுவிட்டதால்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நடத்துமாறு) கூறினார்கள். எனவே, அபூபக்ர் (தொழுகை நடத்த) முன்நின்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் (இமாமாக) இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்துவிட்டார்கள். (தொழுகை அணிகளை) விலக்கிக்கொண்டு வந்து (இமாமாக நின்று தொழுவித்துக்கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலுள்ள (முதல்) அணியில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக) கைதட்டினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழத் தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை திரும்பிப் பார்க்கவேமாட்டார்கள். ஆனால், மக்கள் நிறுத்தாமல் கைதட்டிக் கொண்டிருக்கக் கண்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னால் நபி (ஸல்) அவர் களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) அங்கேயே நின்று தொழுகையைத் தொடருமாறு (தமது கையால்) சைகை செய்தார்கள். இதோ இவ்வாறுதான் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கேயே சிறிது நேரம் இருந்து, நபி (ஸல்) அவர்கள் (தம்மைத் தொழுவிக்குமாறு) கூறியமைக்காக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு திரும்பாமல் அப்படியே பின்னோக்கி (முதல் அணிக்கு) நடந்தார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடிந்ததும், “அபூபக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தும் நீங்கள் தொழுகையைத் தொடராமல் இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்களுக்கே தலைமை தாங்கித் தொழுகை நடத்தும் தகுதி அபூகுஹாஃபாவின் மகனுக்கு (எனக்கு) இல்லை” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், “(தொழுகையில்) உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமானால் ஆண்களாயிருந்தால், அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லட்டும். பெண்களாயிருந்தால், (இமாமின் கவனத்தை ஈர்ப்பதற்காகக்) கைதட்டட்டும்!” என்று சொன்னார்கள்.57 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد، حدثنا ابو حازم المديني، عن سهل بن سعد الساعدي، قال كان قتال بين بني عمرو، فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فصلى الظهر، ثم اتاهم يصلح بينهم، فلما حضرت صلاة العصر فاذن بلال واقام وامر ابا بكر فتقدم، وجاء النبي صلى الله عليه وسلم وابو بكر في الصلاة، فشق الناس حتى قام خلف ابي بكر، فتقدم في الصف الذي يليه. قال وصفح القوم، وكان ابو بكر اذا دخل في الصلاة لم يلتفت حتى يفرغ، فلما راى التصفيح لا يمسك عليه التفت فراى النبي صلى الله عليه وسلم خلفه، فاوما اليه النبي صلى الله عليه وسلم ان امضه واوما بيده هكذا، ولبث ابو بكر هنية يحمد الله على قول النبي صلى الله عليه وسلم ثم مشى القهقرى، فلما راى النبي صلى الله عليه وسلم ذلك تقدم فصلى النبي صلى الله عليه وسلم بالناس، فلما قضى صلاته قال " يا ابا بكر ما منعك اذ اومات اليك ان لا تكون مضيت ". قال لم يكن لابن ابي قحافة ان يوم النبي صلى الله عليه وسلم. وقال للقوم " اذا نابكم امر، فليسبح الرجال، وليصفح النساء
(வேதஅறிவிப்பை எழுதி யோரில் ஒருவரான) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: யமாமா (போரில்) வீரர்கள் கொல்லப் பட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னை அழைத்து வரும்படி) ஆள னுப்பினார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமா போர், குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டு விட்டது. (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனில் பெரும்பகுதி (அந்த நெஞ்சங்களுடன் அழிந்து) போய்விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். ஆகவே, (கலீஃபாவான) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்று (உமர் (ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். இது விஷயமாக தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள். முடிவில், உமர் (ரலி) அவர்களின் மனதை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான்; இந்த விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள் கருதியதையே நானும் (உசிதமானதாகக்) கண்டேன். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), “நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்பட்டதில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக வஹீ (வேதஅறி விப்பை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, (தனித்தனி பிரதிகளில் பல் வேறு நபித்தோழர்களிடம் இருக்கும்) குர்ஆன் வசனங்களைத் தேடி (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலை களில் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணித்திருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டுமாறு எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று சொன்னார்கள். இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் இருவரும் கருதியதையே நானும் (உசிதமானதாகக்) கருதினேன். ஆகவே, நான் (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அகலமான பேரீச்சமட்டைகள், துண்டுத் தோல்கள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன். அப்போது நான் ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் இறுதி வசனத்தை ‘குஸைமா’ (ரலி) அவர்களிடம் அல்லது ‘அபூகுஸைமா’ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டேன். அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன். “உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்” என்று தொடங்கும் (9:128ஆவது) வசனமே அந்த வசனமாகும். (என் வாயிலாகத் திரட்டித் தொகுக் கப்பெற்ற) குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர் களை அல்லாஹ் இறக்கச்செய்யும் வரை அவர்களது வாழ்நாள் முழுக்க இருந்துவந்தது. பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை அவர்களது வாழ்நாள் முழுக்க இருந்துவந்தது. பிறகு (நபிகளாரின் துணைவியாரான) ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடம் இருந்துவந்தது. முஹம்மத் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், “(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘லிகாஃப்’ எனும் சொல்லுக்கு ‘ஓடு’ என்று பொருள்” எனக் கூறினார்கள்.58 அத்தியாயம் :
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங்கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்துவிட்டனர்.) அப்போது “அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு ‘குழியில்’ அல்லது ‘நீர்நிலையில்’ போடப்பட்டுவிட்டார்” என்ற செய்தி முஹய்யிஸா (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, முஹய்யிஸா (ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தான் அவரைக் கொன்றுவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை” என்று சொன்னார்கள். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப் பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் -இவர் வயதில் மூத்தவர்- (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். அப்போது கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா (ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி (ஸல்) அவர்கள், முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், “வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு” என்று சொன்னார்கள். எனவே, ஹுவய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒன்று, உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்” என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். “நாங்கள் அவரைக் கொல்லவில்லை” என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) ஆகியோரிடம், “(யூதர்கள்தான் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களி டம் சத்தியம் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள், அதற்கு அவர்கள் (மூவரும்), “யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்களே)” என்று கூறினர். ஆகவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி (ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.59 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் (நபியவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார். அவருடைய எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்தக் கிராமவாசி, “என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது அவன் இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) “உன் மகனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று என்னிடம் மக்கள் சொன்னார்கள். ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, ‘என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும்’ என்று கூறினர்” என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அந்த அடிமைப் பெண்ணும் (நூறு) ஆடுகளும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (தமக்கருகிலிருந்த அஸ்லம் குலத்தாரான உனைஸ் (ரலி) அவர்களைப் பார்த்து) “உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, (அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால்,) அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.60 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا ابن ابي ذيب، حدثنا الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابي هريرة، وزيد بن خالد الجهني، قالا جاء اعرابي فقال يا رسول الله اقض بيننا بكتاب الله فقام خصمه فقال صدق فاقض بيننا بكتاب الله. فقال الاعرابي ان ابني كان عسيفا على هذا فزنى بامراته، فقالوا لي على ابنك الرجم. ففديت ابني منه بماية من الغنم ووليدة، ثم سالت اهل العلم فقالوا انما على ابنك جلد ماية وتغريب عام. فقال النبي صلى الله عليه وسلم " لاقضين بينكما بكتاب الله، اما الوليدة والغنم فرد عليك، وعلى ابنك جلد ماية وتغريب عام، واما انت يا انيس لرجل فاغد على امراة هذا فارجمها ". فغدا عليها انيس فرجمها
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் (நபியவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார். அவருடைய எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்தக் கிராமவாசி, “என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது அவன் இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) “உன் மகனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று என்னிடம் மக்கள் சொன்னார்கள். ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, ‘என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும்’ என்று கூறினர்” என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அந்த அடிமைப் பெண்ணும் (நூறு) ஆடுகளும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (தமக்கருகிலிருந்த அஸ்லம் குலத்தாரான உனைஸ் (ரலி) அவர்களைப் பார்த்து) “உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, (அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால்,) அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.60 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا ابن ابي ذيب، حدثنا الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابي هريرة، وزيد بن خالد الجهني، قالا جاء اعرابي فقال يا رسول الله اقض بيننا بكتاب الله فقام خصمه فقال صدق فاقض بيننا بكتاب الله. فقال الاعرابي ان ابني كان عسيفا على هذا فزنى بامراته، فقالوا لي على ابنك الرجم. ففديت ابني منه بماية من الغنم ووليدة، ثم سالت اهل العلم فقالوا انما على ابنك جلد ماية وتغريب عام. فقال النبي صلى الله عليه وسلم " لاقضين بينكما بكتاب الله، اما الوليدة والغنم فرد عليك، وعلى ابنك جلد ماية وتغريب عام، واما انت يا انيس لرجل فاغد على امراة هذا فارجمها ". فغدا عليها انيس فرجمها
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக் குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக்காட்டி வந்தேன். உமர் (ரலி) அவர்கள் தம்மிடம் அலீ (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் இருக்க, (மொழிபெயர்ப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் ஹாத்திப் (ரலி) அவர்களி டம்), “இந்த(க் கர்ப்பிணி)ப் பெண் என்ன சொல்கிறாள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இவள் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறாள்” என்று சொன்னார்கள். அபூஜம்ரா (ரஹ்) அவர்கள், “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அவர்களிடம் தீர்ப்பு கேட்டு வரும்) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப் பாளனாக இருந்துவந்தேன்” என்று கூறுகிறார்கள். சிலர், “ஆட்சியாளர் மற்றும் நீதிபதிக்கு இரு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை (ஒருவர் போதாது)” என்று கூறுகின்றனர். அத்தியாயம் :
وقال خارجة بن زيد بن ثابت عن زيد بن ثابت، ان النبي صلى الله عليه وسلم امره ان يتعلم كتاب اليهود، حتى كتبت للنبي صلى الله عليه وسلم كتبه، واقراته كتبهم اذا كتبوا اليه، وقال عمر وعنده علي وعبد الرحمن وعثمان ماذا تقول هذه قال عبد الرحمن بن حاطب فقلت تخبرك بصاحبهما الذي صنع بهما. وقال ابو جمرة كنت اترجم بين ابن عباس وبين الناس. وقال بعض الناس لا بد للحاكم من مترجمين
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக்ளீயஸ், நான் குறைஷி வணிகக் குழு ஒன்றில் இருந்தபோது எனக்கு ஆளனுப்பி அழைத்துவரச் செய்துவிட்டு, தம் மொழிபெயர்ப்பாளரை நோக்கி, “நான் இவரிடம் (சில கேள்விகள்) கேட்பேன்; இவர் பதில் கூறும்போது பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார் என்று தெரிவித்துவிட வேண்டும் என இவருடைய நண்பர்களிடம் கூறிவிடு” என்று சொன்னார். பிறகு முழு ஹதீஸையும் சொன்னார்கள். (இறுதியில்) அவர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், “நீர் சொல்வது உண்மை யாயிருந்தால் என்னுடைய இவ்விரு பாதங்கள் இருக்கும் இடத்திற்கு விரைவில் அவர் (முஹம்மத்) அதிபராகிவிடுவார் என அவரிடம் சொல்” என்று சொன்னார்.61 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرني عبيد الله بن عبد الله، ان عبد الله بن عباس، اخبره ان ابا سفيان بن حرب اخبره ان هرقل ارسل اليه في ركب من قريش، ثم قال لترجمانه قل لهم اني سايل هذا، فان كذبني فكذبوه. فذكر الحديث فقال للترجمان قل له ان كان ما تقول حقا فسيملك موضع قدمى هاتين
حدثنا محمد بن عبيد الله ابو ثابت، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن عبيد بن السباق، عن زيد بن ثابت، قال بعث الى ابو بكر لمقتل اهل اليمامة وعنده عمر فقال ابو بكر ان عمر اتاني فقال ان القتل قد استحر يوم اليمامة بقراء القران، واني اخشى ان يستحر القتل بقراء القران في المواطن كلها، فيذهب قران كثير، واني ارى ان تامر بجمع القران. قلت كيف افعل شييا لم يفعله رسول الله صلى الله عليه وسلم فقال عمر هو والله خير. فلم يزل عمر يراجعني في ذلك حتى شرح الله صدري للذي شرح له صدر عمر، ورايت في ذلك الذي راى عمر. قال زيد قال ابو بكر وانك رجل شاب عاقل لا نتهمك، قد كنت تكتب الوحى لرسول الله صلى الله عليه وسلم فتتبع القران فاجمعه. قال زيد فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان باثقل على مما كلفني من جمع القران. قلت كيف تفعلان شييا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال ابو بكر هو والله خير. فلم يزل يحث مراجعتي حتى شرح الله صدري للذي شرح الله له صدر ابي بكر وعمر، ورايت في ذلك الذي رايا، فتتبعت القران اجمعه من العسب والرقاع واللخاف وصدور الرجال، فوجدت اخر سورة التوبة {لقد جاءكم رسول من انفسكم} الى اخرها مع خزيمة او ابي خزيمة فالحقتها في سورتها، وكانت الصحف عند ابي بكر حياته حتى توفاه الله عز وجل، ثم عند عمر حياته حتى توفاه الله، ثم عند حفصة بنت عمر. قال محمد بن عبيد الله اللخاف يعني الخزف
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي ليلى، ح حدثنا اسماعيل، حدثني مالك، عن ابي ليلى بن عبد الله بن عبد الرحمن بن سهل، عن سهل بن ابي حثمة، انه اخبره هو، ورجال، من كبراء قومه ان عبد الله بن سهل ومحيصة خرجا الى خيبر من جهد اصابهم، فاخبر محيصة ان عبد الله قتل وطرح في فقير او عين، فاتى يهود فقال انتم والله قتلتموه. قالوا ما قتلناه والله. ثم اقبل حتى قدم على قومه فذكر لهم، واقبل هو واخوه حويصة وهو اكبر منه وعبد الرحمن بن سهل، فذهب ليتكلم وهو الذي كان بخيبر فقال النبي صلى الله عليه وسلم لمحيصة " كبر كبر ". يريد السن، فتكلم حويصة ثم تكلم محيصة فقال رسول الله صلى الله عليه وسلم " اما ان يدوا صاحبكم، واما ان يوذنوا بحرب ". فكتب رسول الله صلى الله عليه وسلم اليهم به، فكتب ما قتلناه. فقال رسول الله صلى الله عليه وسلم لحويصة ومحيصة وعبد الرحمن " اتحلفون وتستحقون دم صاحبكم ". قالوا لا. قال " افتحلف لكم يهود ". قالوا ليسوا بمسلمين. فوداه رسول الله صلى الله عليه وسلم من عنده ماية ناقة حتى ادخلت الدار. قال سهل فركضتني منها ناقة