ஹதீஸ்கள்
#7195
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக் குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக்காட்டி வந்தேன். உமர் (ரலி) அவர்கள் தம்மிடம் அலீ (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் இருக்க, (மொழிபெயர்ப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் ஹாத்திப் (ரலி) அவர்களி டம்), “இந்த(க் கர்ப்பிணி)ப் பெண் என்ன சொல்கிறாள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இவள் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறாள்” என்று சொன்னார்கள். அபூஜம்ரா (ரஹ்) அவர்கள், “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அவர்களிடம் தீர்ப்பு கேட்டு வரும்) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப் பாளனாக இருந்துவந்தேன்” என்று கூறுகிறார்கள். சிலர், “ஆட்சியாளர் மற்றும் நீதிபதிக்கு இரு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை (ஒருவர் போதாது)” என்று கூறுகின்றனர். அத்தியாயம் :
وقال خارجة بن زيد بن ثابت عن زيد بن ثابت، ان النبي صلى الله عليه وسلم امره ان يتعلم كتاب اليهود، حتى كتبت للنبي صلى الله عليه وسلم كتبه، واقراته كتبهم اذا كتبوا اليه، وقال عمر وعنده علي وعبد الرحمن وعثمان ماذا تقول هذه قال عبد الرحمن بن حاطب فقلت تخبرك بصاحبهما الذي صنع بهما. وقال ابو جمرة كنت اترجم بين ابن عباس وبين الناس. وقال بعض الناس لا بد للحاكم من مترجمين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7195
- Book Index
- 56
Grades
- -
