Loading...

Loading...
நூல்கள்
௮௯ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.38 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن عثمان، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، اخبرني حمزة بن عبد الله بن عمر، انه سمع ابن عمر رضى الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم " اذا انزل الله بقوم عذابا، اصاب العذاب من كان فيهم، ثم بعثوا على اعمالهم
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அபூஜஅஃபர் மன்சூர் ஆட்சிக் காலத்தில் இராக்கிலுள்ள) கூஃபாவில் அபூமூசா இஸ்ராயீல் அவர்களை நான் சந்தித்தேன். அன்னார் (கூஃபாவின் நீதிபதியான) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்களிடம் வந்திருந்தார்கள். அபூமூசா (ரஹ்) அவர்கள், “என்னை (கூஃபாவின் ஆளுநர்) ஈசா பின் மூசாவிடம் அழைத்துச் செல்லுங்கள்; அவருக்கு நான் உபதேசம் செய்ய வேண்டும்” என்று இப்னு ஷுப்ருமாவிடம் கூறினார்கள். (ஆளுநர் ஈசா) அபூமூசா விஷயத்தில் (ஏதும் செய்துவிடுவார் என்று) இப்னு ஷுப்ருமா பயந்துவிட்டார்போலும். அதனால் (அபூமூசாவின் கோரிக்கையை ஏற்று) அவர் செயல்படவில்லை. பின்னர் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாக அபூமூசா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் பெரும் படையணிகளுடன் முஆவியா (ரலி) அவர்களை நோக்கிப் பயணமானார்கள். (இதை அறிந்த முஆவியா (ரலி) அவர்களுடைய ஆலோசகர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடம், “தன் எதிரணியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யாத வரையில் பின்வாங்காத பெரும் படையணியை நான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள். முஆவியா (ரலி) அவர்கள், “(இவர்கள் கொல்லப்பட்டுவிட்டால்) முஸ்லிம்களின் (வருங்காலச்) சந்ததிகளுக்கு (பொறுப்பேற்க) யார் இருக்கிறார்கள்?” என்று கேட்க, அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “நான் (இருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களும், “நாங்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் சமாதானம் செய்துகொள்ளும்படி கூறுகிறோம்” என்று சொன்னார்கள். தொடர்ந்து ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டி ருந்தபோது ஹசன் (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானம் செய்துவைப்பான்” என்று கூறினார்கள் என அபூபக்ரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.39 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا اسراييل ابو موسى، ولقيته، بالكوفة جاء الى ابن شبرمة فقال ادخلني على عيسى فاعظه. فكان ابن شبرمة خاف عليه فلم يفعل. قال حدثنا الحسن قال لما سار الحسن بن علي رضى الله عنهما الى معاوية بالكتايب. قال عمرو بن العاص لمعاوية ارى كتيبة لا تولي حتى تدبر اخراها. قال معاوية من لذراري المسلمين. فقال انا. فقال عبد الله بن عامر وعبد الرحمن بن سمرة نلقاه فنقول له الصلح. قال الحسن ولقد سمعت ابا بكرة قال بينا النبي صلى الله عليه وسلم يخطب جاء الحسن فقال النبي صلى الله عليه وسلم " ابني هذا سيد ولعل الله ان يصلح به بين فيتين من المسلمين
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா (ரலி) அவர்கள் என்னை அலீ (ரலி) அவர்களிடம் அனுப்பி, “இப்போது அவர் (அலீ-ரலி) உன்னிடம் உம் தோழர் (உசாமா, ஜமல் மற்றும் ஸிஃப்பீன் போர்களில் எனக்கு ஆதரவளிக்காமல்) பின் வாங்கியதற்குக் காரணம் என்ன? என்று கேட்பார். நீங்கள் சிங்கத்தின் தாடைக்குள் இருந்தாலும் உங்களுடன் இருப்பதையே நான் விரும்புவேன்; ஆனால், (முஸ்லிம்களிடையே நடக்கும்) இந்தச் சண்டையில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் கூறுவதாக அவரிடம் சொல்” என்று சொன்னார்கள். (நானும் அவ்வாறே அலீ (ரலி) அவர்களிடம் சென்று சொன்னேன்.) அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தி லிருந்து) எனக்கு எதுவும் கொடுக்க வில்லை. ஆகவே, நான் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) ஆகியோரிடம் சென்றேன். அவர்கள் எனது வாகனத்தில் அது (சுமக்க முடிந்த அளவுக்கு) எனக்காக (அன்பளிப்புப் பொருள்களை) ஏற்றியனுப்பினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال قال عمرو اخبرني محمد بن علي، ان حرملة، مولى اسامة اخبره قال عمرو وقد رايت حرملة قال ارسلني اسامة الى علي وقال انه سيسالك الان فيقول ما خلف صاحبك فقل له يقول لك لو كنت في شدق الاسد لاحببت ان اكون معك فيه، ولكن هذا امر لم اره، فلم يعطني شييا، فذهبت الى حسن وحسين وابن جعفر فاوقروا لي راحلتي
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் யஸீத் பின் முஆவியாவுக்கு அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக்கொண்டபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்றுதிரட்டி, “மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவனுக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமை நாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் வழிமுறைப்படி நாம் இந்த மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்து விட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போர் நடத்துவதைவிடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்துகொடுத்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக்கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக்கூடியதாக இருக்கும்” என்று சொன்னார்கள்.41 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ايوب، عن نافع، قال لما خلع اهل المدينة يزيد بن معاوية جمع ابن عمر حشمه وولده فقال اني سمعت النبي صلى الله عليه وسلم يقول " ينصب لكل غادر لواء يوم القيامة ". وانا قد بايعنا هذا الرجل على بيع الله ورسوله، واني لا اعلم غدرا اعظم من ان يبايع رجل على بيع الله ورسوله، ثم ينصب له القتال، واني لا اعلم احدا منكم خلعه، ولا بايع في هذا الامر، الا كانت الفيصل بيني وبينه
அபுல் மின்ஹால் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு ஸியாத் (பஸ்ராவிலிருந்து வெளியேறி ஷாம் நாட்டுக்கு வர, அங்கு) மர்வான் பின் அல்ஹகம் ஷாம் நாட்டில் (கிளர்ச்சியை ஆரம்பித்து) இருந்தபோது, மேலும் (அதே நேரத்தில்) மக்காவில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பஸ்ராவில் காரிஜிய்யாக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது நான் என் தந்தையுடன் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அன்னார் பேரீச்சங்கழியாலான உப்பரிகை ஒன்றில் அமர்ந்திருக்க அவர்களது இல்லத்தினுள் நுழைந்து அவர்களிடம் நாங்கள் அமர்ந்து கொண்டோம்.42 அப்போது என் தந்தை (சலாமா) அபூபர்ஸா (ரலி) அவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் எண்ணத்தில் பேசத் தொடங்கினார்கள். “அபூபர்ஸா! மக்கள் எந்த விஷயத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று என் தந்தை கேட்டார்கள். அப்போது அபூபர்ஸா (ரலி) அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் இதுதான். (அன்னார் கூறினார்கள்:) குறைஷிக் குடும்பங்கள் சிலவற்றின் மீது நான் கோபம் கொண்டவனாய் மாறியதற்கு அல்லாஹ்விடம் நற்பலனை எதிர்பார்க்கிறேன். (குறைஷியரிடம் நான் கூறினேன்:) அரபுகளே! நீங்கள் இழிவு, பொருளாதாரக் குறைவு மற்றும் வழிகேடு ஆகிய (மோசமான) நிலைகளில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அல்லாஹ், இஸ்லாத்தின் மூலமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும் உங்களைக் காப்பாற்றினான். அதன் விளைவாக நீங்கள் காண்கின்ற இந்த (கண்ணியம், வளமிக்க வாழ்வு, நல்வழி ஆகிய நல்ல) நிலைகளை அடைந்தீர்கள். இந்த உலக (மோக)ம் எத்தகைய தென்றால், உங்களுக்கிடையே அது சீர்கேட்டை(யும் குழப்பத்தையும்) விளைவித்துவிட்டது. ஷாம் நாட்டி óருக்கின்றாரே அவர் (மர்வான் பின் அல்ஹகம்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார். (இங்கு பஸ்ராவில்) உங்கள் முன்னே இருக்கின்றார்களே அவர்களும் (காரிஜிய்யாக்கள்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார்கள். மக்காவில் இருக்கின்றாரே அவரும் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்) உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابو شهاب، عن عوف، عن ابي المنهال، قال لما كان ابن زياد ومروان بالشام، ووثب ابن الزبير بمكة، ووثب القراء بالبصرة، فانطلقت مع ابي الى ابي برزة الاسلمي حتى دخلنا عليه في داره وهو جالس في ظل علية له من قصب، فجلسنا اليه فانشا ابي يستطعمه الحديث فقال يا ابا برزة الا ترى ما وقع فيه الناس فاول شىء سمعته تكلم به اني احتسبت عند الله اني اصبحت ساخطا على احياء قريش، انكم يا معشر العرب كنتم على الحال الذي علمتم من الذلة والقلة والضلالة، وان الله انقذكم بالاسلام وبمحمد صلى الله عليه وسلم حتى بلغ بكم ما ترون، وهذه الدنيا التي افسدت بينكم، ان ذاك الذي بالشام والله ان يقاتل الا على الدنيا
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்த நயவஞ்சகர்களைவிட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டுவந்தார்கள். இன்றோ இவர்கள் பகிரங்கமாகச் செயல்படுகின்றார்கள்.43 அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، عن واصل الاحدب، عن ابي وايل، عن حذيفة بن اليمان، قال ان المنافقين اليوم شر منهم على عهد النبي صلى الله عليه وسلم كانوا يوميذ يسرون واليوم يجهرون
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி (ஸல்) அவர்களது காலத்தில்தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப்பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.44 அத்தியாயம் :
حدثنا خلاد، حدثنا مسعر، عن حبيب بن ابي ثابت، عن ابي الشعثاء، عن حذيفة، قال انما كان النفاق على عهد النبي صلى الله عليه وسلم فاما اليوم فانما هو الكفر بعد الايمان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும் போது, “அந்தோ! நான் இவரது இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.45 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தவ்ஸ்’ குலப் பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال قال سعيد بن المسيب اخبرني ابو هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى تضطرب اليات نساء دوس على ذي الخلصة ". وذو الخلصة طاغية دوس التي كانوا يعبدون في الجاهلية
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘கஹ்தான்’ குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச்செல்லாத வரை மறுமை நாள் வராது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثني سليمان، عن ثور، عن ابي الغيث، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى يخرج رجل من قحطان يسوق الناس بعصاه
அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது.49 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال سعيد بن المسيب اخبرني ابو هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى تخرج نار من ارض الحجاز، تضيء اعناق الابل ببصرى
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் “தங்கமலை ஒன்றை வெளிப்படுத் தவுள்ளது” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن سعيد الكندي، حدثنا عقبة بن خالد، حدثنا عبيد الله، عن خبيب بن عبد الرحمن، عن جده، حفص بن عاصم عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يوشك الفرات ان يحسر عن كنز من ذهب، فمن حضره فلا ياخذ منه شييا ". قال عقبة وحدثنا عبيد الله، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم مثله الا انه قال " يحسر عن جبل من ذهب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இப்போதே) தானதர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்துசெல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார். இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: அறிவிப்பாளர் ஹாரிஸா (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، حدثنا معبد، سمعت حارثة بن وهب، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " تصدقوا، فسياتي على الناس زمان يمشي الرجل بصدقته، فلا يجد من يقبلها ". قال مسدد حارثة اخو عبيد الله بن عمر لامه قاله ابو عبد الله
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோ டொன்று சண்டையிட்டுக்கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும்.51 மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.52 மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமை நாள் வராது..53 மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் வராது. அப்போது செல்வன் தனது தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லிவிடுவார்..54 மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, ‘அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது..55 சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக் காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறை நம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.56 இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்துவைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவுமாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவுமாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்)கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டுசென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதை உண்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن عبد الرحمن، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى تقتتل فيتان عظيمتان، يكون بينهما مقتلة عظيمة، دعوتهما واحدة، وحتى يبعث دجالون كذابون، قريب من ثلاثين، كلهم يزعم انه رسول الله، وحتى يقبض العلم، وتكثر الزلازل، ويتقارب الزمان، وتظهر الفتن، ويكثر الهرج وهو القتل، وحتى يكثر فيكم المال فيفيض، حتى يهم رب المال من يقبل صدقته، وحتى يعرضه فيقول الذي يعرضه عليه لا ارب لي به. وحتى يتطاول الناس في البنيان، وحتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه. وحتى تطلع الشمس من مغربها، فاذا طلعت وراها الناس يعني امنوا اجمعون، فذلك حين لا ينفع نفسا ايمانها لم تكن امنت من قبل، او كسبت في ايمانها خيرا، ولتقومن الساعة وقد نشر الرجلان ثوبهما بينهما، فلا يتبايعانه ولا يطويانه، ولتقومن الساعة وقد انصرف الرجل بلبن لقحته فلا يطعمه، ولتقومن الساعة وهو يليط حوضه فلا يسقي فيه، ولتقومن الساعة وقد رفع اكلته الى فيه فلا يطعمها
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிக மாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், “அவனால் உமக்கென்ன தீங்கு?” என்று கேட்டார்கள். நான், “(அச்சம்தான்.) ஏனெனில், தஜ்ஜாலு டன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இது என்ன (பிரமாதம்)? (அவன்மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கின்றானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، حدثنا اسماعيل، حدثني قيس، قال قال لي المغيرة بن شعبة ما سال احد النبي صلى الله عليه وسلم عن الدجال ما سالته وانه قال لي " ما يضرك منه ". قلت لانهم يقولون ان معه جبل خبز ونهر ماء. قال " هو اهون على الله من ذلك
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “(தஜ்ஜால்) (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று வலக் கண் குருடானவனாக இருப்பான்” என்று சொன்னார்கள். இதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து கேட்டுச் சொன்னதாகவே நான் கருதுகின்றேன்.58 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ايوب، عن نافع، عن ابن عمر، اراه عن النبي صلى الله عليه وسلم قال " اعور عين اليمنى، كانها عنبة طافية
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.59 அத்தியாயம் :
حدثنا سعد بن حفص، حدثنا شيبان، عن يحيى، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، قال قال النبي صلى الله عليه وسلم " يجيء الدجال حتى ينزل في ناحية المدينة، ثم ترجف المدينة ثلاث رجفات، فيخرج اليه كل كافر ومنافق
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸீஹுத் தஜ்ஜாலைக் குறித்த அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن جده، عن ابي بكرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا يدخل المدينة رعب المسيح الدجال، ولها يوميذ سبعة ابواب، على كل باب ملكان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவிற்குள் மஸீஹுத் தஜ்ஜால் குறித்த அச்சம் புகாது. அந்நாளில் மதீனாவிற்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இராக்கிலுள்ள) பஸ்ரா சென்றேன். (அங்கு) அபூபக்ரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا محمد بن بشر، حدثنا مسعر، حدثنا سعد بن ابراهيم، عن ابيه، عن ابي بكرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا يدخل المدينة رعب المسيح، لها يوميذ سبعة ابواب، على كل باب ملكان ". قال وقال ابن اسحاق عن صالح بن ابراهيم، عن ابيه، قال قدمت البصرة فقال لي ابو بكرة سمعت النبي صلى الله عليه وسلم بهذا
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றியபின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது, “நான் உங்களை அவனைப் பற்றி அச்சுறுத்தி எச்சரிக்கின்றேன். இறைத்தூதர் எவரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. ஆயினும், எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாருக்குத் தெரிவிக்காத ஒரு தகவலை நான் உங்களுக்குச் சொல்வேன்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم، عن صالح، عن ابن شهاب، عن سالم بن عبد الله، ان عبد الله بن عمر رضى الله عنهما قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس فاثنى على الله بما هو اهله ثم ذكر الدجال فقال " اني لانذركموه، وما من نبي الا وقد انذره قومه، ولكني ساقول لكم فيه قولا لم يقله نبي لقومه، انه اعور وان الله ليس باعور