ஹதீஸ்கள்
#7109
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அபூஜஅஃபர் மன்சூர் ஆட்சிக் காலத்தில் இராக்கிலுள்ள) கூஃபாவில் அபூமூசா இஸ்ராயீல் அவர்களை நான் சந்தித்தேன். அன்னார் (கூஃபாவின் நீதிபதியான) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்களிடம் வந்திருந்தார்கள். அபூமூசா (ரஹ்) அவர்கள், “என்னை (கூஃபாவின் ஆளுநர்) ஈசா பின் மூசாவிடம் அழைத்துச் செல்லுங்கள்; அவருக்கு நான் உபதேசம் செய்ய வேண்டும்” என்று இப்னு ஷுப்ருமாவிடம் கூறினார்கள். (ஆளுநர் ஈசா) அபூமூசா விஷயத்தில் (ஏதும் செய்துவிடுவார் என்று) இப்னு ஷுப்ருமா பயந்துவிட்டார்போலும். அதனால் (அபூமூசாவின் கோரிக்கையை ஏற்று) அவர் செயல்படவில்லை. பின்னர் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாக அபூமூசா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் பெரும் படையணிகளுடன் முஆவியா (ரலி) அவர்களை நோக்கிப் பயணமானார்கள். (இதை அறிந்த முஆவியா (ரலி) அவர்களுடைய ஆலோசகர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடம், “தன் எதிரணியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யாத வரையில் பின்வாங்காத பெரும் படையணியை நான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள். முஆவியா (ரலி) அவர்கள், “(இவர்கள் கொல்லப்பட்டுவிட்டால்) முஸ்லிம்களின் (வருங்காலச்) சந்ததிகளுக்கு (பொறுப்பேற்க) யார் இருக்கிறார்கள்?” என்று கேட்க, அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “நான் (இருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களும், “நாங்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் சமாதானம் செய்துகொள்ளும்படி கூறுகிறோம்” என்று சொன்னார்கள். தொடர்ந்து ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டி ருந்தபோது ஹசன் (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானம் செய்துவைப்பான்” என்று கூறினார்கள் என அபூபக்ரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.39 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا اسراييل ابو موسى، ولقيته، بالكوفة جاء الى ابن شبرمة فقال ادخلني على عيسى فاعظه. فكان ابن شبرمة خاف عليه فلم يفعل. قال حدثنا الحسن قال لما سار الحسن بن علي رضى الله عنهما الى معاوية بالكتايب. قال عمرو بن العاص لمعاوية ارى كتيبة لا تولي حتى تدبر اخراها. قال معاوية من لذراري المسلمين. فقال انا. فقال عبد الله بن عامر وعبد الرحمن بن سمرة نلقاه فنقول له الصلح. قال الحسن ولقد سمعت ابا بكرة قال بينا النبي صلى الله عليه وسلم يخطب جاء الحسن فقال النبي صلى الله عليه وسلم " ابني هذا سيد ولعل الله ان يصلح به بين فيتين من المسلمين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7109
- Book Index
- 56
Grades
- -
