ஹதீஸ்கள்
#7111
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் யஸீத் பின் முஆவியாவுக்கு அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக்கொண்டபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்றுதிரட்டி, “மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவனுக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமை நாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் வழிமுறைப்படி நாம் இந்த மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்து விட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போர் நடத்துவதைவிடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்துகொடுத்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக்கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக்கூடியதாக இருக்கும்” என்று சொன்னார்கள்.41 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7111
- Book Index
- 58
Grades
- -