Loading...

Loading...
நூல்கள்
௫௭ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உனது உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்” என்று சொன் னார்கள். அந்த மனிதர், “பிறகு எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவி யுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்” எனும் (25:68ஆவது) வசனத்தை அருளினான்.3 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن الاعمش، عن ابي وايل، عن عمرو بن شرحبيل، قال قال عبد الله قال رجل يا رسول الله اى الذنب اكبر عند الله قال " ان تدعو لله ندا، وهو خلقك ". قال ثم اى قال " ثم ان تقتل ولدك، ان يطعم معك ". قال ثم اى قال " ثم ان تزاني بحليلة جارك ". فانزل الله عز وجل تصديقها {والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق اثاما} الاية
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தமது மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي، حدثنا اسحاق بن سعيد بن عمرو بن سعيد بن العاص، عن ابيه، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " لن يزال المومن في فسحة من دينه، ما لم يصب دما حراما
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப்படுகுழிகளில் ஒன்றாகும். இதை சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني احمد بن يعقوب، حدثنا اسحاق، سمعت ابي يحدث، عن عبد الله بن عمر، قال ان من ورطات الامور التي لا مخرج لمن اوقع نفسه فيها، سفك الدم الحرام بغير حله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத்தான் இருக்கும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله، قال قال النبي صلى الله عليه وسلم " اول ما يقضى بين الناس في الدماء
حدثنا عبدان، حدثنا عبد الله، حدثنا يونس، عن الزهري، حدثنا عطاء بن يزيد، ان عبيد الله بن عدي، حدثه ان المقداد بن عمرو الكندي حليف بني زهرة حدثه وكان، شهد بدرا مع النبي صلى الله عليه وسلم انه قال يا رسول الله ان لقيت كافرا فاقتتلنا، فضرب يدي بالسيف فقطعها، ثم لاذ بشجرة وقال اسلمت لله. اقتله بعد ان قالها قال رسول الله صلى الله عليه وسلم " لا تقتله ". قال يا رسول الله فانه طرح احدى يدى، ثم قال بعد ما قطعها، اقتله قال " لا تقتله، فان قتلته فانه بمنزلتك قبل ان تقتله، وانت بمنزلته قبل ان يقول كلمته التي قال ". وقال حبيب بن ابي عمرة عن سعيد، عن ابن عباس، قال قال النبي صلى الله عليه وسلم للمقداد " اذا كان رجل مومن يخفي ايمانه مع قوم كفار، فاظهر ايمانه، فقتلته، فكذلك كنت انت تخفي ايمانك بمكة من قبل
حدثنا عبدان، حدثنا عبد الله، حدثنا يونس، عن الزهري، حدثنا عطاء بن يزيد، ان عبيد الله بن عدي، حدثه ان المقداد بن عمرو الكندي حليف بني زهرة حدثه وكان، شهد بدرا مع النبي صلى الله عليه وسلم انه قال يا رسول الله ان لقيت كافرا فاقتتلنا، فضرب يدي بالسيف فقطعها، ثم لاذ بشجرة وقال اسلمت لله. اقتله بعد ان قالها قال رسول الله صلى الله عليه وسلم " لا تقتله ". قال يا رسول الله فانه طرح احدى يدى، ثم قال بعد ما قطعها، اقتله قال " لا تقتله، فان قتلته فانه بمنزلتك قبل ان تقتله، وانت بمنزلته قبل ان يقول كلمته التي قال ". وقال حبيب بن ابي عمرة عن سعيد، عن ابن عباس، قال قال النبي صلى الله عليه وسلم للمقداد " اذا كان رجل مومن يخفي ايمانه مع قوم كفار، فاظهر ايمانه، فقتلته، فكذلك كنت انت تخفي ايمانك بمكة من قبل
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا تقتل نفس الا كان على ابن ادم الاول كفل منها
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال واقد بن عبد الله اخبرني عن ابيه، سمع عبد الله بن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகை யில்) என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)” என்று சொன்னார்கள்.8 இந்த ஹதீஸை, நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூபக்ரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித் துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن علي بن مدرك، قال سمعت ابا زرعة بن عمرو بن جرير، عن جرير، قال قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع " استنصت الناس، لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض ". رواه ابو بكرة وابن عباس عن النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும். மற்றோர் அறிவிப்பில், “இறைவ னுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘மனிதனைக் கொலை செய்வதும் ‘பெரும் பாவங்களா கும்” என்று வந்துள்ளது. இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.9 (மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن فراس، عن الشعبي، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال " الكباير الاشراك بالله، وعقوق الوالدين ". او قال " اليمين الغموس ". شك شعبة. وقال معاذ حدثنا شعبة قال " الكباير الاشراك بالله، واليمين الغموس، وعقوق الوالدين ". او قال " وقتل النفس
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களாகும். இதன் அறிவிப்பாளரான அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، حدثنا عبد الصمد، حدثنا شعبة، حدثنا عبيد الله بن ابي بكر، سمع انسا رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " الكباير ". وحدثنا عمرو حدثنا شعبة عن ابن ابي بكر عن انس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال " اكبر الكباير الاشراك بالله وقتل النفس، وعقوق الوالدين، وقول الزور ". او قال " وشهادة الزور
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஜுஹைனா’ குலத்தைச் சேர்ந்த ‘ஹுரக்கா’ எனும் கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச்சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டோம். அப்போது அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னார். ஆகவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கிக்கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவர்மீது பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உசாமா! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் (அவ்வாறு கூறினார்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று திரும்பத்திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவுக் கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருந்திருக்குமே! என்று ஆசைப்பட்டேன்.10 அத்தியாயம் :
حدثنا عمرو بن زرارة، حدثنا هشيم، حدثنا حصين، حدثنا ابو ظبيان، قال سمعت اسامة بن زيد بن حارثة رضى الله عنهما يحدث قال بعثنا رسول الله صلى الله عليه وسلم الى الحرقة من جهينة قال فصبحنا القوم فهزمناهم قال ولحقت انا ورجل من الانصار رجلا منهم قال فلما غشيناه قال لا اله الا الله قال فكف عنه الانصاري، فطعنته برمحي حتى قتلته قال فلما قدمنا بلغ ذلك النبي صلى الله عليه وسلم قال فقال لي " يا اسامة اقتلته بعد ما قال لا اله الا الله ". قال قلت يا رسول الله انما كان متعوذا. قال " اقتلته بعد ان قال لا اله الا الله ". قال فما زال يكررها على حتى تمنيت اني لم اكن اسلمت قبل ذلك اليوم
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்விற்கு நாங்கள் எதனை யும் இணைகற்பிக்கமாட்டோம்: திருட மாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்; அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்ய மாட்டோம்; கொள்ளையடிக்கமாட்டோம்; (எந்த நற்செயலிலும் உங்களுக்கு) மாறு செய்யமாட்டோம்; (இவற்றை நாங்கள் செய்யாமல் விட்டுவிட்டால்) எங்களுக்குச் சொர்க்கம் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்தால் அதன் முடிவு அல்லாஹ்விடம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்துகொடுத்த தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.11 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثنا يزيد، عن ابي الخير، عن الصنابحي، عن عبادة بن الصامت رضى الله عنه قال اني من النقباء الذين بايعوا رسول الله صلى الله عليه وسلم بايعناه على ان لا نشرك بالله شييا، ولا نسرق ولا نزني، ولا نقتل النفس التي حرم الله، ولا ننتهب، ولا نعصي، بالجنة ان فعلنا ذلك، فان غشينا من ذلك شييا كان قضاء ذلك الى الله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூசா (ரலி) அவர்களும் இதை அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية، عن نافع، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " من حمل علينا السلاح فليس منا ". رواه ابو موسى عن النبي صلى الله عليه وسلم
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவி செய்வதற்காக (காலதாமதமாக)ப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “நான் இந்த மனிதருக்கு உதவி செய்யச் செல்கிறேன்” என்றேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். ஏனெனில், (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக்கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்’ என்று சொன்னார்கள். அப்போது நான், ‘அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலை செய்தவர். (நரகத்திற்குச் செல்வது சரி!) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?)’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கொல்ல வேண்டுமென்று இவர் பேராசை கொண்டிருந்தாரே!’ என்று கூறினார்கள்.12 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الرحمن بن المبارك، حدثنا حماد بن زيد، حدثنا ايوب، ويونس، عن الحسن، عن الاحنف بن قيس، قال ذهبت لانصر هذا الرجل، فلقيني ابو بكرة فقال اين تريد قلت انصر هذا الرجل. قال ارجع فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار ". قلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال " انه كان حريصا على قتل صاحبه
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்குடையே வைத்து நசுக்கி விட்டான். அச்சிறுமியிடம், “உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டது. (அச்சிறுமி ‘ஆம்’ என்று ஒப்புக்கொண்டாள்.) ஆகவே, அந்த யூதன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை அவனிடம் விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். (அவன் ஒப்புக்கொண்டவுடன்) அவனது தலை கல்லால் நசுக்கப்பட்டது.14 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا همام، عن قتادة، عن انس بن مالك رضى الله عنه ان يهوديا، رض راس جارية بين حجرين، فقيل لها من فعل بك هذا افلان او فلان حتى سمي اليهودي، فاتي به النبي صلى الله عليه وسلم فلم يزل به حتى اقر به، فرض راسه بالحجارة
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் வெள்ளி நகை அணிந்துகொண்டு ஒரு சிறுமி (வீட்டிலிருந்து) புறப்பட்டாள். அப்போது அவள்மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னார் உன்னைத் தாக்கினாரா?” என்று கேட்டார்கள். அவள் (இல்லை என்று) தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், “இன்னார் உன்னைத் தாக்கினாரா?” என்று கேட்டார்கள். அவள் அப்போதும் (இல்லை என்று) சைகை செய்தாள். தொடர்ந்து (மூன்றாம் முறையாக) அவளிடம் அவர்கள் “இன்னாரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்ட போது அவள் (ஆம் என்று கூறும் விதமாக) தலையைக் கீழ் நோக்கித் தாழ்த்திசைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை அழைத்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவனை அழைத்துவந்து விசாரித்தபோது அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.) ஆகவே, இரு கற்களுக்கிடையில் வைத்து அவ(னது தலையி)னை நசுக்கிக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا عبد الله بن ادريس، عن شعبة، عن هشام بن زيد بن انس، عن جده، انس بن مالك قال خرجت جارية عليها اوضاح بالمدينة قال فرماها يهودي بحجر قال فجيء بها الى النبي صلى الله عليه وسلم وبها رمق فقال لها رسول الله صلى الله عليه وسلم " فلان قتلك ". فرفعت راسها، فاعاد عليها قال " فلان قتلك ". فرفعت راسها، فقال لها في الثالثة " فلان قتلك ". فخفضت راسها، فدعا به رسول الله صلى الله عليه وسلم فقتله بين الحجرين
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத் திலிருந்தே வெளியேறிவிடுவது. அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يحل دم امري مسلم يشهد ان لا اله الا الله واني رسول الله الا باحدى ثلاث النفس بالنفس والثيب الزاني، والمارق من الدين التارك الجماعة
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நசுக்கித்) தாக்கினான். அவளது உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் அச்சிறுமி கொண்டுவரப்பட்டாள். அப்போது (அவளிடம்) நபி (ஸல்) அவர்கள், “இன்னாரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். பிறகு இரண்டாவது முறை (வேறொரு நபர் குறித்து) நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது அப்போதும் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். மூன்றாம் முறை நபி (ஸல்) அவர்கள் (கொலையாளியின் பெயர் கூறி) அவளிடம் கேட்டபோது அவள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, இரு கற்களுக்குகிடையில் (அவன் தலையை வைத்து நசுக்கி) அவனைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.16 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن هشام بن زيد، عن انس رضى الله عنه ان يهوديا، قتل جارية على اوضاح لها، فقتلها بحجر، فجيء بها الى النبي صلى الله عليه وسلم وبها رمق فقال " اقتلك فلان ". فاشارت براسها ان لا، ثم قال الثانية، فاشارت براسها ان لا، ثم سالها الثالثة فاشارت براسها ان نعم، فقتله النبي صلى الله عليه وسلم بحجرين
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்: இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகள் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி (இங்கு) போர் புரிவது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக்கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ‘அபூஷாத்’ என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்கு (என் உரையை) எழுதிக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இத்கிர் புல்லைத் தவிர!” என்று சொன்னார்கள்.17 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூநுஐம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘யானைப் படை’ என்பதற்குப் பதிலாக, ‘கொலை செய்வதை’ என்று இடம்பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர். உபைதுல்லாஹ் பின் மூசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கொலையுண்ட வரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்’ என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا شيبان، عن يحيى، عن ابي سلمة، عن ابي هريرة، ان خزاعة، قتلوا رجلا. وقال عبد الله بن رجاء حدثنا حرب عن يحيى حدثنا ابو سلمة حدثنا ابو هريرة انه عام فتح مكة قتلت خزاعة رجلا من بني ليث بقتيل لهم في الجاهلية، فقام رسول الله صلى الله عليه وسلم فقال " ان الله حبس عن مكة الفيل وسلط عليهم رسوله والمومنين، الا وانها لم تحل لاحد قبلي، ولا تحل لاحد بعدي، الا وانما احلت لي ساعة من نهار، الا وانها ساعتي هذه حرام لا يختلى شوكها، ولا يعضد شجرها، ولا يلتقط ساقطتها الا منشد، ومن قتل له قتيل فهو بخير النظرين اما يودى واما يقاد ". فقام رجل من اهل اليمن يقال له ابو شاه فقال اكتب لي يا رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم " اكتبوا لابي شاه ". ثم قام رجل من قريش فقال يا رسول الله الا الاذخر، فانما نجعله في بيوتنا وقبورنا. فقال رسول الله صلى الله عليه وسلم " الا الاذخر ". وتابعه عبيد الله عن شيبان في الفيل، قال بعضهم عن ابي نعيم القتل. وقال عبيد الله اما ان يقاد اهل القتيل