Loading...

Loading...
நூல்கள்
௮௭ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (நரகவாசிகள் நரகத்தில் போடப்படு வார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத் தால்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தமது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது “போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!” என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شيبان، حدثنا قتادة، عن انس بن مالك، قال النبي صلى الله عليه وسلم " لا تزال جهنم تقول هل من مزيد حتى يضع رب العزة فيها قدمه فتقول قط قط وعزتك. ويزوى بعضها الى بعض ". رواه شعبة عن قتادة
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மை யானவர்களென இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது): அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபைக்கு எதிராக உதவி கோரினார்கள். உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம்” என்று கூறினார்கள்.53 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا الاويسي، حدثنا ابراهيم، عن صالح، عن ابن شهاب، ح وحدثنا حجاج، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس، قال سمعت الزهري، قال سمعت عروة بن الزبير، وسعيد بن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله بن عبد الله، عن حديث، عايشة زوج النبي صلى الله عليه وسلم حين قال لها اهل الافك ما قالوا، فبراها الله، وكل حدثني طايفة من الحديث فقام النبي صلى الله عليه وسلم فاستعذر من عبد الله بن ابى، فقام اسيد بن حضير فقال لسعد بن عبادة لعمر الله لنقتلنه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக உங்களை அல்லாஹ் தண்டிக்கமாட்டான்” எனும் (2:225ஆவது) இறைவசனம் ‘லா வல்லாஹி’ (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், ‘பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கருதாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுபவர் தொடர்பாக அருளப்பெற்றது.54 அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، حدثنا يحيى، عن هشام، قال اخبرني ابي، عن عايشة رضى الله عنها {لا يواخذكم الله باللغو} قال قالت انزلت في قوله لا، والله بلى والله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்து விடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.56 அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا مسعر، حدثنا قتادة، حدثنا زرارة بن اوفى، عن ابي هريرة، يرفعه قال " ان الله تجاوز لامتي عما وسوست او حدثت به انفسها، ما لم تعمل به او تكلم
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளில் (தமது ஒட்டகத்தின்மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்து, “நான் (ஹஜ்ஜில்) இன்னின்னதற்கு முன் இன்னின்னது (ஷைத்தானுக்குக் கல் எறிவதற்குமுன் பலியிடல், பலியிடலுக்குமுன் தலைமுடி களைதல்) என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். பிறகு மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (முடி களைதல், பலியிடல், கல்லெறிதல் ஆகிய) இம்மூன்றையும் நான் இன்னின்னவாறு நினைத்துக்கொண்டிருந்தேன்” என்று சொன்னார். இவை அனைத்துக்குமே நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறே) செய்யுங்கள். (முன்பின்னாகச் செய்வதில்) குற்றமில்லை” என்றே பதிலளித்தார்கள். அன்று கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்துக்கும் “(அப்படியே) செய்யுங்கள்; (அப்படியே) செய்யுங்கள். (அதனால்) குற்றமில்லை” என்றே நபியவர்கள் விடையளித்தார்கள்.57 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عثمان بن الهيثم، او محمد عنه عن ابن جريج، قال سمعت ابن شهاب، يقول حدثني عيسى بن طلحة، ان عبد الله بن عمرو بن العاص، حدثه ان النبي صلى الله عليه وسلم بينما هو يخطب يوم النحر اذ قام اليه رجل فقال كنت احسب يا رسول الله كذا وكذا قبل كذا وكذا. ثم قام اخر فقال يا رسول الله كنت احسب كذا وكذا لهولاء الثلاث. فقال النبي صلى الله عليه وسلم " افعل ولا حرج " لهن كلهن يوميذ، فما سيل يوميذ عن شىء الا قال " افعل ولا حرج
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், “கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபுஸ் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்று சொன்னார்கள். மற்றொருவர், “பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைந்துவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள். இன்னொருவர், “கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள்.58 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابو بكر، عن عبد العزيز بن رفيع، عن عطاء، عن ابن عباس رضى الله عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم زرت قبل ان ارمي. قال " لا حرج ". قال اخر حلقت قبل ان اذبح. قال " لا حرج ". قال اخر ذبحت قبل ان ارمي. قال " لا حرج
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு, பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! எனப் பதில் சலாம் கூறிவிட்டு,) “திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது.) மூன்றாவது தடவையில் அந்த மனிதர், “அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்!” என்று கேட்டார். “நீர் தொழ நினைத்தால் (முதலில்) நிறைவாக அங்கத் தூய்மை (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவீராக! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதுவீராக! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உமது தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59 அத்தியாயம் :
حدثني اسحاق بن منصور، حدثنا ابو اسامة، حدثنا عبيد الله بن عمر، عن سعيد بن ابي سعيد، عن ابي هريرة، ان رجلا، دخل المسجد يصلي ورسول الله صلى الله عليه وسلم في ناحية المسجد، فجاء فسلم عليه فقال له " ارجع فصل، فانك لم تصل ". فرجع فصلى، ثم سلم فقال " وعليك، ارجع فصل، فانك لم تصل ". قال في الثالثة فاعلمني. قال " اذا قمت الى الصلاة فاسبغ الوضوء، ثم استقبل القبلة فكبر، واقرا بما تيسر معك من القران، ثم اركع حتى تطمين راكعا، ثم ارفع راسك حتى تعتدل قايما، ثم اسجد حتى تطمين، ساجدا ثم ارفع حتى تستوي وتطمين جالسا، ثم اسجد حتى تطمين ساجدا، ثم ارفع حتى تستوي قايما، ثم افعل ذلك في صلاتك كلها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கூச்சலிட்டான். உடனே முஸ்óம்களில் முன்அணியினர் (எதிரிகள் என் றெண்ணி), பின்அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக்கொண்ட னர். அப்போது ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். உடனே, “(அவர்) என் தந்தை! என் தந்தை!” என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரை விட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அன்னாருடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.60 அத்தியாயம் :
حدثنا فروة بن ابي المغراء، حدثنا علي بن مسهر، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت هزم المشركون يوم احد هزيمة تعرف فيهم، فصرخ ابليس اى عباد الله اخراكم، فرجعت اولاهم فاجتلدت هي واخراهم، فنظر حذيفة بن اليمان فاذا هو بابيه فقال ابي ابي. قالت فوالله ما انحجزوا حتى قتلوه، فقال حذيفة غفر الله لكم. قال عروة فوالله ما زالت في حذيفة منها بقية حتى لقي الله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால், அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும்வைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني يوسف بن موسى، حدثنا ابو اسامة، قال حدثني عوف، عن خلاس، ومحمد، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " من اكل ناسيا وهو صايم فليتم صومه، فانما اطعمه الله وسقاه
அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களுக்குத் தொழுவித் தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தறுவாயில் நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (அமர்விலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிóருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள்.62 அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا ابن ابي ذيب، عن الزهري، عن الاعرج، عن عبد الله ابن بحينة، قال صلى بنا النبي صلى الله عليه وسلم فقام في الركعتين الاوليين قبل ان يجلس، فمضى في صلاته، فلما قضى صلاته انتظر الناس تسليمه، وسجد قبل ان يسلم، ثم رفع راسه، ثم كبر وسجد، ثم رفع راسه وسلم
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுவித்தார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி’ அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்’ தொழுவித்தார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம் (ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா (ரஹ்) அவர்களா என்று எனக்குத் தெரியாது- (தொழுகை முடிந்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள், “இப்படி இப்படி நீங்கள் தொழுவித்தீர்கள்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தா செய்தார்கள். பிறகு, “இந்த இரண்டு சஜ்தாக்கள், தமது தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்) தெரியாதவர் செய்ய வேண்டியவையாகும்; (முதலில்) யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு எஞ்சியுள்ள (ரக்அத்)தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.63 அத்தியாயம் :
حدثني اسحاق بن ابراهيم، سمع عبد العزيز بن عبد الصمد، حدثنا منصور، عن ابراهيم، عن علقمة، عن ابن مسعود رضى الله عنه ان نبي الله صلى الله عليه وسلم صلى بهم صلاة الظهر، فزاد او نقص منها قال منصور لا ادري ابراهيم وهم ام علقمة قال قيل يا رسول الله اقصرت الصلاة ام نسيت قال " وما ذاك ". قالوا صليت كذا وكذا. قال فسجد بهم سجدتين ثم قال " هاتان السجدتان لمن لا يدري، زاد في صلاته ام نقص، فيتحرى الصواب، فيتم ما بقي، ثم يسجد سجدتين
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று (களிரிடம் மூசா) கூறினார்” எனும் (18:73ஆவது) வசனத்(தின் விளக்கத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியால் ஆகும்” என்று சொன்னார்கள்.64 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا عمرو بن دينار، اخبرني سعيد بن جبير، قال قلت لابن عباس فقال حدثنا ابى بن كعب، انه سمع رسول الله صلى الله عليه وسلم {لا تواخذني بما نسيت ولا ترهقني من امري عسرا} قال " كانت الاولى من موسى نسيانا
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். ஆகவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முடித்துக்கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பிடுவதற்காக (குர்பானி பிராணியை) அறுத்திடுமாறு கட்டளையிட்டேன். அதன்படி அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பாகவே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். பிறகு இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் (வேறொரு) குர்பானி பிராணியை அறுத்திடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி என்னிடம் உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளை விடச் சிறந்தது (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்டேன். (நபியவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.)65 அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள், ஆமிர் அஷ் ஷஅபீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு, முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் (அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவித்துள்ள இதே போன்ற ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு இத்துடன் நிறுத்திவிட்டு, “பராஉ (ரலி) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்துமா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
قال ابو عبد الله كتب الى محمد بن بشار حدثنا معاذ بن معاذ، حدثنا ابن عون، عن الشعبي، قال قال البراء بن عازب وكان عندهم ضيف لهم فامر اهله ان يذبحوا قبل ان يرجع، لياكل ضيفهم، فذبحوا قبل الصلاة، فذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فامره ان يعيد الذبح. فقال يا رسول الله عندي عناق جذع، عناق لبن هي خير من شاتى لحم. فكان ابن عون يقف في هذا المكان عن حديث الشعبي، ويحدث عن محمد بن سيرين بمثل هذا الحديث، ويقف في هذا المكان ويقول لا ادري ابلغت الرخصة غيره ام لا. رواه ايوب عن ابن سيرين عن انس عن النبي صلى الله عليه وسلم
ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்துகொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் “யார் தொழுகைக்குமுன் (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.66 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن الاسود بن قيس، قال سمعت جندبا، قال شهدت النبي صلى الله عليه وسلم صلى يوم عيد ثم خطب ثم قال " من ذبح فليبدل مكانها، ومن لم يكن ذبح فليذبح باسم الله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا النضر، اخبرنا شعبة، حدثنا فراس، قال سمعت الشعبي، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال " الكباير الاشراك بالله، وعقوق الوالدين، وقتل النفس، واليمين الغموس
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من حلف على يمين صبر، يقتطع بها مال امري مسلم، لقي الله وهو عليه غضبان ". فانزل الله تصديق ذلك {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا} الى اخر الاية. فدخل الاشعث بن قيس فقال ما حدثكم ابو عبد الرحمن، فقالوا كذا وكذا. قال في انزلت، كانت لي بير في ارض ابن عم لي فاتيت رسول الله صلى الله عليه وسلم فقال " بينتك او يمينه ". قلت اذا يحلف عليها يا رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم " من حلف على يمين صبر، وهو فيها فاجر، يقتطع بها مال امري مسلم، لقي الله يوم القيامة، وهو عليه غضبان
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من حلف على يمين صبر، يقتطع بها مال امري مسلم، لقي الله وهو عليه غضبان ". فانزل الله تصديق ذلك {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا} الى اخر الاية. فدخل الاشعث بن قيس فقال ما حدثكم ابو عبد الرحمن، فقالوا كذا وكذا. قال في انزلت، كانت لي بير في ارض ابن عم لي فاتيت رسول الله صلى الله عليه وسلم فقال " بينتك او يمينه ". قلت اذا يحلف عليها يا رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم " من حلف على يمين صبر، وهو فيها فاجر، يقتطع بها مال امري مسلم، لقي الله يوم القيامة، وهو عليه غضبان
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப ஊர்தி ஒட்டகம் கேட்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது” என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள். பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘அல்லாஹ்வின் தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71 அத்தியாயம் :
حدثني محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، قال ارسلني اصحابي الى النبي صلى الله عليه وسلم اساله الحملان فقال " والله لا احملكم على شىء ". ووافقته وهو غضبان فلما اتيته قال " انطلق الى اصحابك فقل ان الله او ان رسول الله صلى الله عليه وسلم يحملكم
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:) அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறியபின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்- அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள்.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد العزيز، حدثنا ابراهيم، عن صالح، عن ابن شهاب، ح وحدثنا الحجاج، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس بن يزيد الايلي، قال سمعت الزهري، قال سمعت عروة بن الزبير، وسعيد بن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله بن عبد الله بن عتبة، عن حديث، عايشة زوج النبي صلى الله عليه وسلم حين قال لها اهل الافك ما قالوا، فبراها الله مما قالوا كل حدثني طايفة من الحديث فانزل الله {ان الذين جاءوا بالافك} العشر الايات كلها في براءتي. فقال ابو بكر الصديق وكان ينفق على مسطح لقرابته منه والله لا انفق على مسطح شييا ابدا، بعد الذي قال لعايشة. فانزل الله {ولا ياتل اولو الفضل منكم والسعة ان يوتوا اولي القربى} الاية. قال ابو بكر بلى والله اني لاحب ان يغفر الله لي. فرجع الى مسطح النفقة التي كان ينفق عليه وقال والله لا انزعها عنه ابدا
ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். பிறகு (எங்களுக்கு ஊர்தி ஒட்டகங் களைத் தந்துவிட்டு) “அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று சொன்னார்கள்.73 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا ايوب، عن القاسم، عن زهدم، قال كنا عند ابي موسى الاشعري قال اتيت رسول الله صلى الله عليه وسلم في نفر من الاشعريين، فوافقته وهو غضبان فاستحملناه، فحلف ان لا يحملنا ثم قال " والله ان شاء الله لا احلف على يمين فارى غيرها خيرا منها، الا اتيت الذي هو خير وتحللتها