Loading...
Loading...
நூல்கள்
187 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹ...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் தமது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின் றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். அ...
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவசரத்து டன் எழுந்து தமது ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் (பள்ளிவாசலில் இருந்து...
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டுவைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூத...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தமது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
‘நபி (ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல்காசிம் (ஸல்) அவர்கள்’ கூறி னார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் (தமக் குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவர...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் தமது கீழங்கியை (தற்பெருமையுடன் தரை யில்) இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும்படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தமது உ...
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்றுகொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்க...
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்க, நான் (அங்கு) அமர்ந் திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் வந்த...
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ....பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டார்கள். பிறகு நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர, நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள்...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒரு மனிதர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அண...
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்டபிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார் கள். அவ்வாறே அ...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது அவருடைய புதல்வர் (அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லா...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும் பாலான நீளங்கிகள் அணிந்த இரு மனிதர்களின்...
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர் களை எதிர்கொண்டேன். பிறகு அங்கத் தூய்மை (உளூ) ச...
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தேன். உடன...
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரம...
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து...
சுலைமான் பின் தர்கான் அத்- தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள்மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. அத்தியாயம் :