Loading...
Loading...
நூல்கள்
84 ஹதீஸ்கள்
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஷத்தாத் பின் மஅகில் (ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (உ...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற (நல்ல)வரின் நிலையானது நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவர...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களுக்கு)முன் சென்ற சமு தாயங்களின் ஆயுட்காலத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் ஆயுட்காலம், அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவேயாகும். உங்களது நிலையும் (வேதக்கார...
தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அன்னார் ‘இல்லை’ என்றார்கள். நான் ‘‘அப்படி...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதைச் செவி கொடுத்துக் கேட்டதைப் போன்று வெறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அ...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவி கொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை” என்று கூறினார்கள். ‘‘...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதை அவர் இரவு நேரங்களிலும் ஓதி வழிபடுகிறார். 2. இன்னொரு மனி...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத்தந்தான். அவர் அதை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கே...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர். இதை உஸ்மான் (ரலி) அவர்களிட மிருந்து அபூஅப்திர் ரஹ்மான் வழியாக சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். உஸ்ம...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்றுக்கொடுத்தவரே உங்களில் சிறந்தவர். இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாக (மஹ்ரின்றி தம்மை மணந்துகொள்ளுமாறு) கூறினார். அப்போது...
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்ன...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாட மாகவோ) ஓதுகின்றவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஓர் ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதை அவர் கண்காணித்துவந்தால் த...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்” என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், ‘மறக்க வைக்கப்பட்டுவிட்டது’ என்று அவர் கூறட்டு...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) த...
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றியின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகத்தில் இருந்தபடி ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.48 அ...
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நீங்கள் ‘அல்முஃபஸ்ஸல்’ என்று கூறிவரும் அத்தியாயங்களே ‘அல்முஹ்கம்’ ஆகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது நான் பத்து வயது...
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம், ‘‘...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயத்தின் இன்ன இன்ன வசனங்களை எனக்கு...