ஹதீஸ்கள்
#5029
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாக (மஹ்ரின்றி தம்மை மணந்துகொள்ளுமாறு) கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை” என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர், ‘‘இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (மணக் கொடையாக)க் கொடு!” என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், ‘‘என்னிடம் இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு (எதையேனும் மணக்கொடையாகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கி னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?” என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن عون، حدثنا حماد، عن ابي حازم، عن سهل بن سعد، قال اتت النبي صلى الله عليه وسلم امراة فقالت انها قد وهبت نفسها لله ولرسول الله صلى الله عليه وسلم فقال " ما لي في النساء من حاجة ". فقال رجل زوجنيها. قال " اعطها ثوبا ". قال لا اجد. قال " اعطها ولو خاتما من حديد ". فاعتل له. فقال " ما معك من القران ". قال كذا وكذا. قال " فقد زوجتكها بما معك من القران
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5029
- Book Index
- 51
Grades
- -
