ஹதீஸ்கள்
#5021
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களுக்கு)முன் சென்ற சமு தாயங்களின் ஆயுட்காலத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் ஆயுட்காலம், அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவேயாகும். உங்களது நிலையும் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். அவர் (தொழிலாளர்களிடம்), ‘‘எனக்காக நண்பகல்வரை ஒவ்வொரு ‘கீராத்’ (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். அப்போது யூதர்கள் (ஒவ்வொரு கீராத்திற்கு நண்பகல்வரை) வேலை செய்தனர். அடுத்து அந்த மனிதர், ‘‘நண்பகல் முதல் அஸ்ர்வரை (ஒவ்வொரு கீராத் ஊதியத்திற்கு) எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்க, (அவ்வாறே) கிறித்தவர்கள் வேலை செய்தார்கள். பிறகு (என் சமுதாயத்தாராகிய) நீங்கள் இரண்டு ‘கீராத்’ (ஊதியத்)திற்காக அஸ்ர் முதல் மஃக்ரிப் (நேரம்)வரை வேலை செய்கிறீர்கள். (இதைக் கண்ட வேதக்காரர்களாகிய) அவர்கள், ‘‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, ஊதியம் (மட்டும் எங்களுக்குக்) குறைவாகக் கிடைப்பதா?” என்று கேட்டனர். அதற்கு (இறைவன்,) ‘‘நான் (ஊதியமாக நிர்ணயித்த) உங்களது உரிமையில் (ஏதேனும் குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டேனா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘இல்லை” என்றனர். அப்போது இறைவன், ‘‘அ(ப்படிச் சிலருக்கு மட்டும் சிறிது நேரப் பணிக்கு அதிகமாகக் கொடுப்ப)து என் (தனிப்பட்ட) அருளாகும். அதை நான் விரும்பியோருக்கு வழங்குகிறேன்” என்று சொன்னான்.44 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، عن يحيى، عن سفيان، حدثني عبد الله بن دينار، قال سمعت ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " انما اجلكم في اجل من خلا من الامم كما بين صلاة العصر ومغرب الشمس، ومثلكم ومثل اليهود والنصارى كمثل رجل استعمل عمالا، فقال من يعمل لي الى نصف النهار على قيراط فعملت اليهود فقال من يعمل لي من نصف النهار الى العصر فعملت النصارى، ثم انتم تعملون من العصر الى المغرب بقيراطين قيراطين، قالوا نحن اكثر عملا واقل عطاء، قال هل ظلمتكم من حقكم قالوا لا قال فذاك فضلي اوتيه من شيت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5021
- Book Index
- 43
Grades
- -
