Loading...

Loading...
நூல்கள்
௪௬ ஹதீஸ்கள்
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இரவில், அல்லது பக-ல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். (அப்போது) அவர்களுக்குப் பதினொன்று துணைவியர் இருந்தனர்” என்று கூறினார்கள். உடனே நான், “அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெற்றிருந்தார்களா?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேரின் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக்கொள்வோம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் (ரஹ்) அவர்கள் கத்தாதா (ரஹ்) அவர்களி டமிருந்து அறிவித்துள்ள தொடரில், “(அப்போது) நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن قتادة، قال حدثنا انس بن مالك، قال كان النبي صلى الله عليه وسلم يدور على نسايه في الساعة الواحدة من الليل والنهار، وهن احدى عشرة. قال قلت لانس اوكان يطيقه قال كنا نتحدث انه اعطي قوة ثلاثين. وقال سعيد عن قتادة ان انسا حدثهم تسع نسوة
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மனைவியாக) இருந்ததால், நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, “(அவ்வாறு பாலுணர்வு கிளர்ச்சி நீர் வெளியேறினால்) அங்கத் தூய்மை செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا زايدة، عن ابي حصين، عن ابي عبد الرحمن، عن علي، قال كنت رجلا مذاء فامرت رجلا ان يسال النبي صلى الله عليه وسلم لمكان ابنته فسال فقال " توضا واغسل ذكرك
முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவனாக இருப்பதை விரும்புவதில்லை” எனக் கூறியதைக் குறிப்பிட்டு ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேள்வி கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இரவில்) வாசனைத் திரவியங் கள் பூசினேன். அவர்கள் தம் துணைவி யர் அனைவரிடமும் சென்றுவிட்டுப் பின்னர் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவர் களாக இருந்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا ابو عوانة، عن ابراهيم بن محمد بن المنتشر، عن ابيه، قال سالت عايشة فذكرت لها قول ابن عمر ما احب ان اصبح، محرما انضخ طيبا. فقالت عايشة انا طيبت رسول الله صلى الله عليه وسلم ثم طاف في نسايه ثم اصبح محرما
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தலை வகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன் றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، قال حدثنا الحكم، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت كاني انظر الى وبيص الطيب في مفرق النبي صلى الله عليه وسلم وهو محرم
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا اغتسل من الجنابة غسل يديه، وتوضا وضوءه للصلاة ثم اغتسل، ثم يخلل بيده شعره، حتى اذا ظن ان قد اروى بشرته، افاض عليه الماء ثلاث مرات، ثم غسل ساير جسده. وقالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء واحد نغرف منه جميعا
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا اغتسل من الجنابة غسل يديه، وتوضا وضوءه للصلاة ثم اغتسل، ثم يخلل بيده شعره، حتى اذا ظن ان قد اروى بشرته، افاض عليه الماء ثلاث مرات، ثم غسل ساير جسده. وقالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء واحد نغرف منه جميعا
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்கி(ன் கடமையான குளிப்பி)ற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் (வாங்கி) வைத்துக்கொண்டு, தமது வலக் கையால் (தண்ணீரை அள்ளி) தமது இடக் கையின் மீது ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ ஊற்றி(க் கழுவி)னார்கள். பிறகு மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையை ‘தரையில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்து ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ (தண்ணீர் விட்டுக்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கை வரை) இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலைக்குத் தண்ணீர் ஊற்றி னார்கள். பிறகு உடலின் மற்றப் பகுதி களைக் கழுவினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் இரு கால்களையும் கழுவினார்கள். நான் (துடைப்பதற்காக) அவர்களிடம் துண்டு ஒன்றைக் கொடுத் தேன். ஆனால், அதை அவர்கள் விரும்பாமல் தமது கையால் தண்ணீரை (வழித்து) உதறலானார்கள். அத்தியாயம் :
حدثنا يوسف بن عيسى، قال اخبرنا الفضل بن موسى، قال اخبرنا الاعمش، عن سالم، عن كريب، مولى ابن عباس عن ابن عباس، عن ميمونة، قالت وضع رسول الله صلى الله عليه وسلم وضوءا لجنابة فاكفا بيمينه على شماله مرتين، او ثلاثا، ثم غسل فرجه، ثم ضرب يده بالارض او الحايط مرتين او ثلاثا، ثم مضمض واستنشق، وغسل وجهه وذراعيه، ثم افاض على راسه الماء، ثم غسل جسده، ثم تنحى فغسل رجليه. قالت فاتيته بخرقة، فلم يردها، فجعل ينفض بيده
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு தொழுகைக்காக) ‘இகாமத்’ சொல்லப்பட்டு, தொழுகை அணிகள் சீராக்கப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் இடத்தில் அவர்கள் போய் நின்றபோது, தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு, (தமது வீட்டுக்குத்) திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையி-ருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட எங்களிடம் வந்தார்கள். ‘தக்பீர்’ சொல்- தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا عثمان بن عمر، قال اخبرنا يونس، عن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، قال اقيمت الصلاة، وعدلت الصفوف قياما، فخرج الينا رسول الله صلى الله عليه وسلم فلما قام في مصلاه ذكر انه جنب فقال لنا : " مكانكم ". ثم رجع فاغتسل، ثم خرج الينا وراسه يقطر، فكبر فصلينا معه. تابعه عبد الاعلى عن معمر عن الزهري. ورواه الاوزاعي عن الزهري
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற் காகத் தண்ணீர் வைத்துவிட்டு, ஒரு துணியால் அவர்களுக்குத் திரையிட் டேன். அவர்கள் (முத-ல்) தம் கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி, தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் பாதங்களைக் கழுவி னார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியை எடுத்துக்கொடுத்தேன். ஆனால், அதை அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை; தம் கைகளை உதறிக்கொண்டே சென்றுவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا ابو حمزة، قال سمعت الاعمش، عن سالم، عن كريب، عن ابن عباس، قال قالت ميمونة وضعت للنبي صلى الله عليه وسلم غسلا، فسترته بثوب، وصب على يديه فغسلهما، ثم صب بيمينه على شماله، فغسل فرجه، فضرب بيده الارض فمسحها، ثم غسلها فمضمض، واستنشق، وغسل وجهه وذراعيه، ثم صب على راسه، وافاض على جسده، ثم تنحى فغسل قدميه، فناولته ثوبا فلم ياخذه، فانطلق وهو ينفض يديه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவி யரான) எங்களில் ஒருவருக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டால், இரு கைகளிலும் மூன்று முறை தண்ணீர் அள்ளி தலைக்கு மேல் ஊற்றிக் குளிப்போம். பின்னர் கையால் தண்ணீர் அள்ளி (தலை முதல் கால்வரை) வலப் பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையால் தண்ணீர் அள்ளி இடப் பக்கம் ஊற்றுவோம். அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، قال حدثنا ابراهيم بن نافع، عن الحسن بن مسلم، عن صفية بنت شيبة، عن عايشة، قالت كنا اذا اصابت احدانا جنابة، اخذت بيديها ثلاثا فوق راسها، ثم تاخذ بيدها على شقها الايمن، وبيدها الاخرى على شقها الايسر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே வெறும் மேனியுடன் குளிப்பது வழக்கம். (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். இதனால் “அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குட-றக்க நோயாளியாய் இருப்பதால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை” என பனூ இஸ்ராயீல் சமூகத்தார் (குறை) கூறினார்கள். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்-ன் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து, “கல்லே எனது துணி! கல்லே எனது துணி!” என்று குரல் எழுப்பி(யபடி ஓடி)னார்கள். (ஆடையில்லா கோலத்துடன் பனூ இஸ்ராயீல் சமுதாயம் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) பனூ இஸ்ராயீல் சமுதாயத் தார் மூசா (அலை) அவர்களை (வெறும் மேனியுடன்) பார்த்துவிட்டு, “அல்லாஹ் வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையும் இல்லை” என்று கூறினர். இதன் அறிவிப்பாளரான அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதானையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையி-ருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ‘ஆறு’ அல்லது ‘ஏழு’ தழும்பு கள் அந்தக் கல்-ல் பதிந்துவிட்டன. அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، قال حدثنا عبد الرزاق، عن معمر، عن همام بن منبه، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " كانت بنو اسراييل يغتسلون عراة، ينظر بعضهم الى بعض، وكان موسى يغتسل وحده، فقالوا والله ما يمنع موسى ان يغتسل معنا الا انه ادر، فذهب مرة يغتسل، فوضع ثوبه على حجر، ففر الحجر بثوبه، فخرج موسى في اثره يقول ثوبي يا حجر. حتى نظرت بنو اسراييل الى موسى، فقالوا والله ما بموسى من باس. واخذ ثوبه، فطفق بالحجر ضربا ". فقال ابو هريرة والله انه لندب بالحجر ستة او سبعة ضربا بالحجر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் வெறும் மேனியுடன் குளித் துக்கொண்டிருந்தபோது, தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்று அவர்கள்மீது விழுந்தது. உடனே அய்யூப் (அலை) அவர்கள் அதைத் தமது துணியால் பிடிக்கப்போனார்கள். அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களை அழைத்து, “அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்த(ச் செல்வ) நிலை உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (தன்னிறைவுடைய வராக) வைத்திருக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு “ஆம், உன் வலிமையின் மீதாணையாக! (உண்மைதான்.) ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!” என்று அய்யூப் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وعن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " بينا ايوب يغتسل عريانا فخر عليه جراد من ذهب، فجعل ايوب يحتثي في ثوبه، فناداه ربه يا ايوب، الم اكن اغنيتك عما ترى قال بلى وعزتك ولكن لا غنى بي عن بركتك ". ورواه ابراهيم عن موسى بن عقبة عن صفوان عن عطاء بن يسار عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم قال " بينا ايوب يغتسل عريانا
உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (ஒரு நாள்) நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்களை, (அவர் களுடைய புதல்வி) ஃபாத்திமா திரையிட்டு மறைத்துக்கொண்டிருக்க, அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். (அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன்.) அப்போது அவர்கள் “யார் இவர்?” எனக் கேட்டார்கள். “நான் (அபூதா-பின் புதல்வி) உம்மூ ஹானீ” என்று பதிலளித் தேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابي النضر، مولى عمر بن عبيد الله ان ابا مرة، مولى ام هاني بنت ابي طالب اخبره انه، سمع ام هاني بنت ابي طالب، تقول ذهبت الى رسول الله صلى الله عليه وسلم عام الفتح، فوجدته يغتسل وفاطمة تستره فقال " من هذه ". فقلت انا ام هاني
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காகக் குளித்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுகள்வரைக்) கழுவினார்கள். பிறகு தமது வலக் கையினால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி, தமது மர்ம உறுப்பையும் அதில் பட்டிருந்த (இந்திரியத்)தையும் கழுவினார்கள். பிறகு (அந்தக்) கையை ‘சுவரின் மீதோ’ அல்லது ‘தரையின் மீதோ’ தேய்த்தார்கள். பிறகு இரு கால்களைத் தவிர (உளூவின் மற்ற உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் உடம்பிற்குத் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சிறிது நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا سفيان، عن الاعمش، عن سالم بن ابي الجعد، عن كريب، عن ابن عباس، عن ميمونة، قالت سترت النبي صلى الله عليه وسلم وهو يغتسل من الجنابة، فغسل يديه ثم صب بيمينه على شماله، فغسل فرجه، وما اصابه، ثم مسح بيده على الحايط او الارض، ثم توضا وضوءه للصلاة، غير رجليه، ثم افاض على جسده الماء، ثم تنحى فغسل قدميه. تابعه ابو عوانة وابن فضيل في الستر
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்க-தம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; (விழித்தெழும்போது தன்மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள்மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்.8 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن زينب بنت ابي سلمة، عن ام سلمة ام المومنين، انها قالت جاءت ام سليم امراة ابي طلحة الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله، ان الله لا يستحيي من الحق، هل على المراة من غسل اذا هي احتلمت فقال رسول الله صلى الله عليه وسلم " نعم اذا رات الماء
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் நான் மதீனாவின் ஒரு சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்துகொண்டேன். உடனே நான் சென்று குளித்துவிட்டு வந்தேன். அப்போது “(இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நான் பெருந்துடக்கு உடையவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர் வதை நான் வெறுத்தேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்-ம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிடமாட்டார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا يحيى، قال حدثنا حميد، قال حدثنا بكر، عن ابي رافع، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم لقيه في بعض طريق المدينة وهو جنب، فانخنست منه، فذهب فاغتسل، ثم جاء فقال " اين كنت يا ابا هريرة ". قال كنت جنبا، فكرهت ان اجالسك وانا على غير طهارة. فقال " سبحان الله، ان المومن لا ينجس
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். அத்தியாயம் :
حدثنا عبد الاعلى بن حماد، قال حدثنا يزيد بن زريع، قال حدثنا سعيد، عن قتادة، ان انس بن مالك، حدثهم ان نبي الله صلى الله عليه وسلم كان يطوف على نسايه في الليلة الواحدة، وله يوميذ تسع نسوة
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்குடன் இருந்த என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து, எனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடன் நான் நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் (அங்கிருந்து) நழுவிச் சென்று இருப்பிடத்துக்குப் போய் குளித்துவிட்டு வந்தேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) “அபூஹுரைரா! எங்கே இருந்தாய்?” என்று கேட்டார்கள். நான் (எனது நிலையை) அவர்களிடம் சொன்னேன். அப்போது, “சுப்ஹானல் லாஹ்! (அல்லாஹ் தூயவன்) அபூ ஹுரைரா! ஓர் இறைநம்பிக்கையாளர் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகிவிட மாட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عياش، قال حدثنا عبد الاعلى، حدثنا حميد، عن بكر، عن ابي رافع، عن ابي هريرة، قال لقيني رسول الله صلى الله عليه وسلم وانا جنب، فاخذ بيدي، فمشيت معه حتى قعد فانسللت، فاتيت الرحل، فاغتسلت ثم جيت وهو قاعد فقال " اين كنت يا ابا هر " فقلت له. فقال " سبحان الله يا ابا هر ان المومن لا ينجس
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்; ஆயினும் (உறங்கும்முன்) அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا هشام، وشيبان، عن يحيى، عن ابي سلمة، قال سالت عايشة اكان النبي صلى الله عليه وسلم يرقد وهو جنب قالت نعم ويتوضا
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் பெருந் துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் உறங்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் ஒருவருக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருந்தாலும், அவர் அங்கத் தூய்மை செய்துகொண்டு உறங்கலாம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، قال حدثنا الليث، عن نافع، عن ابن عمر، ان عمر بن الخطاب، سال رسول الله صلى الله عليه وسلم ايرقد احدنا وهو جنب قال " نعم اذا توضا احدكم فليرقد وهو جنب