Loading...

Loading...
நூல்கள்
௩௦௯ ஹதீஸ்கள்
ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது, அவர்களது (கால்) விரலில் (காயம் ஏற்பட்டு) இரத்தம் சொட்டிக்கொண்டி ருந்தது. அப்போது அவர்கள், ‘‘நீ இரத்தம் சொட்டுகின்றஒரு விரல்தானே?நீ பட்டதெல்லாம்இறைவழியில் தானே!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن الاسود بن قيس، عن جندب بن سفيان، ان رسول الله صلى الله عليه وسلم كان في بعض المشاهد وقد دميت اصبعه، فقال " هل انت الا اصبع دميت، وفي سبيل الله ما لقيت
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் யாரும்லி உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை அல்லாஹ்வே அறிந்தவன் லி மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும் கஸ்தூரி மணம் கமழ்கின்றவராகவுமே வருவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " والذي نفسي بيده لا يكلم احد في سبيل الله والله اعلم بمن يكلم في سبيله الا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك
அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக்ளீயஸ், ‘‘அவருடன் (முஹம்மதுடன்) நீங்கள் புரியும் போர் (முடிவு) எவ்வாறு உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கு நீர், யிபோர் (முடிவு எங்களிடையே) கிணற்று வாளிகள் போன்று சுழல் (முறையில்) அமைகின்றது’ என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். பிறகு அவர்களுக்குச் சாதமாகவே இறுதி முடிவு இருக்கும்” என்று கூறினார். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، قال حدثني يونس، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، ان عبد الله بن عباس، اخبره ان ابا سفيان اخبره ان هرقل قال له سالتك كيف كان قتالكم اياه فزعمت ان الحرب سجال ودول، فكذلك الرسل تبتلى ثم تكون لهم العاقبة
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அவர் (திரும்பி வந்த வுடன்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள வில்லை; (இனி) இணைவைப்பாளர் களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெறச் செய்தால், நான் செய்யப்போவதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்ப்பான்” என்று கூறினார். பின்பு உஹுத் போரின்போது முஸ்லிம் கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், ‘‘இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர் களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரவே, ‘‘சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன்மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுத் மலையிலிருந்து பெறுகிறேன்” என்று கூறினார். சஅத் (ரலி) அவர்கள் (இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு), ‘‘அவர் செய்த (சாகசத்)தைப் போன்று செய்ய என்னால் இயலவில்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். இணைவைப்பாளர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்துவிட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னா ரென்று) அறிந்துகொள்ள முடியவில்லை; அவருடைய சகோதரிகூட அவரது விரல்(நுனி)களை வைத்துத்தான் அவரை அடையாளம் காண முடிந்தது. ‘‘அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்ட வர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர்...” (33:23) எனும் இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதிவந்தோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سعيد الخزاعي، حدثنا عبد الاعلى، عن حميد، قال سالت انسا. حدثنا عمرو بن زرارة، حدثنا زياد، قال حدثني حميد الطويل، عن انس رضى الله عنه قال غاب عمي انس بن النضر عن قتال بدر فقال يا رسول الله، غبت عن اول قتال قاتلت المشركين، لين الله اشهدني قتال المشركين ليرين الله ما اصنع، فلما كان يوم احد وانكشف المسلمون قال " اللهم اني اعتذر اليك مما صنع هولاء يعني اصحابه وابرا اليك مما صنع هولاء " يعني المشركين ثم تقدم، فاستقبله سعد بن معاذ، فقال يا سعد بن معاذ، الجنة، ورب النضر اني اجد ريحها من دون احد. قال سعد فما استطعت يا رسول الله ما صنع. قال انس فوجدنا به بضعا وثمانين ضربة بالسيف او طعنة برمح او رمية بسهم، ووجدناه قد قتل وقد مثل به المشركون، فما عرفه احد الا اخته ببنانه. قال انس كنا نرى او نظن ان هذه الاية نزلت فيه وفي اشباهه {من المومنين رجال صدقوا ما عاهدوا الله عليه} الى اخر الاية. وقال ان اخته وهى تسمى الربيع كسرت ثنية امراة فامر رسول الله صلى الله عليه وسلم بالقصاص، فقال انس يا رسول الله، والذي بعثك بالحق لا تكسر ثنيتها. فرضوا بالارش وتركوا القصاص، فقال رسول الله صلى الله عليه وسلم " ان من عباد الله من لو اقسم على الله لابره
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அவர் (திரும்பி வந்த வுடன்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள வில்லை; (இனி) இணைவைப்பாளர் களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெறச் செய்தால், நான் செய்யப்போவதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்ப்பான்” என்று கூறினார். பின்பு உஹுத் போரின்போது முஸ்லிம் கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், ‘‘இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர் களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரவே, ‘‘சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன்மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுத் மலையிலிருந்து பெறுகிறேன்” என்று கூறினார். சஅத் (ரலி) அவர்கள் (இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு), ‘‘அவர் செய்த (சாகசத்)தைப் போன்று செய்ய என்னால் இயலவில்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். இணைவைப்பாளர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்துவிட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னா ரென்று) அறிந்துகொள்ள முடியவில்லை; அவருடைய சகோதரிகூட அவரது விரல்(நுனி)களை வைத்துத்தான் அவரை அடையாளம் காண முடிந்தது. ‘‘அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்ட வர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர்...” (33:23) எனும் இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதிவந்தோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سعيد الخزاعي، حدثنا عبد الاعلى، عن حميد، قال سالت انسا. حدثنا عمرو بن زرارة، حدثنا زياد، قال حدثني حميد الطويل، عن انس رضى الله عنه قال غاب عمي انس بن النضر عن قتال بدر فقال يا رسول الله، غبت عن اول قتال قاتلت المشركين، لين الله اشهدني قتال المشركين ليرين الله ما اصنع، فلما كان يوم احد وانكشف المسلمون قال " اللهم اني اعتذر اليك مما صنع هولاء يعني اصحابه وابرا اليك مما صنع هولاء " يعني المشركين ثم تقدم، فاستقبله سعد بن معاذ، فقال يا سعد بن معاذ، الجنة، ورب النضر اني اجد ريحها من دون احد. قال سعد فما استطعت يا رسول الله ما صنع. قال انس فوجدنا به بضعا وثمانين ضربة بالسيف او طعنة برمح او رمية بسهم، ووجدناه قد قتل وقد مثل به المشركون، فما عرفه احد الا اخته ببنانه. قال انس كنا نرى او نظن ان هذه الاية نزلت فيه وفي اشباهه {من المومنين رجال صدقوا ما عاهدوا الله عليه} الى اخر الاية. وقال ان اخته وهى تسمى الربيع كسرت ثنية امراة فامر رسول الله صلى الله عليه وسلم بالقصاص، فقال انس يا رسول الله، والذي بعثك بالحق لا تكسر ثنيتها. فرضوا بالارش وتركوا القصاص، فقال رسول الله صلى الله عليه وسلم " ان من عباد الله من لو اقسم على الله لابره
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதி யெடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம்தான் பெற்றேன். (ஒரு வழக்கின்போது) அவரது சாட்சியத்தை இரு மனிதர்களின் சாட்சியத் திற்குச் சமமாக நபி (ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர் களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறைவழியில் மரணமடைய வேண்டும் என்ற) தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (33:23) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، حدثني اسماعيل، قال حدثني اخي، عن سليمان، اراه عن محمد بن ابي عتيق، عن ابن شهاب، عن خارجة بن زيد، ان زيد بن ثابت رضى الله عنه قال نسخت الصحف في المصاحف، ففقدت اية من سورة الاحزاب، كنت اسمع رسول الله صلى الله عليه وسلم يقرا بها، فلم اجدها الا مع خزيمة بن ثابت الانصاري الذي جعل رسول الله صلى الله عليه وسلم شهادته شهادة رجلين، وهو قوله {من المومنين رجال صدقوا ما عاهدوا الله عليه}
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முதலில்) நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, பிறகு போர் புரிவீராக!” என்று கூறினார்கள். அவ்வாறே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பிறகு (இறைவழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، حدثنا شبابة بن سوار الفزاري، حدثنا اسراييل، عن ابي اسحاق، قال سمعت البراء رضى الله عنه يقول اتى النبي صلى الله عليه وسلم رجل مقنع بالحديد فقال يا رسول الله اقاتل واسلم. قال " اسلم ثم قاتل ". فاسلم ثم قاتل، فقتل، فقال رسول الله صلى الله عليه وسلم " عمل قليلا واجر كثيرا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர் களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த் அல்பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்குத் தாங்கள் அறிவிக்கமாட்டீர்களா? அவர் பத்ர் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர்மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்துவிட்டிருந்தது.14 அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமை யாக இருந்துவிடுவேன்; அவர் வேறெந்த நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல சோலைகள் உள்ளன. உம்முடைய மகன் (அவற்றில்) மிக உயர்ந்த யிஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க் கச் சோலையை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله، حدثنا حسين بن محمد ابو احمد، حدثنا شيبان، عن قتادة، حدثنا انس بن مالك، ان ام الربيع بنت البراء، وهى ام حارثة بن سراقة اتت النبي صلى الله عليه وسلم فقالت يا نبي الله، الا تحدثني عن حارثة وكان قتل يوم بدر اصابه سهم غرب، فان كان في الجنة، صبرت، وان كان غير ذلك اجتهدت عليه في البكاء. قال " يا ام حارثة، انها جنان في الجنة، وان ابنك اصاب الفردوس الاعلى
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடு கிறார்; இன்னொரு மனிதர் தமது தகுதி யைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) யார் இறைவழியில் போரிடுபவர் ஆவார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவர்களில் யாருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) யார் அல்லாஹ் வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறாரோ அவரே இறைவழியில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.15 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن عمرو، عن ابي وايل، عن ابي موسى رضى الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال الرجل يقاتل للمغنم، والرجل يقاتل للذكر، والرجل يقاتل ليرى مكانه، فمن في سبيل الله قال " من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரின் பாதங்கள் இரண்டிலும் இறைவழியில் புழுதி படிந்திருக்க, அவற்றை நரக நெருப்புத் தீண்டு வதில்லை. இதை அபூஅப்ஸ் அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.16 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا محمد بن المبارك، حدثنا يحيى بن حمزة، قال حدثني يزيد بن ابي مريم، اخبرنا عباية بن رافع بن خديج، قال اخبرني ابو عبس، هو عبد الرحمن بن جبر ان رسول الله صلى الله عليه وسلم قال " ما اغبرت قدما عبد في سبيل الله فتمسه النار
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடமும் தம் புதல்வர் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமும், ‘‘அபூசயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் கூறும் ஹதீஸைச் செவியுறுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்களும் அவர்களுடைய (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூசயீத் (ரலி) அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் வந்து, முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டார்கள். பிறகு கூறலானார்கள்: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டிருந்தோம். அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரது தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அவர்களை அம்மார், அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தார் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.17 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا عبد الوهاب، حدثنا خالد، عن عكرمة، ان ابن عباس، قال له ولعلي بن عبد الله ايتيا ابا سعيد فاسمعا من حديثه. فاتيناه وهو واخوه في حايط لهما يسقيانه، فلما رانا جاء فاحتبى وجلس فقال كنا ننقل لبن المسجد لبنة لبنة، وكان عمار ينقل لبنتين لبنتين، فمر به النبي صلى الله عليه وسلم ومسح عن راسه الغبار وقال " ويح عمار، تقتله الفية الباغية، عمار يدعوهم الى الله ويدعونه الى النار
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் முடிந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலை யைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஆயுதத்தைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இதோ, இங்கே!” என்று பனூ குறைழா (எனும் யூதக்) குலத்தாரை நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا عبدة، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم لما رجع يوم الخندق ووضع السلاح واغتسل، فاتاه جبريل وقد عصب راسه الغبار فقال وضعت السلاح، فوالله ما وضعته. فقال رسول الله صلى الله عليه وسلم " فاين ". قال ها هنا. واوما الى بني قريظة. قالت فخرج اليهم رسول الله صلى الله عليه وسلم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிபிஃரு மஊனா’ (எனுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் காலை (நேரத் தொழுகை)களில் பிரார்த்தித்தார்கள். ரிஅல், தக்வான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய கூட்டத்தாரே அவர்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதிவந்தோம்; பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம்.18 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك رضى الله عنه قال دعا رسول الله صلى الله عليه وسلم على الذين قتلوا اصحاب بير معونة ثلاثين غداة، على رعل وذكوان وعصية عصت الله ورسوله، قال انس انزل في الذين قتلوا ببير معونة قران قراناه ثم نسخ بعد بلغوا قومنا ان قد لقينا ربنا فرضي عنا ورضينا عنه
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.19 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப் பில் இல்லை” என்று பதிலளித்தார். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو، سمع جابر بن عبد الله رضى الله عنهما يقول اصطبح ناس الخمر يوم احد، ثم قتلوا شهداء. فقيل لسفيان من اخر ذلك اليوم قال ليس هذا فيه
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரின்போது) என் தந்தை (அப்துல்லாஹ்), உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் சமூகத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரிவைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர் (ரலி) அவர்களின் மகள் என்றோ அவர்களுடைய சகோதரி என்றோ (அதாவது ஜாபிரின் அத்தை என்றோ, தந்தையின் அத்தை என்றோ) கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஏன் அழுகிறாய்?› அல்லது ‘நீ அழாதே!› வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள். (புகாரீ ஆகிய) நான் அறிவிப்பாளர் ஸதகா பின் ஃபள்ல் (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர் (உடல்) தூக்கப்படும்வரை (நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஜாபிர் (ரலி) அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் உறுதியின்றிக் கூறினார்கள்)” எனப் பதிலளித் தார்கள்.20 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، قال اخبرنا ابن عيينة، قال سمعت محمد بن المنكدر، انه سمع جابرا، يقول جيء بابي الى النبي صلى الله عليه وسلم وقد مثل به ووضع بين يديه، فذهبت اكشف عن وجهه، فنهاني قومي، فسمع صوت صايحة فقيل ابنة عمرو، او اخت عمرو. فقال " لم تبكي او لا تبكي، ما زالت الملايكة تظله باجنحتها ". قلت لصدقة افيه حتى رفع قال ربما قاله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணி யத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறை வழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، قال سمعت قتادة، قال سمعت انس بن مالك رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ما احد يدخل الجنة يحب ان يرجع الى الدنيا وله ما على الارض من شىء، الا الشهيد، يتمنى ان يرجع الى الدنيا فيقتل عشر مرات، لما يرى من الكرامة
உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையும் எழுத்தருமான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு, ‘‘சொர்க்கம், வாட் களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என (கடிதம்) எழுதினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا معاوية بن عمرو، حدثنا ابو اسحاق، عن موسى بن عقبة، عن سالم ابي النضر، مولى عمر بن عبيد الله وكان كاتبه قال كتب اليه عبد الله بن ابي اوفى رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " واعلموا ان الجنة تحت ظلال السيوف ". تابعه الاويسي عن ابن ابي الزناد عن موسى بن عقبة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நபி) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு லிஅல்லது தொண்ணூற்றொன்பதுலி துணைவியரிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ் வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்” என்று கூறினார்கள். அவர்களுடைய தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘அல்லாஹ் நாடினால்’ (இன்ஷா அல்லாஹ்) என்று சொல்லுங்கள் என்றார். சுலைமான் (அலை) அவர்கள் யிஇன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்துவிட்டார்கள். ஆகவே, (அவர்களின் துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத்தான் பெற்றெடுத்தார். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அவர், ‘அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால், (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப் போர் புரிகின்ற வீரர்களாய் ஆகியிருப் பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، قال سمعت ابا هريرة رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال " قال سليمان بن داود عليهما السلام لاطوفن الليلة على ماية امراة او تسع وتسعين كلهن ياتي بفارس يجاهد في سبيل الله، فقال له صاحبه ان شاء الله. فلم يقل ان شاء الله. فلم يحمل منهن الا امراة واحدة، جاءت بشق رجل، والذي نفس محمد بيده، لو قال ان شاء الله، لجاهدوا في سبيل الله فرسانا اجمعون
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந் தார்கள். ‘‘(ஒருமுறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ள)ப் புறப்பட்டார்கள்; மேலும், ‘‘இந்தக் குதிரை யைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن عبد الملك بن واقد، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس، رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم احسن الناس واشجع الناس واجود الناس، ولقد فزع اهل المدينة، فكان النبي صلى الله عليه وسلم سبقهم على فرس، وقال " وجدناه بحرا
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்றுகொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்துகொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; கருவேல முள்மரம்வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் மேல் துண்டு முள்மரத்தில் சிக்கிக்கொண்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ‘‘என் மேல்துண்டை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தாலும்கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்ய னாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عمر بن محمد بن جبير بن مطعم، ان محمد بن جبير، قال اخبرني جبير بن مطعم، انه بينما هو يسير مع رسول الله صلى الله عليه وسلم ومعه الناس، مقفله من حنين، فعلقه الناس يسالونه حتى اضطروه الى سمرة فخطفت رداءه، فوقف النبي صلى الله عليه وسلم فقال " اعطوني ردايي، لو كان لي عدد هذه العضاه نعما لقسمته بينكم، ثم لا تجدوني بخيلا ولا كذوبا ولا جبانا