Loading...

Loading...
நூல்கள்
௧௯௨ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம்வரையிலான வசனங்கள் (2:275லி281) இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘‘மதுபான வணிகம் தடை செய்யப்பட்டுவிட்டது” என்றார்கள்.86 அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا شعبة، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، عن عايشة رضى الله عنها لما نزلت ايات سورة البقرة عن اخرها خرج النبي صلى الله عليه وسلم فقال " حرمت التجارة في الخمر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.87 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني بشر بن مرحوم، حدثنا يحيى بن سليم، عن اسماعيل بن امية، عن سعيد بن ابي سعيد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " قال الله ثلاثة انا خصمهم يوم القيامة، رجل اعطى بي ثم غدر، ورجل باع حرا فاكل ثمنه، ورجل استاجر اجيرا فاستوفى منه، ولم يعط اجره
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு (வேறு அடிமைப் பெண்ணைக் கொடுத்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கொள்ளவே) ஸஃபிய்யா நபி (ஸல்) அவர்களுக்கு வந்துசேர்ந்தார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس رضى الله عنه قال كان في السبى صفية، فصارت الى دحية الكلبي، ثم صارت الى النبي صلى الله عليه وسلم
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். (அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிப்பதால் உங்கள்மீது (குற்றம்) இல்லை. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் எழுதிவிட்ட எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.90 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني ابن محيريز، ان ابا سعيد الخدري رضى الله عنه اخبره انه، بينما هو جالس عند النبي صلى الله عليه وسلم قال يا رسول الله انا نصيب سبيا، فنحب الاثمان، فكيف ترى في العزل فقال " اوانكم تفعلون ذلك لا عليكم ان لا تفعلوا ذلكم، فانها ليست نسمة كتب الله ان تخرج الا هي خارجة
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட (முதப்பரான) அடிமையை (அவருடைய உரிமையாளரின் கடனை அடைப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் விற்பனை செய்(துகொடுத்)தார்கள். அத்தியாயம் :
حدثنا ابن نمير، حدثنا وكيع، حدثنا اسماعيل، عن سلمة بن كهيل، عن عطاء، عن جابر رضى الله عنه قال باع النبي صلى الله عليه وسلم المدبر
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பின்தேதியிட்டு விடுதலை அளிக்கப்பட்ட அடிமையான) முதப்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விற்றார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا سفيان، عن عمرو، سمع جابر بن عبد الله رضى الله عنهما يقول باعه رسول الله صلى الله عليه وسلم
ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குச் சாட்டை யடி கொடுங்கள்! மூன்றாவது தடவை, அல்லது நான்காவது தடவையும் அவள் விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.92 அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا يعقوب، حدثنا ابي، عن صالح، قال حدث ابن شهاب، ان عبيد الله، اخبره ان زيد بن خالد وابا هريرة رضى الله عنهما اخبراه انهما، سمعا رسول الله صلى الله عليه وسلم يسال عن الامة تزني ولم تحصن قال " اجلدوها، ثم ان زنت فاجلدوها، ثم بيعوها بعد الثالثة او الرابعة
ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குச் சாட்டை யடி கொடுங்கள்! மூன்றாவது தடவை, அல்லது நான்காவது தடவையும் அவள் விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.92 அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا يعقوب، حدثنا ابي، عن صالح، قال حدث ابن شهاب، ان عبيد الله، اخبره ان زيد بن خالد وابا هريرة رضى الله عنهما اخبراه انهما، سمعا رسول الله صلى الله عليه وسلم يسال عن الامة تزني ولم تحصن قال " اجلدوها، ثم ان زنت فاجلدوها، ثم بيعوها بعد الثالثة او الرابعة
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ‘‘உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபசாரம் செய்து, அது வெளிப் பட்டுவிட்டால், அவளுக்கு (ஐம்பது) சாட்டையடியைத் தண்டனையாக அவர் வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். மீண்டும் அவள் விபசாரம் செய்தால் தண்டனையாக அவளுக்கு அவர் சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். பிறகு மூன்றாம் முறை அவள் விபசாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை அவர் விற்றுவிடட்டும்!” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال اخبرني الليث، عن سعيد، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " اذا زنت امة احدكم، فتبين زناها فليجلدها الحد، ولا يثرب عليها، ثم ان زنت فليجلدها الحد ولا يثرب، ثم ان زنت الثالثة فتبين زناها فليبعها ولو بحبل من شعر
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தார்கள். (கமூஸ்) கோட்டையை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியாக்கிக்கொடுத்தான். அப்போது (சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அவரோ புது மணப் பெண்ணாக இருந்தார். அவருடைய கணவரோ கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யிசத்துர் ரவ்ஹா’ எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) யிஹைஸ்’ எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக!” என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல் தமக்குப் பின்னால் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரை அமைத்ததைப் பார்த்தேன். பிறகு ஒட்டகத்தின் அருகில் அமர்ந்து, தமது முழங்காலை (கீழே) வைத்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால்மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الغفار بن داود، حدثنا يعقوب بن عبد الرحمن، عن عمرو بن ابي عمرو، عن انس بن مالك رضى الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم خيبر، فلما فتح الله عليه الحصن ذكر له جمال صفية بنت حيى بن اخطب، وقد قتل زوجها، وكانت عروسا، فاصطفاها رسول الله صلى الله عليه وسلم لنفسه فخرج بها، حتى بلغنا سد الروحاء حلت، فبنى بها، ثم صنع حيسا في نطع صغير، ثم قال رسول الله صلى الله عليه وسلم " اذن من حولك ". فكانت تلك وليمة رسول الله صلى الله عليه وسلم على صفية، ثم خرجنا الى المدينة، قال فرايت رسول الله صلى الله عليه وسلم يحوي لها وراءه بعباءة، ثم يجلس عند بعيره فيضع ركبته، فتضع صفية رجلها على ركبته، حتى تركب
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில், ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல் களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப் படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற் றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கூடாது; அது தடை செய்யப் பட்டதுதான்” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘‘யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن عطاء بن ابي رباح، عن جابر بن عبد الله رضى الله عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح، وهو بمكة " ان الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والاصنام ". فقيل يا رسول الله، ارايت شحوم الميتة فانها يطلى بها السفن، ويدهن بها الجلود، ويستصبح بها الناس. فقال " لا، هو حرام ". ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك " قاتل الله اليهود، ان الله لما حرم شحومها جملوه ثم باعوه فاكلوا ثمنه ". قال ابو عاصم حدثنا عبد الحميد، حدثنا يزيد، كتب الى عطاء سمعت جابرا رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாய் விற்ற காசையும் விபசாரியின் வருமானத்தையும் சோதிடரின் தட்சணை யையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن ابي بكر بن عبد الرحمن، عن ابي مسعود الانصاري رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن
அவன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவரது தொழிற் கருவிகளை உடைக்கும் படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாய் விற்ற கிரயம், அடிமைப் பெண்ணின் (தவறான) சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்; பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் அவர்கள் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.94 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال اخبرني عون بن ابي جحيفة، قال رايت ابي اشترى حجاما، فسالته عن ذلك،. قال ان رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الدم، وثمن الكلب، وكسب الامة، ولعن الواشمة والمستوشمة، واكل الربا، وموكله، ولعن المصور