ஹதீஸ்கள்
#2238
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அவன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவரது தொழிற் கருவிகளை உடைக்கும் படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாய் விற்ற கிரயம், அடிமைப் பெண்ணின் (தவறான) சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்; பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் அவர்கள் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.94 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال اخبرني عون بن ابي جحيفة، قال رايت ابي اشترى حجاما، فسالته عن ذلك،. قال ان رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الدم، وثمن الكلب، وكسب الامة، ولعن الواشمة والمستوشمة، واكل الربا، وموكله، ولعن المصور
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2238
- Book Index
- 184
Grades
- -
