ஹதீஸ்கள்
#2229
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். (அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிப்பதால் உங்கள்மீது (குற்றம்) இல்லை. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் எழுதிவிட்ட எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.90 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني ابن محيريز، ان ابا سعيد الخدري رضى الله عنه اخبره انه، بينما هو جالس عند النبي صلى الله عليه وسلم قال يا رسول الله انا نصيب سبيا، فنحب الاثمان، فكيف ترى في العزل فقال " اوانكم تفعلون ذلك لا عليكم ان لا تفعلوا ذلكم، فانها ليست نسمة كتب الله ان تخرج الا هي خارجة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2229
- Book Index
- 176
Grades
- -
