Loading...

Loading...
நூல்கள்
௧௯௨ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!” என்று கூறுகிறீர்கள். ‘‘முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அவர்கள் (அதிகமாக) அறிவிப்பதில்லையே!” என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வணிகத்தில் ஈடுபட்டி ருந்தனர். நான் யிஎன் வயிறு நிரம்பினால் போதும்’ என்று நபி (ஸல்) அவர்களுட னேயே இருந்துவந்தேன். அவர்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும் போதும் நான் (அல்லாஹ்வின் தூதருட னேயே) இருப்பேன்; அவர்கள் (நபிமொழி களை) மறந்துவிடும்போது நான் நினைவில் வைத்திருப்பேன். என் அன்சாரி சகோதரர் கள் தங்கள் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்; நான் திண்ணை ஏழைத் தோழர்களில் ஓர் ஏழையாக இருந்தேன்; அவர்கள் மறந்துவிடும் வேளையில் (நபி (ஸல்) அவர்களின் போதனைகளை) நான் ம”ம் செய்துகொள்வேன். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்த போது, ‘‘நான், எனது இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை யார் தமது துணியை (மேல்துண்டை) விரித்து வைத்திருந்து, பிறகு அதைத் தம்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க்கொள்கிறாரோ அவர் நான் சொல்பவற்றை ம”ம் செய்யாமல் இருக்கமாட்டார்” எனக் கூறினார்கள். நான் என்மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து(அணைத்து)க்கொண்டேன்; (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதையும் நான் மறக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، حدثنا شعيب، عن الزهري، قال اخبرني سعيد بن المسيب، وابو سلمة بن عبد الرحمن ان ابا هريرة رضى الله عنه قال انكم تقولون ان ابا هريرة يكثر الحديث عن رسول الله صلى الله عليه وسلم. وتقولون ما بال المهاجرين والانصار لا يحدثون عن رسول الله صلى الله عليه وسلم بمثل حديث ابي هريرة وان اخوتي من المهاجرين كان يشغلهم صفق بالاسواق، وكنت الزم رسول الله صلى الله عليه وسلم على ملء بطني، فاشهد اذا غابوا واحفظ اذا نسوا، وكان يشغل اخوتي من الانصار عمل اموالهم، وكنت امرا مسكينا من مساكين الصفة اعي حين ينسون، وقد قال رسول الله صلى الله عليه وسلم في حديث يحدثه " انه لن يبسط احد ثوبه حتى اقضي مقالتي هذه، ثم يجمع اليه ثوبه الا وعى ما اقول ". فبسطت نمرة على، حتى اذا قضى رسول الله صلى الله عليه وسلم مقالته جمعتها الى صدري، فما نسيت من مقالة رسول الله صلى الله عليه وسلم تلك من شىء
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத் துவத்தை ஏற்படுத்தினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘நான் அன்சாரிகளிலேயே அதிகமான செல்வம் உடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவிய ரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கி றேன். அவரது யிஇத்தா’ (காத்திருப்புக் காலம்) முடிந்ததும் அவரை உமக்கு மணமுடித்துத்தருகிறேன்” எனக் கூறினார். அப்போது நான், ‘‘இது எனக்குத் தேவையில்லை. வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ‘‘கைனுகா எனும் சந்தை இருக்கிறது” என்றார். நான் (அடுத்த நாள்) காலை அங்கு சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) அடையாளத்துடன் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் மண முடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘யாரை?” என்றார்கள். ‘‘ஓர் அன்சாரிப் பெண்ணை” என்றேன். ‘‘எவ்வளவு யிமஹ்ர்’ (மணக்கொடை) கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். ‘‘ ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்கு லிஅளவுக்குலி தங்கம்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن جده، قال قال عبد الرحمن بن عوف رضى الله عنه لما قدمنا المدينة اخى رسول الله صلى الله عليه وسلم بيني وبين سعد بن الربيع فقال سعد بن الربيع اني اكثر الانصار مالا، فاقسم لك نصف مالي، وانظر اى زوجتى هويت نزلت لك عنها، فاذا حلت تزوجتها. قال فقال عبد الرحمن لا حاجة لي في ذلك، هل من سوق فيه تجارة قال سوق قينقاع. قال فغدا اليه عبد الرحمن، فاتى باقط وسمن قال ثم تابع الغدو، فما لبث ان جاء عبد الرحمن عليه اثر صفرة، فقال رسول الله صلى الله عليه وسلم " تزوجت ". قال نعم. قال " ومن ". قال امراة من الانصار. قال " كم سقت ". قال زنة نواة من ذهب او نواة من ذهب. فقال له النبي صلى الله عليه وسلم " اولم ولو بشاة
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி னார்கள். சஅத் (ரலி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘எனது செல்வத்தைச் சரிபாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன்; (என் மனைவியரில் ஒருவரை மணவிலக்குச் செய்து) உமக்கு மண முடித்துத்தருகிறேன்” எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்) வழங்குவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்” எனக் கூறினார்கள். (அதன்படி சந்தைக்குச் சென்று) அவர்கள் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, தாம் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டுவந்தார்கள். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார் கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘என்ன விசேஷம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ûணை மணமுடித்துக்கொண்டேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தீர்?› எனக் கேட்டார்கள். ‘‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا حميد، عن انس رضى الله عنه قال قدم عبد الرحمن بن عوف المدينة فاخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الانصاري، وكان سعد ذا غنى، فقال لعبد الرحمن اقاسمك مالي نصفين، وازوجك. قال بارك الله لك في اهلك ومالك، دلوني على السوق. فما رجع حتى استفضل اقطا وسمنا، فاتى به اهل منزله، فمكثنا يسيرا او ما شاء الله فجاء وعليه وضر من صفرة، فقال له النبي صلى الله عليه وسلم " مهيم ". قال يا رسول الله تزوجت امراة من الانصار. قال " ما سقت اليها ". قال نواة من ذهب، او وزن نواة من ذهب. قال " اولم ولو بشاة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உ(க்)காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வணிகம் செய்வதை மக்கள் பாவம் எனக் கருதினர். அப்போதுதான், ‘‘(ஹஜ்ஜின்போது வணிகம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள்மீது குற்றமன்று” (2:198) எனும் வசனம் அருளப் பெற்றது.2 இவ்வசனத்துடன் ‘ஹஜ் காலங்களில்’ (ஃபீ மவாசிமில் ஹஜ்) என்பதையும் சேர்த்தே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியிருக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، عن ابن عباس رضى الله عنهما قال كانت عكاظ ومجنة وذو المجاز اسواقا في الجاهلية، فلما كان الاسلام فكانهم تاثموا فيه فنزلت {ليس عليكم جناح ان تبتغوا فضلا من ربكم } في مواسم الحج، قراها ابن عباس
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவை இரண்டுக்கு மிடையே சந்தேகத்திற்கிடமான சில செயல்களும் உள்ளன. யார் பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை கைவிடுகிறாரோ அவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் கைவிடுவார்; யார் பாவம் எனச் சந்தேகிக்கப்படுபவற்றைச் செய்யத் துணிகிறாரோ அவர் (பாவம் என்று) தெளிவாகத் தெரிகின்றவற்றிலும் சிக்கிக்கொள்ளக்கூடும். பாவங்கள் அல்லாஹ்வின் வேலிகளாகும். யார் வேலியைச் சுற்றி மேய்கிறாரோ அவர் அதற்குள்ளேயே சென்றுவிடக்கூடும்.3 இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن ابن عون، عن الشعبي، سمعت النعمان بن بشير رضى الله عنه سمعت النبي صلى الله عليه وسلم. حدثنا علي بن عبد الله، حدثنا ابن عيينة، عن ابي فروة، عن الشعبي، قال سمعت النعمان، عن النبي صلى الله عليه وسلم. حدثنا عبد الله بن محمد، حدثنا ابن عيينة، عن ابي فروة، سمعت الشعبي، سمعت النعمان بن بشير رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم. حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن ابي فروة، عن الشعبي، عن النعمان بن بشير رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " الحلال بين، والحرام بين وبينهما امور مشتبهة، فمن ترك ما شبه عليه من الاثم كان لما استبان اترك، ومن اجترا على ما يشك فيه من الاثم اوشك ان يواقع ما استبان، والمعاصي حمى الله، من يرتع حول الحمى يوشك ان يواقعه
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கறுப்பு நிறப் பெண் ஒருவர் (என்னி டம்) வந்து, எனக்கும் என் மனைவிக்கும், தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார்; இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை: பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு, ‘‘இவ்வாறு கூறப்பட்டபின் எப்படி (அவளுடன் நீர் வாழ முடியும்)?” என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூஇஹாப் தமீமியின் புதல்வியாவார்.4 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، اخبرنا عبد الله بن عبد الرحمن بن ابي حسين، حدثنا عبد الله بن ابي مليكة، عن عقبة بن الحارث رضى الله عنه ان امراة، سوداء جاءت، فزعمت انها ارضعتهما، فذكر للنبي فاعرض عنه، وتبسم النبي صلى الله عليه وسلم. قال " كيف وقد قيل ". وقد كانت تحته ابنة ابي اهاب التميمي
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (தமது மரணத் தறுவாயில்) தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆ என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன்; எனவே, அவனை நீ கைப்பற்றிக்கொள்!” என்று உறுதிமொழி வாங்கினார். அதன்படி, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு, ‘‘இவன் என் சகோதரரின் மகன்; என்னிடத்தில் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்” எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது பிறந்த வன்” எனக் கூறினார். இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்” எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் புதல்வர் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸம்ஆவின் புதல்வர் அப்தே! இவன் உமக்கு உரியவú”’ எனக் கூறினார்கள். பின்னர், ‘‘(தாய்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது; விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! நீ இந்த இளைஞனிடமிருந்து திரையிட்டு உன்னை மறைத்துக்கொள்!” என்றார்கள். (‘அவர் ஸம்ஆவின் மகன்தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததால்தான் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு, அவர் அன்னை சவ்தா (ரலி) அவர்களை இறக்கும்வரை பார்க்கவில்லை.5 அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها قالت كان عتبة بن ابي وقاص عهد الى اخيه سعد بن ابي وقاص ان ابن وليدة زمعة مني فاقبضه. قالت فلما كان عام الفتح اخذه سعد بن ابي وقاص وقال ابن اخي، قد عهد الى فيه. فقام عبد بن زمعة، فقال اخي، وابن وليدة ابي، ولد على فراشه. فتساوقا الى النبي صلى الله عليه وسلم. فقال سعد يا رسول الله، ابن اخي، كان قد عهد الى فيه. فقال عبد بن زمعة اخي وابن وليدة ابي، ولد على فراشه. فقال رسول الله صلى الله عليه وسلم " هو لك يا عبد بن زمعة ". ثم قال النبي صلى الله عليه وسلم " الولد للفراش، وللعاهر الحجر ". ثم قال لسودة بنت زمعة زوج النبي صلى الله عليه وسلم " احتجبي منه ". لما راى من شبهه بعتبة، فما راها حتى لقي الله
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடு வதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிராணியை அம்பின் கூர்முனை தாக்கிக் கொன்றால் அதை நீர் உண்ணலாம்; அம்பின் பக்கவாட்டுப் பகுதி தாக்கிக் கொன்றால் அதை நீர் உண்ணாதீர்!. ஏனெனில், அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாகும்” என்றார் கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் உண்ணலாமா?)” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உண்ணாதீர்! நீர் அல்லாஹ்வின் பெயர் கூறியது உமது நாயை அனுப்பியபோதுதான். மற்றொரு நாய்க்கு நீர் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என விடையளித்தார்கள்.6 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال اخبرني عبد الله بن ابي السفر، عن الشعبي، عن عدي بن حاتم رضى الله عنه قال سالت النبي صلى الله عليه وسلم عن المعراض فقال " اذا اصاب بحده فكل، واذا اصاب بعرضه فلا تاكل، فانه وقيذ ". قلت يا رسول الله ارسل كلبي واسمي، فاجد معه على الصيد كلبا اخر لم اسم عليه، ولا ادري ايهما اخذ. قال " لا تاكل، انما سميت على كلبك ولم تسم على الاخر
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘‘இது தர்ம (ஸதகா)ப் பொரு ளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது படுக்கை யில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன் (அது தர்மப் பொருளாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் போட்டு விடுகிறேன்)” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن منصور، عن طلحة، عن انس رضى الله عنه قال مر النبي صلى الله عليه وسلم بتمرة مسقوطة فقال " لولا ان تكون صدقة لاكلتها ". وقال همام عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اجد تمرة ساقطة على فراشي
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் தொழும்போது வாயு பிரிந்தது போன்று உணர்கிறார்; இதனால் தொழுகை முறியுமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை முறியாது” என்றார்கள்.8 சப்தத்தைக் கேட்காமல், நாற்றத்தை உணராமல் அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டியதில்லை என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا ابن عيينة، عن الزهري، عن عباد بن تميم، عن عمه، قال شكي الى النبي صلى الله عليه وسلم الرجل يجد في الصلاة شييا، ايقطع الصلاة قال " لا، حتى يسمع صوتا او يجد ريحا ". وقال ابن ابي حفصة عن الزهري لا وضوء الا فيما وجدت الريح او سمعت الصوت
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரே! ஒரு கூட்டத் தார் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அதனை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அதை உண்ணுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثني احمد بن المقدام العجلي، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا هشام بن عروة،، عن ابيه، عن عايشة رضى الله عنها ان قوما، قالوا يا رسول الله، ان قوما ياتوننا باللحم لا ندري اذكروا اسم الله عليه ام لا فقال رسول الله صلى الله عليه وسلم " سموا الله عليه وكلوه
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டி ருந்தோம். அப்போது உணவுப் பொருட் களை ஏற்றிக்கொண்டு ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டக (வணிக)க் கூட்டம் வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர் களுடன் பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போதுதான், ‘‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் அதன்பால் சென்றுவிடுகிறார்கள்” (62:11) எனும் வசனம் அருளப்பெற்றது.9 அத்தியாயம் :
حدثنا طلق بن غنام، حدثنا زايدة، عن حصين، عن سالم، قال حدثني جابر رضى الله عنه قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم اذ اقبلت من الشام عير، تحمل طعاما، فالتفتوا اليها، حتى ما بقي مع النبي صلى الله عليه وسلم الا اثنا عشر رجلا فنزلت {واذا راوا تجارة او لهوا انفضوا اليها}
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர், தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا ابن ابي ذيب، حدثنا سعيد المقبري، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ياتي على الناس زمان، لا يبالي المرء ما اخذ منه امن الحلال ام من الحرام
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நாணயமாற்று வணிகம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வணிகம் செய்பவர்களாக இருந்தோம்: அவர்களிடம் இந்த நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டோம்; அதற்கு, உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை; தவணையாக இருந்தால் அது கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் (மொத்தம்) ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، قال اخبرني عمرو بن دينار، عن ابي المنهال، قال كنت اتجر في الصرف، فسالت زيد بن ارقم رضى الله عنه فقال قال النبي صلى الله عليه وسلم. وحدثني الفضل بن يعقوب، حدثنا الحجاج بن محمد، قال ابن جريج اخبرني عمرو بن دينار، وعامر بن مصعب، انهما سمعا ابا المنهال، يقول سالت البراء بن عازب وزيد بن ارقم عن الصرف، فقالا كنا تاجرين على عهد رسول الله صلى الله عليه وسلم فسالنا رسول الله صلى الله عليه وسلم عن الصرف فقال " ان كان يدا بيد فلا باس، وان كان نساء فلا يصلح
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நாணயமாற்று வணிகம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வணிகம் செய்பவர்களாக இருந்தோம்: அவர்களிடம் இந்த நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டோம்; அதற்கு, உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை; தவணையாக இருந்தால் அது கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் (மொத்தம்) ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، قال اخبرني عمرو بن دينار، عن ابي المنهال، قال كنت اتجر في الصرف، فسالت زيد بن ارقم رضى الله عنه فقال قال النبي صلى الله عليه وسلم. وحدثني الفضل بن يعقوب، حدثنا الحجاج بن محمد، قال ابن جريج اخبرني عمرو بن دينار، وعامر بن مصعب، انهما سمعا ابا المنهال، يقول سالت البراء بن عازب وزيد بن ارقم عن الصرف، فقالا كنا تاجرين على عهد رسول الله صلى الله عليه وسلم فسالنا رسول الله صلى الله عليه وسلم عن الصرف فقال " ان كان يدا بيد فلا باس، وان كان نساء فلا يصلح
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். லிஉமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள் போலும்லி அபூமூசா (ரலி) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். ‘‘அவர் திரும்பிச் சென்றுவிட்டார்” என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்துவரச் செய்தார்கள். (‘‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்” எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!” எனக் கூறினார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களில் சிறியவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்லமாட்டார்கள்” என்றனர். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) சந்தைகளில் நான் வணிகம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டது (போலும்)!” என்று கூறினார்கள்.10 அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، اخبرنا مخلد بن يزيد، اخبرنا ابن جريج، قال اخبرني عطاء، عن عبيد بن عمير، ان ابا موسى الاشعري، استاذن على عمر بن الخطاب رضى الله عنه فلم يوذن له، وكانه كان مشغولا فرجع ابو موسى، ففرغ عمر فقال الم اسمع صوت عبد الله بن قيس ايذنوا له قيل قد رجع. فدعاه. فقال كنا نومر بذلك. فقال تاتيني على ذلك بالبينة. فانطلق الى مجلس الانصار، فسالهم. فقالوا لا يشهد لك على هذا الا اصغرنا ابو سعيد الخدري. فذهب بابي سعيد الخدري. فقال عمر اخفي على من امر رسول الله صلى الله عليه وسلم الهاني الصفق بالاسواق. يعني الخروج الى تجارة
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்: அவர் கடல் மார்க்கமாகப் பயணம் சென்று, தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டார். தொடர்ந்து ஹதீஸைக் கூறினார்கள்.11 அத்தியாயம் :
وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، عن ابي هريرة رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم انه ذكر رجلا من بني اسراييل، خرج في البحر فقضى حاجته. وساق الحديث. حدثني عبد الله بن صالح قال حدثني الليث بهذا
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது, (வணிக)க் கூட்டம் ஒன்று வந்தது; உடனே பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒட்டக (வணிகக் கூட்டத்தை நோக்கி) கலைந்து சென்றுவிட்டனர். அப்போதுதான், ‘‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அங்கே சென்று விடுகிறார்கள்” (62:11) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثني محمد، قال حدثني محمد بن فضيل، عن حصين، عن سالم بن ابي الجعد، عن جابر رضى الله عنه قال اقبلت عير، ونحن نصلي مع النبي صلى الله عليه وسلم الجمعة، فانفض الناس الا اثنى عشر رجلا، فنزلت هذه الاية {واذا راوا تجارة او لهوا انفضوا اليها وتركوك قايما}
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர் களுக்குத்) தர்மம் செய்தால், (அப்படி) தர்மம் செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்குக் கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்காக அவளுடைய கணவனுக்கும் நற்பலன் உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் (செலவிட உதவியதற்காக) அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும். அவர்களில் ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم " اذا انفقت المراة من طعام بيتها، غير مفسدة، كان لها اجرها بما انفقت، ولزوجها بما كسب، وللخازن مثل ذلك، لا ينقص بعضهم اجر بعض شييا
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு பெண், தன் கணவனின் கட்டளை யின்றி அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் (சம்பாதித்த) அவனுக்கு நற்பலனில் பாதி உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني يحيى بن جعفر، حدثنا عبد الرزاق، عن معمر، عن همام، قال سمعت ابا هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اذا انفقت المراة من كسب زوجها عن غير امره، فله نصف اجره