ஹதீஸ்கள்
#2235
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தார்கள். (கமூஸ்) கோட்டையை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியாக்கிக்கொடுத்தான். அப்போது (சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அவரோ புது மணப் பெண்ணாக இருந்தார். அவருடைய கணவரோ கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யிசத்துர் ரவ்ஹா’ எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) யிஹைஸ்’ எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக!” என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல் தமக்குப் பின்னால் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரை அமைத்ததைப் பார்த்தேன். பிறகு ஒட்டகத்தின் அருகில் அமர்ந்து, தமது முழங்காலை (கீழே) வைத்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால்மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الغفار بن داود، حدثنا يعقوب بن عبد الرحمن، عن عمرو بن ابي عمرو، عن انس بن مالك رضى الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم خيبر، فلما فتح الله عليه الحصن ذكر له جمال صفية بنت حيى بن اخطب، وقد قتل زوجها، وكانت عروسا، فاصطفاها رسول الله صلى الله عليه وسلم لنفسه فخرج بها، حتى بلغنا سد الروحاء حلت، فبنى بها، ثم صنع حيسا في نطع صغير، ثم قال رسول الله صلى الله عليه وسلم " اذن من حولك ". فكانت تلك وليمة رسول الله صلى الله عليه وسلم على صفية، ثم خرجنا الى المدينة، قال فرايت رسول الله صلى الله عليه وسلم يحوي لها وراءه بعباءة، ثم يجلس عند بعيره فيضع ركبته، فتضع صفية رجلها على ركبته، حتى تركب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2235
- Book Index
- 181
Grades
- -
