Loading...
Loading...
நூல்கள்
117 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு (இருள்) முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் (வெளிச்சம்) பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும...
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் மக்களில் ஒருவரிடம், ‘‘இன்னாரே! எழுந்து...
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் (ஒருவரிடம்), ‘‘இறங்கி நமக்காக மாவு...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப் பார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!...
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களிடம்...
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரி களின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக...
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று (மக்களி டம்) கூறினார்கள். அப்போது ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான்...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்ற...
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்க நாடினால் சஹர்வரை அவ்வாறு (செய்து விட்டு, சஹர்) செய்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். அப்போத...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள்மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூத...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘தொடர்நோன்பு நோற்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று இரண்டு முறை கூறினார்கள். ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்க...
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்பதாக இருந்தால், சஹர்வரை நோற்று(விட்டுப் பின்னர் சஹர் செய்து)கொள...
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், சல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களையும் அபுத் தர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவி...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடு...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘‘நற்செயல் களில் உங்களில் இயன்றதையே செய்யுங்...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமை யாக நோன்பு நோற்கமாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விடவே மாட்டார்கள்!” என்...
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டு விடுவார்கள்; அறவே இந்த மாதம் நோன்பை அவர்கள் அறவே விடமாட...
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான்...