Loading...

Loading...
நூல்கள்
௨௯ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப் படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவர் தாம் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறாரோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும். இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும்போது அறிவித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن يحيى بن سعيد، عن محمد بن ابراهيم، عن علقمة بن وقاص، قال سمعت عمر بن الخطاب رضى الله عنه يخطب قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " يا ايها الناس انما الاعمال بالنية وانما لامري ما نوى، فمن كانت هجرته الى الله ورسوله، فهجرته الى الله ورسوله، ومن هاجر الى دنيا يصيبها او امراة يتزوجها، فهجرته الى ما هاجر اليه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குச் சிறுதுடக்கு ஏற்பட் டால் நீங்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாத வரை உங்கள் தொழு கையை அல்லாஹ் ஏற்கமாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
حدثني اسحاق، حدثنا عبد الرزاق، عن معمر، عن همام، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا يقبل الله صلاة احدكم اذا احدث حتى يتوضا
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஸகாத்தைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது, “ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதும் ஒன்றுசேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது” என்று குறிப்பிட்டார்கள்.6 அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله الانصاري، حدثنا ابي، حدثنا ثمامة بن عبد الله بن انس، ان انسا، حدثه ان ابا بكر كتب له فريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم " ولا يجمع بين متفرق ولا يفرق بين مجتمع خشية الصدقة
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நஜ்த் பகுதியைச் சேர்ந்த) கிராம வாசி ஒருவர் தலைவிரிகோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நாளொன்றுக்கு) ஐவேளை தொழுகை கள் (உன்மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் தொழுது கொண்டால் தவிர” என்று சொன்னார்கள். அவர், “அல்லாஹ் என்மீது கடமையாக் கியுள்ள நோன்பு பற்றிக் கூறுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் (முழுவதும் நீ நோன்பு நோற்பது உன்மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் நோன்பு நோற்றால் தவிர” என்று சொன்னார்கள். தொடர்ந்து அவர், “அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் பற்றிக் கூறுங்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஸகாத் உள்பட) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், “உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன்மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என்மீது கடமையாக்கி யுள்ளவற்றில் எதையும் நான் குறைக்கவு மாட்டேன்” என்று கூறி(விட்டுத் திரும்பிச் செல்லலா)னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர் (தாம் கூறியபடி) உண்மையாக நடந்துகொண்டால் ‘வெற்றி யடைவார்’ அல்லது ‘இவர் (கூறியபடி) உண்மையாக நடந்து கொண்டால் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று கூறினார்கள்.7 அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்: நூற்று இருபது ஒட்டகங்கள் இருந்தால் மூன்று வயதுடைய இரு ஒட்டகங் கள் ஸகாத்தாக வழங்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் ஸகாத் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக அந்த (120) ஒட்டகங்களையும் (ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஓரிரு நாட்கள் இருக்கையில்) வேண்டுமென்றே அறுத்துவிட்டாலோ, அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, வேறு தந்திரங்களைக் கையாண்டாலோ அவர்மீது (ஸகாத்) கடமையாகாது.8 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن ابي سهيل، عن ابيه، عن طلحة بن عبيد الله، ان اعرابيا، جاء الى رسول الله صلى الله عليه وسلم ثاير الراس فقال يا رسول الله اخبرني ماذا فرض الله على من الصلاة فقال " الصلوات الخمس، الا ان تطوع شييا ". فقال اخبرني بما فرض الله على من الصيام قال " شهر رمضان، الا ان تطوع شييا ". قال اخبرني بما فرض الله على من الزكاة قال فاخبره رسول الله صلى الله عليه وسلم شرايع الاسلام. قال والذي اكرمك لا اتطوع شييا ولا انقص مما فرض الله على شييا. فقال رسول الله صلى الله عليه وسلم " افلح ان صدق ". او " دخل الجنة ان صدق ". وقال بعض الناس في عشرين وماية بعير حقتان. فان اهلكها متعمدا، او وهبها او احتال فيها فرارا من الزكاة، فلا شىء عليه
حدثني اسحاق، حدثنا عبد الرزاق، حدثنا معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " يكون كنز احدكم يوم القيامة شجاعا اقرع، يفر منه صاحبه فيطلبه ويقول انا كنزك. قال والله لن يزال يطلبه حتى يبسط يده فيلقمها فاه ". وقال رسول الله صلى الله عليه وسلم " اذا ما رب النعم لم يعط حقها، تسلط عليه يوم القيامة، تخبط وجهه باخفافها ". وقال بعض الناس في رجل له ابل، فخاف ان تجب عليه الصدقة، فباعها بابل مثلها، او بغنم، او ببقر، او بدراهم، فرارا من الصدقة بيوم، احتيالا فلا باس عليه، وهو يقول ان زكى ابله قبل ان يحول الحول بيوم او بسنة، جازت عنه
حدثني اسحاق، حدثنا عبد الرزاق، حدثنا معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " يكون كنز احدكم يوم القيامة شجاعا اقرع، يفر منه صاحبه فيطلبه ويقول انا كنزك. قال والله لن يزال يطلبه حتى يبسط يده فيلقمها فاه ". وقال رسول الله صلى الله عليه وسلم " اذا ما رب النعم لم يعط حقها، تسلط عليه يوم القيامة، تخبط وجهه باخفافها ". وقال بعض الناس في رجل له ابل، فخاف ان تجب عليه الصدقة، فباعها بابل مثلها، او بغنم، او ببقر، او بدراهم، فرارا من الصدقة بيوم، احتيالا فلا باس عليه، وهو يقول ان زكى ابله قبل ان يحول الحول بيوم او بسنة، جازت عنه
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயாரின் நேர்த்திக் கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்காக நீங்கள் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள்.12 “(ஒருவருக்குரிய) ஒட்டகங்களின் எண்ணிக்கை இருபதாகிவிட்டால் அதற்காக நான்கு ஆடுகள் (அவர் ஸகாத்) கொடுக்க வேண்டும். ஆனால், அவர் ஸகாத்தை இல்லாமல் செய்வதற்காகத் தந்திரமாகத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் ஓராண்டு முழுமையடைவதற்கு முன்பே அந்த ஒட்டகங்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, விற்றுவிட்டாலோ அவர்மீது (ஸகாத்) ஏதும் கடமையாகாது. அவ்வாறே அவற்றை(ச் செலவு) அழித்துவிட்டு அவர் இறந்துபோனாலும் அவரது (இந்தச்) சொத்தில் (ஸகாத்) ஏதும் கடமையாகாது” என்று சிலர் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابن عباس، انه قال استفتى سعد بن عبادة الانصاري رسول الله صلى الله عليه وسلم في نذر كان على امه، توفيت قبل ان تقضيه، فقال رسول الله صلى الله عليه وسلم " اقضه عنها ". وقال بعض الناس اذا بلغت الابل عشرين، ففيها اربع شياه، فان وهبها قبل الحول او باعها، فرارا واحتيالا لاسقاط الزكاة، فلا شىء عليه، وكذلك ان اتلفها فمات، فلا شىء في ماله
உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார் கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது நான் நாஃபிஉ அவர்களிடம், “ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் சகோதரியை மணமுடித்துவைப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.13 சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் தந்திரம் செய்து ‘ஷிஃகார்’ முறைப்படித் திருமணம் செய்துகொண்டால் அத்திருமணம் செல்லும்; ஆனால், (அதில் விதிக்கப்பட்ட) முன்நிபந்தனை செல்லாது. அதே நேரத்தில், தவணைமுறைத் திருமணம் (அல்முத்ஆ) செல்லாது; (அதில் விதிக்கப்படும்) முன்நிபந்தனையும் செல்லாது. வேறுசிலரோ, “தவணைமுறைத் திருமணமும் ‘ஷிஃகார்’ முறைத் திருமணமும் செல்லும்; ஆனால், (அவற்றில் விதிக்கப்படும்) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறுகின்றனர். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن عبيد الله، قال حدثني نافع، عن عبد الله رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم نهى عن الشغار. قلت لنافع ما الشغار قال ينكح ابنة الرجل وينكحه ابنته بغير صداق، وينكح اخت الرجل وينكحه اخته بغير صداق. وقال بعض الناس ان احتال حتى تزوج على الشغار، فهو جايز، والشرط باطل. وقال في المتعة النكاح فاسد، والشرط باطل. وقال بعضهم المتعة والشغار جايز، والشرط باطل
முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தவணைமுறைத் திருமணம் (நிகா ஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணைமுறைத் திருமணத்திற்கும் நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித் தார்கள்” என்று கூறினார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. “ஒரு மனிதர் தந்திரமாகத் தவணை முறைத் திருமணம் செய்தால் அத்திரு மணம் செல்லாது” என்று சிலர் கூறினர். வேறுசிலரோ, “அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப் பட்ட) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறினர். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن عبيد الله بن عمر، حدثنا الزهري، عن الحسن، وعبد الله، ابنى محمد بن علي عن ابيهما، ان عليا رضى الله عنه قيل له ان ابن عباس لا يرى بمتعة النساء باسا. فقال ان رسول الله صلى الله عليه وسلم نهى عنها يوم خيبر، وعن لحوم الحمر الانسية. وقال بعض الناس ان احتال حتى تمتع، فالنكاح فاسد. وقال بعضهم النكاح جايز والشرط باطل
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடை களை)த் தடுத்ததாகிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يمنع فضل الماء ليمنع به فضل الكلا
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின்போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.16 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، عن مالك، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن النجش
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரங்களில் ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ வியாபாரத்தின்போது ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவிடு” என்று சொன்னார்கள்.17 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثنا مالك، عن عبد الله بن دينار، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رجلا، ذكر للنبي صلى الله عليه وسلم انه يخدع في البيوع فقال " اذا بايعت فقل لا خلابة
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண் களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நீதியோடு நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான (வேறு) பெண்களை மணந்துகொள்ளுங்கள்” என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அநாதைப் பெண் ஒருத்தி தன் காப்பாளரின் பாதுகாப்பில் இருந்துவருவாள். அவர் அப்பெண்ணின் செல்வத்தை யும் அழகையும் கண்டு ஆசைப்பட்டு அவளைப் போன்ற பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் மணக்கொடையை விட மிகக் குறைந்த அளவு மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். அப்போதுதான், முழுமையான மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அப்பெண் களுக்கு நீங்கள் நீதி செலுத்தாத வரை அவர்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது என அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. அதன் பின்னரும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தீர்ப்புக் கேட்டனர். அப்போதுதான் “(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி தீர்ப்பு வழங்கும்படி கேட்கிறார்கள்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். தொடர்ந்து அறிவிப்பாளர் இந்த ஹதீஸின் முழுத் தொடரையும் கூறினார்.18 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، حدثنا شعيب، عن الزهري، قال كان عروة يحدث انه سال عايشة {وان خفتم ان لا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء}. قالت هي اليتيمة في حجر وليها، فيرغب في مالها وجمالها، فيريد ان يتزوجها بادنى من سنة نسايها، فنهوا عن نكاحهن، الا ان يقسطوا لهن في اكمال الصداق، ثم استفتى الناس رسول الله صلى الله عليه وسلم بعد فانزل الله {ويستفتونك في النساء} فذكر الحديث
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن عبد الله بن دينار، عن عبد الله بن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم " لكل غادر لواء يوم القيامة يعرف به
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்குச் சாதுரியம்மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுரியமான வரிடமிருந்து) செவியுறுவதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதளவை (அவருக்குரியது) என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகின்றேனோ அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، عن سفيان، عن هشام، عن عروة، عن زينب ابنة ام سلمة، عن ام سلمة، عن النبي صلى الله عليه وسلم قال " انما انا بشر، وانكم تختصمون، ولعل بعضكم ان يكون الحن بحجته من بعض، واقضي له على نحو ما اسمع، فمن قضيت له من حق اخيه شييا، فلا ياخذ، فانما اقطع له قطعة من النار
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவள் மௌனம் சாதிப்பதே (அவள் சம்மதிக்கிறாள் என்பதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள்.23 ஆனால், சிலர் கூறுகின்றனர்: ஒரு கன்னிப்பெண்ணிடம் அனுமதியும் கோராமல், (முறைப்படி) அவள் திருமணமும் செய்துகொள்ளப்படாமல் இருக்கும்போது, ஒருவர் தந்திரமாக இரண்டு பொய் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தி அவளை அவளது இசைவுடன் தாம் மணந்துகொண்டதாக வாதிட்டார். நீதிபதியும் (அதை உண்மை என்று நம்பி) அவளது திருமணத்தை உறுதிப்படுத்தினார். இந்தச் சாட்சியம் பொய் என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இந்நிலையில் அவளுடன் அவன் தாம்பத்திய உறவு கொள்வதில் தவறில்லை. இது செல்லத் தகுந்த திருமணமே (என்று அந்தச் சிலர் கூறுகின்றனர்). அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا هشام، حدثنا يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا تنكح البكر حتى تستاذن، ولا الثيب حتى تستامر ". فقيل يا رسول الله كيف اذنها قال " اذا سكتت ". وقال بعض الناس ان لم تستاذن البكر ولم تزوج. فاحتال رجل فاقام شاهدى زور انه تزوجها برضاها، فاثبت القاضي نكاحها، والزوج يعلم ان الشهادة باطلة، فلا باس ان يطاها، وهو تزويج صحيح
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜஅஃபர் அவர்களுடைய மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். ஆகவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (புதல்வர் யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான் (ரஹ்), முஜம்மிஉ (ரஹ்) ஆகிய இரு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பிவைத்தார். அவர்கள் இருவரும், “(பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்துவைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அத்திரு மணத்தை ரத்துச் செய்தார்கள்” என்று கூறியனுப்பினார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர்-ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்ததை நான் செவியுற்றேன்.24 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا يحيى بن سعيد، عن القاسم، ان امراة، من ولد جعفر تخوفت ان يزوجها وليها وهى كارهة فارسلت الى شيخين من الانصار عبد الرحمن ومجمع ابنى جارية قالا فلا تخشين، فان خنساء بنت خذام انكحها ابوها وهى كارهة، فرد النبي صلى الله عليه وسلم ذلك. قال سفيان واما عبد الرحمن فسمعته يقول عن ابيه ان خنساء
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள். மக்கள், “எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனமாயிருப்பதே (அதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள். ஆனால், சிலர் கூறுகின்றனர்: இரு பொய் சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதர், கன்னிகழிந்த பெண்ணின் உத்தரவுப்படி அவளைத் தாம் மண முடித்துக்கொண்டதாகக் கூறி தந்திரம் செய்தார். (இவ்வழக்கை விசாரித்த நீதிபதியும்) அவளை அவர் மணமுடித்துக்கொண்டதாக உறுதி செய்தார். ஆனால், அவளைத் தாம் ஒருபோதும் மணமுடிக்கவில்லை என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இப்போது இத்திருமணம் அவனுக்குச் செல்லும். அவளுடன் அவன் தங்கியிருப்பதில் குற்றமில்லை. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا شيبان، عن يحيى، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تنكح الايم حتى تستامر، ولا تنكح البكر حتى تستاذن ". قالوا كيف اذنها قال " ان تسكت ". وقال بعض الناس ان احتال انسان بشاهدى زور على تزويج امراة ثيب بامرها، فاثبت القاضي نكاحها اياه، والزوج يعلم انه لم يتزوجها قط، فانه يسعه هذا النكاح، ولا باس بالمقام له معها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோர வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், “கன்னிப்பெண் (வெளிப்படையாகத் தன் இசைவைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே அவளுடைய அனுமதி” என்று சொன்னார்கள்.25 சிலர் கூறுகின்றனர்: ஒருவர் ஓர் அநாதைச் சிறுமியை, அல்லது கன்னிப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். இந்நிலையில், அவர் தந்திரமாக இரு பொய் சாட்சிகளை அழைத்து வந்து, தாம் அவளை மணமுடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பின்னர் அந்த அநாதைச் சிறுமி பருவம் எய்தினாள்; (அந்தத் திருமணத்தை) ஏற்றும்கொண்டாள். நீதிபதியோ பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அது பொய் என்று அந்தக் கணவனுக்கு (நன்றாகவே) தெரியும். இந்நிலையில் (அவளுடன்) தாம்பத்திய உறவு கொள்ள அவனுக்கு அனுமதி உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، عن ابن ابي مليكة، عن ذكوان، عن عايشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم " البكر تستاذن ". قلت ان البكر تستحيي قال " اذنها صماتها ". وقال بعض الناس ان هوي رجل جارية يتيمة او بكرا، فابت فاحتال فجاء بشاهدى زور على انه تزوجها، فادركت فرضيت اليتيمة، فقبل القاضي شهادة الزور، والزوج يعلم ببطلان ذلك، حل له الوطء
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்ப மானவையாக இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர் களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒருநாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, “நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். ஆதலால், ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான், வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டுவாசலில் இருந்தபோது உங்களுக்குப் பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர் களா?” என்று கேட்டேன். அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அப்படியானால், இது என்ன வாடை?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்” என்று சொன்னார்கள். நான், “அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (ஆகவேதான், தேனில் வாடை ஏற்பட்டுவிட்டதுபோலும்)” என்று சொன்னேன். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துவதற்குத் தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! நபி (ஸல்) அவர் களை, அதை அருந்தவிடாமல் நாம் தடுத்துவிட்டோமே!” என்று (வருத்தத்து டன்) கூறுவார்கள். நான் அவரிடம், “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)” என்று சொல்வேன்.26 அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلواء، ويحب العسل، وكان اذا صلى العصر اجاز على نسايه فيدنو منهن، فدخل على حفصة، فاحتبس عندها اكثر مما كان يحتبس، فسالت عن ذلك فقيل لي اهدت امراة من قومها عكة عسل، فسقت رسول الله صلى الله عليه وسلم منه شربة. فقلت اما والله لنحتالن له. فذكرت ذلك لسودة قلت اذا دخل عليك فانه سيدنو منك فقولي له يا رسول الله اكلت مغافير فانه سيقول لا. فقولي له ما هذه الريح وكان رسول الله صلى الله عليه وسلم يشتد عليه ان توجد منه الريح، فانه سيقول سقتني حفصة شربة عسل. فقولي له جرست نحله العرفط. وساقول ذلك، وقوليه انت يا صفية. فلما دخل على سودة، قلت تقول سودة والذي لا اله الا هو لقد كدت ان ابادره بالذي قلت لي، وانه لعلى الباب فرقا منك، فلما دنا رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله اكلت مغافير قال " لا ". قلت فما هذه الريح قال " سقتني حفصة شربة عسل ". قلت جرست نحله العرفط. فلما دخل على قلت له مثل ذلك. ودخل على صفية فقالت له مثل ذلك. فلما دخل على حفصة قالت له يا رسول الله الا اسقيك منه قال " لا حاجة لي به ". قالت تقول سودة سبحان الله لقد حرمناه. قالت قلت لها اسكتي