Loading...
Loading...
நூல்கள்
187 ஹதீஸ்கள்
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனை கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்...
உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப் பட்டன. அவற்றில் கறுப்புநிறக் கம்பளி ஆடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணி விப்போம் என்ற...
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆண்கள் (தமது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.66 அத்தியாயம் :
(பராஉ ர) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தார்கள். சிவப்புநிற அங்கி ஒன்றில் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். (அந்த ஆடையில்) நபி (ஸல்) அவ...
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோயாளியை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்கமுகல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கரு...
சயீத் அபூமஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘ஆம் (தொழுதுவந்தார்கள்)” என்று சொன்னார்கள்.69 அத்தியாயம் :
உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த் தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்க வில்லை” என்று கூறி...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘(இஹ்ர...
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (இஹ்ராமின்போது) கீழங்கி இல்லாத வர் முழுக்கால் சட்டை அணிந்துகொள் ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்துகொள்ளட்டும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும், தலைவாரிக் கொள்ளும்போதும், காலணி அணிந்துகொள்ளும்போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.73 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது கால் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதல் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன. அத்தியாயம் :
ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணி களை எங்களுக்குக் காட்டினார்கள். (பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘இதுதான் நபி (...
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத் தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்த தண்ணீரை எடுத்த...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டி னார்கள்.76 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத் தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழு வார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன்மீது அமர் வார்கள். மக்கள் நபி (ஸ...
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும்...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பொன் மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய...