Loading...
Loading...
நூல்கள்
70 ஹதீஸ்கள்
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் ‘இளைஞர்கள் சிலரை’ அல்லது ‘மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்துகொண்ட...
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கோழி (இறைச்சி) உண்பதை நான் பார்த்தேன். இதை ஸஹ்தம் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்துகொண்டிருந் தோம்.- ‘ஜர்ம்’ கூட்டத்தைச் சேர்ந்த எங்களுக்கும் இந்த (அஷ்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (ந...
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் நாங்கள் குதிரை யொன்றை அறுத்து உண்டோம்.38 இதை ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.39 இதை முஹம்மத் பின் அலீ...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளின் இறைச் சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.41 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டா மெனத் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனி(த் தவணை முறைத் திருமணமான) ‘முத்ஆ’ செய்யக் கூடாது என்றும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.42...
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச் சியை உண்ண வேண்டாமென்று தடை செய்தார்கள். குதிரைகளின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.43 அத்தியாயம் :
பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.44 அத்தியாயம் :
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அ...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டு விட்டன” என்று சொன்னார். பிறகு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்ட...
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே” என்று கேட்டேன். அதற்கு அ...
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.46 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்த ஆடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘‘இதன் தோலால் நீங்கள் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இது செத்துப்போன...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்துப்போன பெட்டை வெள்ளாடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘‘இதன் தோலால் பயன் அடைவதால் இதன் உரிமையாளர்மீது குற்றம் ஏதுமில்லை” என்று சொன்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வழியில் (அறப் போரில்) காயப்படுத்தப்பட்டவர் தமது காயத்தில் இரத்தம் வழிய, மறுமை நாளில் (இறைவன் முன்னால்) வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இர...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்...
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப் பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அ...