Loading...

Loading...
நூல்கள்
௮௪ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.2 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن شيبان، عن يحيى، عن ابي سلمة، قال اخبرتني عايشة، وابن، عباس رضى الله عنهم قالا لبث النبي صلى الله عليه وسلم بمكة عشر سنين ينزل عليه القران وبالمدينة عشر سنين
ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.2 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن شيبان، عن يحيى، عن ابي سلمة، قال اخبرتني عايشة، وابن، عباس رضى الله عنهم قالا لبث النبي صلى الله عليه وسلم بمكة عشر سنين ينزل عليه القران وبالمدينة عشر سنين
அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம், ‘‘இவர் யார் (தெரியுமா)?” என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றபின், உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும்வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த (வானவர்) ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அத் தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், ‘‘இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا معتمر، قال سمعت ابي، عن ابي عثمان، قال انبيت ان جبريل، اتى النبي صلى الله عليه وسلم وعنده ام سلمة فجعل يتحدث فقال النبي صلى الله عليه وسلم لام سلمة " من هذا ". او كما قال قالت هذا دحية. فلما قام قالت والله ما حسبته الا اياه حتى سمعت خطبة النبي صلى الله عليه وسلم يخبر خبر جبريل او كما قال، قال ابي قلت لابي عثمان ممن سمعت هذا. قال من اسامة بن زيد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثنا سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " ما من الانبياء نبي الا اعطي ما مثله امن عليه البشر، وانما كان الذي اوتيت وحيا اوحاه الله الى فارجو ان اكون اكثرهم تابعا يوم القيامة
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து ‘வஹீ’ (வேதஅறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேதஅறிவிப்பு (மற்றக் காலங்களில் அருளப்பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.4 அத்தியாயம் :
حدثنا عمرو بن محمد، حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابي، عن صالح بن كيسان، عن ابن شهاب، قال اخبرني انس بن مالك رضى الله عنه ان الله، تعالى تابع على رسوله صلى الله عليه وسلم قبل وفاته حتى توفاه اكثر ما كان الوحى، ثم توفي رسول الله صلى الله عليه وسلم بعد
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘ஓர் இரவு’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக்கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். (அதனால்தான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்க வில்லை)” என்று கூறினாள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின்மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:1-3 ஆகிய) வசனங் களை அருளினான்.5 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن الاسود بن قيس، قال سمعت جندبا، يقول اشتكى النبي صلى الله عليه وسلم فلم يقم ليلة او ليلتين فاتته امراة فقالت يا محمد ما ارى شيطانك الا قد تركك، فانزل الله عز وجل {والضحى * والليل اذا سجى * ما ودعك ربك وما قلى}
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் பின் ஸாபித், சயீத் பின் அல்ஆஸ், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும் உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரியான ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாத குறைஷியரான மற்ற மூவரிடமும்), ‘‘நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபிமொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால், குறைஷியரின் மொழி வழக்கிலேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது” என்று சொன்னார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர்.6 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، حدثنا شعيب، عن الزهري، واخبرني انس بن مالك، قال فامر عثمان زيد بن ثابت وسعيد بن العاص وعبد الله بن الزبير وعبد الرحمن بن الحارث بن هشام ان ينسخوها، في المصاحف وقال لهم اذا اختلفتم انتم وزيد بن ثابت في عربية من عربية القران فاكتبوها بلسان قريش، فان القران انزل بلسانهم ففعلوا
ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) யஅலா பின் உமைய்யா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என்று ஆசையாக உள்ளது)” என்று கூறுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஜிஅரானா’ எனும் இடத்தில் தமக்கு மேலே துணியொன்று நிழலிட்டுக்கொண்டிருக்கத் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது நறுமணம் பூசிய ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசப்பட்ட அங்கியால் (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (மௌனத்துடன்) காத்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘வஹீ’ (வேத அறிவிப்பு) வந்தது. உமர் (ரலி) அவர்கள் யஅலா அவர்களை, ‘‘இங்கு வாருங்கள்” என்று சைகையால் அழைத்தார்கள். (என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) நான் சென்றேன். (நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காகக் கட்டப்பட்டிருந்த துணிக்குள்) நான் எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் (வஹீயின் கனத்தால்) முனகியவர்களாக சிறிது நேரம் காணப்பட்டார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்தச் சிரம நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்றுமுன் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். அந்த மனிதரைத் தேடி அவரை நபி (ஸல்) அவர்களிடம் (அழைத்துக்) கொண்டுவரப்பட்டது. அவரிடம், ‘‘உம்மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவிக்கொள்க! (தைக்கப்பட்ட) அங்கியைக் களைந்துகொள்க! பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க!” என்று சொன்னார்கள்.7 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا همام، حدثنا عطاء،. وقال مسدد حدثنا يحيى، عن ابن جريج، قال اخبرني عطاء، قال اخبرني صفوان بن يعلى بن امية، ان يعلى، كان يقول ليتني ارى رسول الله صلى الله عليه وسلم حين ينزل عليه الوحى، فلما كان النبي صلى الله عليه وسلم بالجعرانة وعليه ثوب قد اظل عليه ومعه ناس من اصحابه اذ جاءه رجل متضمخ بطيب فقال يا رسول الله كيف ترى في رجل احرم في جبة بعد ما تضمخ بطيب فنظر النبي صلى الله عليه وسلم ساعة فجاءه الوحى فاشار عمر الى يعلى ان تعال، فجاء يعلى فادخل راسه فاذا هو محمر الوجه يغط كذلك ساعة ثم سري عنه فقال " اين الذي يسالني عن العمرة انفا ". فالتمس الرجل فجيء به الى النبي صلى الله عليه وسلم فقال " اما الطيب الذي بك فاغسله ثلاث مرات، واما الجبة فانزعها ثم اصنع في عمرتك كما تصنع في حجك
(வேதஅறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: யமாமா போர் நடைபெற்றபின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப் பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்றுசேர்க்க உத்தரவிட வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?” என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இந்த விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர் (ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) (பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), ‘‘(ஸைதே!) நீங்கள் புத்திசாóயான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக ‘வஹீ’ (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன்வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூகுஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் அவற்றை நான் பெறவில்லை. (அவை:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் அவர் இருக்கின்றார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் அதிபதியாயிருக்கின்றான். (9:128, 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களது இறப்பிற்குப்) பிறகு உமர் (ரலி) அவர்களுடைய புதல்வி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.8 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். அப்போது (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் ஆதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கு ஷாம்வாசிகளை ஆயத்தப்படுத்தியிருந்தார்கள்.9 (இப்போரில் கலந்துகொண்டிருந்த) ஹ’தைஃபா (ரலி) அவர்களை, குர்ஆன் ஓதும் முறைகளில் மக்களிடையே எழுந்த கருத்து வேறுபாடு அதிர்ச்சிக் குள்ளாக்கியது.10 ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘யூதர்களும் கிறித்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டதுபோல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!” என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி, ‘‘தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங் கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்துவிடுகிறோம்” என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, ‘‘நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே அருளப்பெற்றது” என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்த) அந்த குர்ஆன் பதிவைப் பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்துவிடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا ابراهيم، حدثنا ابن شهاب، ان انس بن مالك، حدثه ان حذيفة بن اليمان قدم على عثمان وكان يغازي اهل الشام في فتح ارمينية واذربيجان مع اهل العراق فافزع حذيفة اختلافهم في القراءة فقال حذيفة لعثمان يا امير المومنين ادرك هذه الامة قبل ان يختلفوا في الكتاب اختلاف اليهود والنصارى فارسل عثمان الى حفصة ان ارسلي الينا بالصحف ننسخها في المصاحف ثم نردها اليك فارسلت بها حفصة الى عثمان فامر زيد بن ثابت وعبد الله بن الزبير وسعيد بن العاص وعبد الرحمن بن الحارث بن هشام فنسخوها في المصاحف وقال عثمان للرهط القرشيين الثلاثة اذا اختلفتم انتم وزيد بن ثابت في شىء من القران فاكتبوه بلسان قريش فانما نزل بلسانهم ففعلوا حتى اذا نسخوا الصحف في المصاحف رد عثمان الصحف الى حفصة وارسل الى كل افق بمصحف مما نسخوا وامر بما سواه من القران في كل صحيفة او مصحف ان يحرق
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர் களில் சிலர் (இறைவழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.(33:23) உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம்.11 அத்தியாயம் :
قال ابن شهاب واخبرني خارجة بن زيد بن ثابت، سمع زيد بن ثابت، قال فقدت اية من الاحزاب حين نسخنا المصحف قد كنت اسمع رسول الله صلى الله عليه وسلم يقرا بها فالتمسناها فوجدناها مع خزيمة بن ثابت الانصاري {من المومنين رجال صدقوا ما عاهدوا الله عليه} فالحقناها في سورتها في المصحف
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற ‘வஹீ’ (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!” என்று சொன்னார்கள். ஆகவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை அபூகுஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள்மீது அதிகப் பரிவும் கருணையும் உடையோராகவும் அவர் இருக்கின்றார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் அதிபதியாயிருக்கின்றான்.(9:128,129)13 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، ان ابن السباق، قال ان زيد بن ثابت قال ارسل الى ابو بكر رضى الله عنه قال انك كنت تكتب الوحى لرسول الله صلى الله عليه وسلم فاتبع القران. فتتبعت حتى وجدت اخر سورة التوبة ايتين مع ابي خزيمة الانصاري لم اجدهما مع احد غيره {لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم} الى اخره
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘ஸைதை அழைத்துவாருங்கள். அவர் தம்முடன் ‘பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு’ அல்லது ‘அகலமான எலும்பு, மைக்கூடு’ ஆகியவற்றை எடுத்துவரட்டும்” என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் வந்தபோது,) ‘‘இந்த (4:95ஆவது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களது முதுகுக்குப் பின்னால், கண்பார்வையற்றவரான அம்ர் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகின்றீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!” என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில், ‘தக்க காரணமின்றி’ எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) அருளப்பெற்றது.14 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء، قال لما نزلت {لا يستوي القاعدون من المومنين والمجاهدون في سبيل الله} قال النبي صلى الله عليه وسلم " ادع لي زيدا وليجي باللوح والدواة والكتف او الكتف والدواة ثم قال " اكتب لا يستوي القاعدون " وخلف ظهر النبي صلى الله عليه وسلم عمرو بن ام مكتوم الاعمى قال يا رسول الله فما تامرني فاني رجل ضرير البصر فنزلت مكانها {لا يستوي القاعدون من المومنين} في سبيل الله {غير اولي الضرر}
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுக் கொடுத்தார்கள். அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். (நான் கேட்கக் கேட்க) எனக்கு அவர்கள் அதிகப் படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழிவழக்குகள் அளவுக்கு வந்து நின்றது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثني الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، قال حدثني عبيد الله بن عبد الله، ان ابن عباس رضى الله عنهما حدثه ان رسول الله صلى الله عليه وسلم قال " اقراني جبريل على حرف فراجعته، فلم ازل استزيده ويزيدني حتى انتهى الى سبعة احرف
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக் கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக்கொண்டேன். (அவர் தொழுது முடித்த) பிறகு அவரது மேல்துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘‘நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக்காண்பித்தது யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இதை எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் ஓதிக்காண்பித்தார்கள்” என்று பதிலளித்தார். உடனே நான், ‘‘நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்” என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழிவழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை விடுங்கள்!” என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), ‘‘ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக்காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள். பிறகு (என்னைப் பார்த்து), ‘‘உமரே, ஓதுங்கள்!” என்று சொன்னார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, உங்களுக்கு அதில் எளிதானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.17 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثني الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، قال حدثني عروة بن الزبير، ان المسور بن مخرمة، وعبد الرحمن بن عبد القاري، حدثاه انهما، سمعا عمر بن الخطاب، يقول سمعت هشام بن حكيم، يقرا سورة الفرقان في حياة رسول الله صلى الله عليه وسلم فاستمعت لقراءته فاذا هو يقرا على حروف كثيرة لم يقرينيها رسول الله صلى الله عليه وسلم فكدت اساوره في الصلاة فتصبرت حتى سلم فلببته بردايه فقلت من اقراك هذه السورة التي سمعتك تقرا. قال اقرانيها رسول الله صلى الله عليه وسلم. فقلت كذبت فان رسول الله صلى الله عليه وسلم قد اقرانيها على غير ما قرات، فانطلقت به اقوده الى رسول الله صلى الله عليه وسلم فقلت اني سمعت هذا يقرا بسورة الفرقان على حروف لم تقرينيها. فقال رسول الله صلى الله عليه وسلم " ارسله اقرا يا هشام ". فقرا عليه القراءة التي سمعته يقرا. فقال رسول الله صلى الله عليه وسلم " كذلك انزلت ". ثم قال " اقرا يا عمر ". فقرات القراءة التي اقراني، فقال رسول الله صلى الله عليه وسلم " كذلك انزلت، ان هذا القران انزل على سبعة احرف فاقرءوا ما تيسر منه
யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் இருந்துகொண்டிருந்தேன். அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, ‘‘(இறந்தவருக்கு அணிவிக்கப்படும்) ‘கஃபன்’ துணியில் சிறந்தது எது? (வெள்ளை நிறமா? மற்ற நிறமா?)” என்று கேட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அடப் பாவமே! (நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்த கஃபன் துணியில் அடக்கப்பட்டாலும்) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘இறைநம்பிக்கையாளர் களின் அன்னையே! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்?” என்று கூறினார். (அன்னை) அவர்கள், ‘ஏன்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அதை (முன்மாதிரியாக)க் கொண்டு நான் குர்ஆனை (வரிசைப்படி) தொகுக்க வேண்டும். ஏனெனில், (தற்சமயம்) வரிசைப் பிரகாரம் தொகுக்கப்படாமல்தான் குர்ஆன் ஓதப்பட்டுவருகிறது” என்று சொன்னார். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில்) எதை நீங்கள் முதலில் ஓதினால் (என்ன? எதை அடுத்து ஓதினால்) என்ன கஷ்டம் (ஏற்பட்டுவிடப்போகிறது)?” என்று கேட்டார்கள். ‘முஃபஸ்ஸல்’ (எனும் ஓரளவு சிறிய) அத்தியாயங்களில்19 உள்ள ஒன்றுதான் முதன்முதலில் அருளப்பட்டது; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது.20 அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி (அதன் நம்பிக்கைள்மீது திருப்தியடையத் தொடங்கி)யபோது ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) ஹராம் (விலக்கப்பட்டவை) குறித்த வசனங்கள் அருளப்பட்டன. எடுத்த எடுப்பிலேயே, ‘‘நீங்கள் மது அருந்தாதீர்கள்” என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள், ‘‘நாங்கள் ஒருபோதும் மதுவைக் கைவிடமாட்டோம்” என்று கூறியிருப்பார் கள். அல்லது, ‘‘விபசாரம் செய்யாதீர்கள்” என்று (முதன்முதலில்) வசனம் அருளப்பட்டிருக்குமானால், நிச்சயம் அவர்கள், ‘‘நாங்கள் ஒருபோதும் விபசாரத்தைக் கைவிடமாட்டோம்” என்று கூறியிருப்பார்கள். (ஆகவேதான் அல்லாஹ், படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, ‘‘(இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில்) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மேலும், அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46ஆவது) வசனம் அருளப்பெற்றது. (சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம்பெற்றுள்ள) அல்பகரா (2ஆவது) அத்தியாயமும், அந்நிசா (4ஆவது) அத்தியாயமும் நான் (மதீனாவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய மனைவியாக) இருந்தபோதுதான் அருளப்பெற்றன என்று கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த அந்த குர்ஆன் பிரதியை (இராக் நாட்டவரான) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال واخبرني يوسف بن ماهك، قال اني عند عايشة ام المومنين رضى الله عنها اذ جاءها عراقي فقال اى الكفن خير قالت ويحك وما يضرك قال يا ام المومنين اريني مصحفك. قالت لم قال لعلي اولف القران عليه فانه يقرا غير مولف. قالت وما يضرك ايه قرات قبل، انما نزل اول ما نزل منه سورة من المفصل فيها ذكر الجنة والنار حتى اذا ثاب الناس الى الاسلام نزل الحلال والحرام، ولو نزل اول شىء لا تشربوا الخمر. لقالوا لا ندع الخمر ابدا. ولو نزل. لا تزنوا. لقالوا لا ندع الزنا ابدا. لقد نزل بمكة على محمد صلى الله عليه وسلم واني لجارية العب {بل الساعة موعدهم والساعة ادهى وامر} وما نزلت سورة البقرة والنساء الا وانا عنده. قال فاخرجت له المصحف فاملت عليه اى السور
அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம் (ஆகிய 17, 18, 19ஆம்) அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், ‘‘இவை அதிசயமான முதல்தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய தொடக்கக் கால அத்தியாயங்களில் அடங்கும்” என்று குறிப்பிட்டார்கள்.21 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن ابي اسحاق، قال سمعت عبد الرحمن بن يزيد، سمعت ابن مسعود، يقول في بني اسراييل والكهف ومريم وطه والانبياء انهن من العتاق الاول وهن من تلادي
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பே கற்றுக்கொண்டேன்.22 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، انبانا ابو اسحاق، سمع البراء رضى الله عنه قال تعلمت {سبح اسم ربك} قبل ان يقدم النبي صلى الله عليه وسلم
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் கற்றுள்ளேன்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இதைக் கூறிய) பிறகு, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்து (தமது இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களுடன் அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள். (சிறிது நேரம் கழித்து) அல்கமா (ரஹ்) அவர்கள் வெளியே வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் அது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அவை, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தொகுத்துவைத்துள்ள) குர்ஆன் பிரதியின்படி ஆரம்ப இருபது ‘முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களாகும். அவற்றின் கடைசி அத்தியாயங்கள் ‘ஹாமீம்’ அத்தியாயங்களாகும். ‘ஹாமீம் அத்துகான்’ மற்றும் ‘அம்ம யத்தசாஅலூன’ ஆகியனவும் அவற்றில் அடங்கும்” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن شقيق، قال قال عبد الله قد علمت النظاير التي كان النبي صلى الله عليه وسلم يقروهن اثنين اثنين في كل ركعة. فقام عبد الله ودخل معه علقمة وخرج علقمة فسالناه فقال عشرون سورة من اول المفصل على تاليف ابن مسعود اخرهن الحواميم حم الدخان وعم يتساءلون
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர் களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமளானின் ஒவ்வோர் இரவும் -ரமளான் முடியும்வரை- நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு) ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் நல்லவற்றை வாரி வழங்குவார்கள்.25 அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا ابراهيم بن سعد، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس رضى الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم اجود الناس بالخير، واجود ما يكون في شهر رمضان لان جبريل كان يلقاه في كل ليلة في شهر رمضان حتى ينسلخ يعرض عليه رسول الله صلى الله عليه وسلم القران، فاذا لقيه جبريل كان اجود بالخير من الريح المرسلة
حدثنا موسى بن اسماعيل، عن ابراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن عبيد بن السباق، ان زيد بن ثابت رضى الله عنه قال ارسل الى ابو بكر مقتل اهل اليمامة فاذا عمر بن الخطاب عنده قال ابو بكر رضى الله عنه ان عمر اتاني فقال ان القتل قد استحر يوم اليمامة بقراء القران واني اخشى ان يستحر القتل بالقراء بالمواطن، فيذهب كثير من القران واني ارى ان تامر بجمع القران. قلت لعمر كيف تفعل شييا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال عمر هذا والله خير. فلم يزل عمر يراجعني حتى شرح الله صدري لذلك، ورايت في ذلك الذي راى عمر. قال زيد قال ابو بكر انك رجل شاب عاقل لا نتهمك، وقد كنت تكتب الوحى لرسول الله صلى الله عليه وسلم فتتبع القران فاجمعه فوالله لو كلفوني نقل جبل من الجبال ما كان اثقل على مما امرني من جمع القران قلت كيف تفعلون شييا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال هو والله خير فلم يزل ابو بكر يراجعني حتى شرح الله صدري للذي شرح له صدر ابي بكر وعمر رضى الله عنهما فتتبعت القران اجمعه من العسب واللخاف وصدور الرجال حتى وجدت اخر سورة التوبة مع ابي خزيمة الانصاري لم اجدها مع احد غيره {لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم} حتى خاتمة براءة، فكانت الصحف عند ابي بكر حتى توفاه الله ثم عند عمر حياته ثم عند حفصة بنت عمر رضى الله عنه