ஹதீஸ்கள்
#4985
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) யஅலா பின் உமைய்யா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என்று ஆசையாக உள்ளது)” என்று கூறுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஜிஅரானா’ எனும் இடத்தில் தமக்கு மேலே துணியொன்று நிழலிட்டுக்கொண்டிருக்கத் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது நறுமணம் பூசிய ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசப்பட்ட அங்கியால் (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (மௌனத்துடன்) காத்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘வஹீ’ (வேத அறிவிப்பு) வந்தது. உமர் (ரலி) அவர்கள் யஅலா அவர்களை, ‘‘இங்கு வாருங்கள்” என்று சைகையால் அழைத்தார்கள். (என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) நான் சென்றேன். (நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காகக் கட்டப்பட்டிருந்த துணிக்குள்) நான் எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் (வஹீயின் கனத்தால்) முனகியவர்களாக சிறிது நேரம் காணப்பட்டார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்தச் சிரம நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்றுமுன் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். அந்த மனிதரைத் தேடி அவரை நபி (ஸல்) அவர்களிடம் (அழைத்துக்) கொண்டுவரப்பட்டது. அவரிடம், ‘‘உம்மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவிக்கொள்க! (தைக்கப்பட்ட) அங்கியைக் களைந்துகொள்க! பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க!” என்று சொன்னார்கள்.7 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #4985
- Book Index
- 7
Grades
- -